அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப் பெயரால்!
1) எல்லாப் புகழும் அனைத்துலகையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய அல்லாஹ்வுக்கே!
2) அவன் மாபெரும் கருணையாளன். தனிப் பெரும் கிருபையாளன்.
3) கூலி கொடுக்கும் நாளின் அதிபதி.
4) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.
5) எங்களை நீ நேரான வழியில் செலுத்துவாயாக!
6) (அது) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி.
7) உனது கோபத்திற்கு ஆளாகாத மற்றும் நெறிகெட்டுப் போகாதவர்களின் வழி!
லா இலாஹ இல்லல்லாஹ{ முஹம்மதுர் ரஸ_லுல்லாஹ் (இதன் பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும் முஹம்மத் நபி அல்லாஹ்வின் தூதர் என்பதாகும். ஒரு மனிதன் இஸ்லாத்தில் சேர விரும்பினால், இதனை மொழிந்து அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் முஹம்மத் நபி மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.) எனும் ஏகத்துவக் கலிமாவை மொழிந்து ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோமே அந்த அல்லாஹ் தான் அகிலம் முழுவதையும் படைத்து பரிபாலித்துக் காத்து வருபவன். அவன் இணையிலா இறைவன். எல்லாப் புகழுக்கும் உரியவன். ஆட்சியதிகாரம் முழுவதும் அவன் கைவசமே உள்ளது. அப்படிப்பட்ட இறைவனைத் தொழுவது - அவனை மட்டுமே தொழுவது நமது கடமை ஆகும்.
‘ பேரண்டம் முழுவதையும் படைத்துப் பரிபாலிப்பவனாகிய எனக்கே எல்லாப் புகழும்’ என்று தன்னிலை விதியில் சொல்லாமல் படர்க்கை முறையில் கூறப்பட்டிருப்பது ஏன்?’ என்று ஒரு கேள்வி எழலாம்.
பதில் இதுதான்: அல்லாஹ் அடிப்படை நெறி ஒன்றை நமக்குக்; கற்றுத் தருகிறான்:"என்னுடைய அடியார்களே! நான் வழங்கும் அருட்கொடைகளுக்காகவும் உதவிகளுக்காகவும் எனக்கு நீங்கள் நன்றி செலுத்த நாடினால் எனது மகத்துவத்தையும் மாண்பையும் போற்றிப்புகழ வேண்டுமானால் அல் ஹம்து லில்லாஹி றப்பில் ஆல மீன் (அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று கூறுங்கள்"
எல்லாம் வல்ல இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் ரஹ்மத்-கருணையும் கிருபையும் எல்லாப் பொருள்களையும் வியாபித்துள் ளது. அவனது பேருபகாரம் எல்லா மனிதர்களையும் சூழ்ந்துள்ளது.
அத்தகைய கருணைமிக்க இறைவன் நம்மைப் படைத்து நமக்கு வாழ்வாதாரம் வழங்கியிருப்பதுடன்; நபிமார்களை அனுப்பித் தந்து வேதங்களையும் இறக்கியருளி நமக்கு நேர்வழி காட்டியிருப்பது இவ்வுலகிலும் மறுவுலகிலும் நாம் நற்பாக்கியம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆம், கருணைமிக்க அந்த இறைவன்தான் இவ்வுலகில் நாம் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு நாளை மறு உலகில் நற்கூலி வழங்கக் கூடியவனாக இருக்கிறான்.
- பிறகு அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தி நமது வணக்க வழிபாடுகளை அவனிடம் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்யும் முறையில் வாசகம் அமைந்துள்ளது.
(யா அல்லாஹ்!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். அதாவது உன்னை அல்லாத வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். வேறு எவரின் ஆணைகளுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். நாங்கள் அடிமைப்பட்டிருப்பது உனக்கு மட்டும்தான்., உன்னை அல்லாது வேறு எவருக்கும் அல்ல.
ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வணக்க வழிபாடு என்பது, அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதுடன் அவன் விலக்கியவற்றை விட்டும் விலகுவதையும் உள்ளடக்கக் கூடியதாகும். அவ்வாறு செய்யாதவனின் வழிபாடு உண்மையில் நன்மையான காரியமாகாது. எவ்வித நற்பயனும் அளிக்காது. நற்கூலியைப் பெற்றுத்தரக்கூடிய நன்மையான வணக்க வழிபாடு அமைவது கருணைமிக்க இறையோனின் உதவியின்றி சாத்தியமாகாது என்பதால்தான் உன்னையே நாங்கள் வணங்குகிறோம் என்பதைத் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது: உன்னிடமே நாங்கள் உதவியும் கோருகிறோம்!
அதாவது, உன்னை வணங்கி வாழ்வதற்கான உதவியை உனக்குக் கீழ்ப்படிந்து உனது உவப்பைப் பெறுவதற்கான பாக்கியத்தை நாங்கள் வேண்டுவது உன்னிடம்தான். ஏனெனில் அதற்கான ஆற்றல் உன்னிடம்தான் உள்ளது.
நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக: அதாவது எந்த மார்க்கத்தை நபிமார்கள் மூலம் நீ அனுப்பித் தந்தாயோ எந்த மார்க்கத்தை இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலமாக நிறைவுபடுத்தினாயோ அத்தகைய ஒப்பற்ற இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவாயாக.அதில் எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக. உனது நல்லருளைப் பெற்ற சான்றோர்களின் வழியில் வாழும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக. அவர்களின் குழுவில் எங்களைச் சேர்ப்பாயாக!
