அதன் பெயர் லட்சியம்

அந்தக் கப்பல் மிதந்து கொண்டிருக்கிறது. ஆறு மாத காலமாகவே அது மிதந்து கொண்டு தான் இருக்கிறது. கருங்கடலில் இருப்பதாக குறிப்பிட்ட ஒரு தீவைக் கண்டு பிடிக்க அது போய்க் கொண்டிருந்தது.

அந்தத் தீவு மட்டும் கண்டு பிடிக்கப்பட்டால், அந்தக் கப்பலில் பயணம் செய்த இரு நூறு பேருக்கும் வளமான நாடே கிடைத்து விட்டதாக அர்த்தம். கப்பல் தலைவன் கெட்டிக் காரன். நம்பிக்கைக்குரியவன். அப்படி ஒரு தீவு இருப்பதாக அறிந்தே அவன் பயணம் தொடங்கியிருந்தான். வாழ வழி இல்லாதவர்கள் இருநூறு பேருக்கு வளமான வாழ்வை உருவாக்குவதே அ வன் திட்டம். அதற்கென அவன் குறித்த இலக்கே அந்தத் தீவு. பலவகை கடல்களையும் தாண்டிக் கப்பல் போய்க் கொண்டிருந்தது. கடல் கொந்தளிப்பினாலும், பருவக் கோளாறினாலும் மூன்று மாதங்களில் அடையலாம் என்ற கணக்குத் தவறி விட்டது. ஆறு மாதங்கள் ஓடி விட்டன. கப்பல் தலைவனோ பசியையும், தூக்கத்தையும் பொருட்படுத்தாது சுக்கானைப் பிடித்தபடி இருந்தான். பயணம் செய்தவர்களுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது. எப்படியும் நாம் அந்தக் தீவை அடைந்து விடுவோம் என்று தலைவன் ஆறுதல் சொன்னான். அந்த ஆறுதலால் அவர்கள் பசி அடங்கவில்லை. எங்களுக்குப் பசிக்கிறது, பசிக்கிறது என்று அவர்கள் சத்தமிட்டார்கள். நாம் விரைவில் அந்தத் தீவை அடைந்து விடுவோம். அங்கே காய்களும், கனிகளும் கேட்பாறின்றிக் குவிந்து கிடக்கின்றன. குறிப்பிட்ட இலக்கை அடையும் வரை அந்த மீன்களை மட்டுமே உணவாகக் கொண்டு நாம் வாழ்ந்து விட முடியும். நிரந்தர இன்பத்துக்காக தற்காலிகமாகத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். நாம் ஒரு இலட்சியப் பயணம் செய்கிறோம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். சோதனைகளைக் கட்டுப்பாடோடு சகித்துக் கொள்வதன் மூலம் தான் ஒளிமயமான எதிர்காலத்தை நாம் பெற முடியும். உழுகிற காலத்தில் அரை வயிறு தான் கிடைக்கும். சமயங்களில் கிடைக்காமலும் போகலாம். அறுவடைக்குப் பின் அற்புதமான சாப்பாடு கிடைக்கும். நாம் நமது இலட்சியத்தை அடைகிற வரையில் பொறுமையாக இருங்கள். தலைவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால் அவர்களோ வெறும் மீனை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கத் தயாரில்லை. எங்களுக்கு இந்த உணவு அலுத்துப் போய் விட்டது. வேறு வகை உணவு வேண்டும் என்று கத்தினார்கள். அவர்கள் பொறுமையோடு இருக்கும் சக்தி அற்றவர்களானார்கள். எல்லோருமாக சேர்ந்து கப்பல் தலைவனை உதை;தார்கள். அடி தாங்காமல் அவன் மரணமடைந்தான். திக்கு முக்காடித் திசை தடுமாறி ஓடத் தொடங்கிற்று. பயணம் செய்தவர்களுக்குப் பசியை உணரத் தெரிந்ததே தவிர கப்பலை ஓட்டத் தெரியவில்லை. சூறாவளியில் சிக்கிக் கப்பல் மூழ்கத் தொடங்கிற்று. அவர்கள் தங்கள் கப்பல் மூழ்கி விட்டது இனி அவர்களுக்குப் பசி எடுக்காது. நீ அவசரக்காரனாக இருந்தால் அதுவரையில் படட கஷ்டம் வீணாகி விடும். ஒட்டகத்தில் ஏறியவன் ஊர் போய்ச் சேரும் வரை அதை கொன்று விடக் கூடாது.
 
நன்றி : மீள் பார்வை, அக்டோபர்
இதில் பெறும் படிப்பினை என்ன உங்களுக்குத் தெரியும்
அதை மற்றவருக்கும் கற்றுக்கொடுங்கள்...

0 comments:

Post a Comment