இஸ்லாமிய ஜனநாயகம்


இஸ்லாம் என்ற சொல்லாட்சி வரும் பொழுது மனித உரிமை மீறல்கள், பெண்ணுரிமை பறிப்பு என்பது போல அங்கு ''ஜனநாயகம் இல்லை"" என்ற கருத்தையும் சேர்த்து இஸ்லாத்தின் மீது சேறு பூசுவதுண்டு. உண்மையில் இந்த தலைப்பு குறித்து விவாதங்கள் நடத்தப்பட வேண்டும், இன்னும் முஸ்லிம் நாடுகள் தங்கள் நாடுகளில் ஜனநாயகம் நிலவுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்வதோடு, இதுவரைக்கும் அதனை நடைமுறைப்படுத்ததாதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். உண்மையில் ஜனநாயகம் குறித்த விவாதங்களின் இறுதி முடிவு வருங்கால முஸ்லிம் உம்மத்திற்கு மிகவும் அவசியமானதொன்று என்பதும், அதிலும் குறிப்பாக மேற்குலகில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும், அதன் இருப்புக்கும் முக்கியத்துவமிக்கதாகும்.


ஜனநாயகம் என்றால் என்ன? இன்னும் இஸ்லாம் கூறும் ஜனநாயகம் என்பது எவ்வாறு இருக்கும் என்று மேற்குலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவ்வாறு காட்டாதவிடத்து, மேற்கில் புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் அவர்கள் பூரணத்துவமிக்கவர்களாக மாறும் அதேவேளையில், அரசியல் துறையில் அவர்கள் பலம் குன்றியவர்களாகி விடுவார்கள். இஸ்லாம் ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல, அதனுடன் முரண்பட்டு நிற்கக் கூடியதல்ல. இன்றைய அரசியலை இஸ்லாமியப்படுத்துவதுடன், இஸ்லாமிய அடிப்படைகளின் மீது அது ஊண்றப்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் உன்னதமான நோக்கம் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசிமிருக்கின்றது.
இஸ்லாம் என்பது சூனியத்தின் மீது நடைபோடக் கூடிய மார்க்கமல்ல, இந்த உலகத்தின் மீது அதன் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற மார்க்கம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், அவனது அகத்திலும், புறத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற மார்க்காகும். மனிதனின் ஒவ்வொரு அசைவும் இறைவனுக்காகவே என்பதாகவும், அவனது சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தைக் கொண்டதாகும். அதற்காக, இந்த உலக வாழ்வின் இன்பங்களைத் துறந்து விட்டு, அவற்றினை அனுபவிப்பதனை விட்டு ஏகாந்த உலகில் மனிதனைச் சஞ்சரிக்கச் சொல்வதல்ல இஸ்லாம். மாறாக, இந்த உலக வாழ்வின் இன்பங்களை எவ்வாறு தூய்மையான வடிவில் அனுபவிப்பது என்பதைக் கற்றுக் கொடுக்கக் கூடிய மார்க்கமாகும். இந்த உலக வாழ்க்கைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதனைப் போலவே இறந்த பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற மறுமைநாளுக்காகவும் முக்கியத்துவம் கொடுக்கச் சொல்கின்றது இஸ்லாம். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அல்லாஹ் - இறைவன் என்பது அடிப்படையும், ஆதாரமுமாகும். எனவே, தான் அவர்களது ஒவ்வொரு வணக்க வழிபாடுகளிலும் இவ்வாறு பிரார்த்திக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

"யா அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையின் அருட்கொடைகளையும், இன்னும் மறுமையின் அருட்கொடைகளையும் எங்களுக்கு வழங்கியருள்வாயாக"" என்று பிரார்த்திக்கக் கூடியவர்களாக
இருப்பதைக் காண முடியும்.
இன்னும்,
அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத் தேடிக் கொள்;. எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! (28:77)


எனவே, ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு முஸ்லிமும் தங்களது பொறுப்பினை உணர்ந்து சமூகக் கடமைகளில் தோள் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் பணிக்கின்றது. இதனை மிகவும் பிரபலமானதொரு நபிமொழி இவ்வாறு கூறுகின்றது :
"எங்கெல்லாம் ஒரு மனிதன் தீமையைக் காணுகின்றானோ (அதனை தடுக்கும் பொருட்டு அல்லது அதற்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு) அதனைத் தனது கரத்தால் அல்லது வலிமை கொண்டு தடுக்க வேண்டும், அல்லது அவனது நாவால் (அன்புடன் அறிவுரை கூறுவதன் மூலமோ, அதிகார தோரணையில் அதட்டுதல் மூலமோ) அதனைத் தடுக்க வேண்டும், இவை யாவற்றிலும் ஒருவனுக்கு இயலாது எனின், அவன் தனது மனதாலாவது அதனைத் தீமை என்று ஒப்புக் கொண்டு அதனை வெறுக்க வேண்டும்."


ஆக, ஒரு முஸ்லிம் சமூகத்தில் நடைபெறும் அநாச்சாரங்களுக்கு எதிராக, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் ஏற்படும் தீமைகளுக்கு எதிராக இஸ்லாத்தினை அவன் பிரயோகிக்க முன் வர வேண்டும் என்றே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. எந்த ஒரு முஸ்லிமும் வெறும் தொழுகை வணக்க வழிபாடுகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டு சமூகத்தில் நிலவும் தீமைகளைக் கண்டு கொள்ளாதிருந்து விட முடியாது.
எனவே இஸ்லாத்தை வெறும் வணக்க வழிபாடுகளுடன் சுருக்கிக் கொள்ளாது, பரந்த அளவில் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். தீமைகள் களைப்பட்ட ஒரு தூயதேசத்தை உருவாக்குவதில் நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். இஸ்லாம் வெறுத்தொதுக்கிய அனைத்து அம்சங்களையும் அல்லாஹ்வுக்காக என ஏதோ ஒருவழிமுறையில் தடுத்து, இஸ்லாம் ஏவிய விடயங்களை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவதனூடாக இவ்வுலகில் அனைத்து சக்திகளையும், மதங்களையும், கொள்கை, கோட்பாடுகளையும் மிஞ்சிய ஒரு சம்ப+ரண வாழ்க்கைத்திட்டமாக நடைமுறைப்படுத்துவது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.


"அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்¢ ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்".

"(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்".    - 61 : 8-9 -


0 comments:

Post a Comment