ஆனால் யார் யாரெல்லாம் நேர்வழியை விட்டும் தடம் பிறழ்ந்து போனார்களோ, அதனால் உனது கோபத்திற்கு ஆளானார்களோ அவர்களின் கூட்டத்தில் எங்களைச் சேர்த்து விடாதே!
- இவ்வாறு நாம் கேட்கும் பிரார்த்தனைக்கு பதிலாகவே குர்ஆன் முழுவதும் அமைந்துள்ளது. ஆம், நேர்வழிகாட்டும்படி நாம் வேண்டுகிறோம். அதற்கு இந்த குர்ஆன் முழுவதையும் பதிலாக நம் முன்னால் சமர்ப்பித்து விடுகிறான் இறைவன்.
எனவே வணக்க வழிபாடுகளில் மட்டுமல்ல., வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் குர்ஆனின் வழிகாட்டல்களை முழுமையாக நாம் செயல்படுத்துவது அவசியம்.
கவனிக்க வேண்டிய கருத்துகள்
1) ஏகத்துவம்! அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்.
2) எந்த உதவியும் அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும்.
அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கேட்க வேண்டும் எனும் பொழுது இங்கு ஒரு கேள்வி எழலாம்.
நன்மையான காரியத்திலும் பயபக்தியிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்"(குர்ஆன் 5 :2) என்று அல்லாஹ் கூறுகிறான்.
நீ ஒரு மனிதனுக்கு அவனது வாகனத்தின் விஷயத்தில் உதவிசெய்வதும், நீ அதன் மீதுஅவனை அமரச்செய்து உதவுவதும் அல்லது அவனது பொருட்களை அதன் மீது ஏற்றி வைப்பதும் தர்மம் ஆகும்" என்று நபி (ஸல்) அவர்களும் நவின்றுள்ளார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்விடம் மட்டும்தான் உதவி தேட வேண்டும் என்பது மேலே கூறப்பட்ட குர்ஆன் மற்றும் நபிமொழியின் கருத்துகளுடன் முரண்படுவதாகத் தோன்றலாம்.
ஆனால் அல்லாஹ்விடம் உதவி தேடுவதன் கருத்துயாதெனில், எல்லா உதவிகளும் செய்வது அவன்தான்., நமது சக்தியால் எதுவும் ஆகப்போவதில்லை எனும் ரீதியில் அவனிடமே முழுமையாகப் பொறுப்புச் சாட்டுவதாகும். இப்படிப் பொறுப்பு சாட்டும் ரீதியிலான உதவியை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் நாம் விரும்பக்கூடிய ஒரு காரியத்தில் சக மனிதரின் உதவியை பங்களிப்பை நாடுவது குற்றமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை: அப்படிப்பட்டவர் உயிருடன் இருக்க வேண்டும்., நமக்கு உதவி செய்யும்; ஆற்றலையும் அவர் பெற்றிருக்க வேண் டும். அப்படிப்பட்ட ஒருவரிடம் உதவி கேட்பது ஆகுமானதே. அதில் எந்தக் குற்றமும் இல்லை. குர்ஆன் மற்றும் நபிமொழியின் அறிவுரைப்படி ஒருவருக்கொருவர் உதவுவது புண்ணியச் செயலேயாகும்.
ஆனால் உதவி செய்யும் ஆற்றல் இல்லாதவராக அந்த மனிதர் இருந்தால் அவரிடம் உதவி கேட்பது கூடாது. எடுத்துக்காட்டாக, மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம் உதவி கேட்பது கூடாது. அது ஹராம் (தடுக்கப்பட்டது) மட்டுமல்ல ஷிர்க் எனும் கொடிய இணைவைப்புச் செயலுமாகும். ஏனெனில் மண்ணறை யில் அடக்கப்பட்டிருப்பவர் தனக்கே எந்தப் பயனும் அளித்திட இயலாதவராக இருக்கும்போது பிறருக்கு எவ்வாறு அவரால் உதவிட இயலும்?
3) நிறை புகழ் அனைத்தையும் அல்லாஹ்வின் பால் சேர்ப்பது.
4) மறுமை நம்பிக்கை! மறு உலகில் மனிதர்கள் அனைவரும் மீண்டும் எழுப்பப்படுவதும் உண்மை. சுவனம் அல்லது நரகம் கொண்டு தீர்ப்பளிக்கப்படுவதும்; உண்மை. நற்செயல் புரிந்தவர் களுக்;கு நற்கூலி வழங்கும் அந்த அதிபதியின் திரு உவப்பைப் பெறுவதற்காக நன்மைகளைச் சேகரித்துக் கொள்ளுமாறு அனை வருக்கு நல்லார்வம் ஊட்டப்பட்டுள்ளது.
5) மக்கள் மூன்று வகையினராவர். ஒன்று: அல்லாஹ்வின் அருளுக்கு உரியவர்கள். இரண்டு: அவனது சினத்திற்கு ஆளான வர்கள். மூன்று: நெறிதவறிப்போனவர்கள்.
வீண் பிடிவாதத்;தினால் நெறிதவறிப்போனவர்கள் ய+தர்கள். அறியாமையினால் நெறி தவறிப்போனவர்கள் கிறிஸ்தவர்கள். இது நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னால் வாழ்ந்த கிறிஸ்தவர் களின் நிலையாகும்.அதன் பிறகுஅனைவரும் சத்தியத்தை அறிந்து கொண்டே அதற்கு எதிரான போக்கை மேற்கொள்வதால் ய+தர்களும் சரி கிறிஸ்தவர்களும் சரி அனைவரும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்களே!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment