சூரத்துல் அலக் (96),

மக்காவில் அருளப்பட்டது.

--------------------------------------------------------------------------------

உரை

பொருள்

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) (நபியே) ஓதுவீராக! படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!

(2) அலஞக் எனும் (அட்டை போல் ஒட்டிக்கொண்டிருக்கும்) பொருள்களில் இருந்து மனிதனை அவன் படைத்தான்.

(3) ஓதுவீராக! உம் இறைவன் எத்தகைய பெரும் கொடையாளன் எனில்,

(4) அவனே எழுதுகோல் கொண்டு கற்றுக்கொடுத்தான்.

(5) மனிதனுக்கு -அவன் அறியாதிருந்தவற்றைக் கற்றுக் கொடுத்தான்.

(6) அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கிறான்.,

(7) தன்னிறைவுடையவனாக அவன் தன்னைக் கருதிக் கொண்டதனால்!

(8) திண்ணமாக உம் இறைவனிடம்தான் அவன் திரும்பிச் சென்றாக வேண்டும்.

 

இந்த அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள்தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது முதன்முதலாக இறக்கியருளப்பட்டன.

நபியவர்கள் ஹிரா குகையில் தனித்திருந்த பொழுது அவர்களிடம் மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் தோன்றி 'ஓதுவீராக' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவன் அல்லவே''என்று பதில் அளித்தார்கள். இரண்டாவது முறையும்' ஓதுவீராக' என்றார் ஜிப்ரீல். அதற்கும் முன்போலவே நபியவர்கள் பதிலளித்தார்கள். மூன்றாவது முறைதான் ஓதுவீராக! படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு என்று தொடங்கி ஐந்து வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் ஓதிக்காட்டினார்.

இந்த முதல் வஹி மூலம் அல்லாஹ் தன்னுடைய தூதருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் சொல்வதென்ன? படைத்துப் பரிபாலித்து காத்துவரும் எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். எந்தப் பணியானாலும் பேச்சானாலும் அல்லாஹ்வின் பெயர் கொண்டே தொடங்கிடவேண் டும். அவனது திருப்பெயரிலேயே அருள்வளம் தேடிட வேண்டும். அவனையே முழுவதும் சார்ந்து வாழ வேண்டும். அமல்களிலும் சொற்களிலும் இக்லாஸ் எனும் வாய்மை இருக்க வேண்டும். வணக்க வழிபாடோ நற்செயலோ கல்வியோ எது ஒன்றைச் செய்வதானாலும் அல்லாஹ்வின் திருஉவப்பை நாடியே செய்ய வேண்டும்.

இஸ்லாம் கல்விக்கு எத்துணை முக்கியத்துவம் அளிக்கிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இதோ! அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு வஹி எனும் இறையருட் செய்தி சொல்லும் முதல் ஆணையே 'ஓதுவீராக' என்பது தான்!

மேலும் கூறப்பட்டுள்ளது: தாயின் கருவறையில் தங்கிய விந்து படிப்படியாக வளர்ந்து உருமாறி 'அலஞக்' எனும் (ஒட்டிக் கொண்டிருக்கும்) பொருள்களாகிறது. அந்தப் பொருள்களில் இருந்தே மனிதனை அல்லாஹ் படைத்தான்.

இவ்வாறு அந்த விந்து பரிணாம வளர்ச்சி அடைந்து முழு மனிதனாக வடிவம் பெறுகிறது.அதற்குப் பத்து மாதம் பிடிக்கிறது.

தாயின் கருவில் உருவாகி படிப்படியாக வளர்ச்சி அடையும் 'மனிதன்' குழந்தையாகப் பிறக்கிறான். பிறகு சிறுவனாக வளர்ந்து எழுதுகோல் பிடித்து எழுதும் வழிகாட்டலைப் பெறுகிறான். அதன் மூலம் கல்வியில் முன்னேறிக்கொண்டே செல்கிறான்., ஏராளமான விஷயங்கள் அவனது கல்விஞானத்தில் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இது அல்லாஹ்வின் அருட்கொடை மட்டுமல்ல, கல்வி யின் மூலம் மனிதனுக்கு அவன் அளித்த கண்ணியமும் ஆகும்.

ஆனால் வளர்ந்து பெரியவனாகி கல்வி கற்றுப் பட்டம் - பதவி வந்து சேர்ந்த பிறகு மனிதனுக்கு ஆணவம் தலைக்கேறுகிறது. தனது ஆற்றலைக் குறித்தும் அளவின்றி அள்ளிக் குவித்த செல்வத்தைக் கொண்டும் அதிகஅளவு ப+ரிப்படைகிறான். அல்லாஹ் அளித்த பேருபகாரங்கள் அவனுக்கு மறந்து போகின்றன. பாவங்கள் செய்யப் பயப்படுவதில்லை. தீமைகளில் மூழ்குகிறான்.

இத்தகைய மனிதனுக்கு ஓர் உண்மை நினைவ+ட்டப்படுகிறது. மனிதன் நிச்சயம் இறைவன் பக்கம் திரும்பிச் சென்றாக வேண்டும். தீய செயல்பாடுகள் குறித்து இறைவனின் நீதிமன்றத்தில் அவன் பதில் சொல்லியாக வேண்டும் என்பதே அது!

கவனிக்க வேண்டிய கருத்துகள்

1) கல்விக்கும் படிப்புக்கும் இஸ்லாம் அளித்துள்ள முக்கியத்துவம். வானத்திலிருந்து இறங்கிய முதல் வசனமே ஓதுவீராக என்பதுதான்!

2) முஸ்லிம்கள் தங்களுடைய செயல்களையும் பேச்சுகளையும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டே தொடங்கிட வேண்டும்.

3) அல்லாஹ்தான் மனிதனுக்கு எல்லாவற்றையும் கற்றுக்; கொடுத்தான். எழுதுகோலை வழங்கி எழுத்தறிவித்தவனும் அவனே!

4) ஆணவம் கொண்டு, ஆண்டவனுக்குக் கீழ்ப்படியாத போக்கு குறித்து மனிதனை அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

5) மனிதர்கள் அனைவரும் ஒருநாள் அல்லாஹ்விடம் திரும்பிச் சென்றாக வேண்டும். அவனது நீதி மன்றத்தில் தத்தம் செயல்கள் குறித்து அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும்.

 

வசனம் 9 முதல் 19 வரை

உரை

பொருள்

(9); தடுக்கிறானே அப்படிப்பட்டவனை நீர் பார்த்தீரா?

(10) ஓர் அடியாரை -அவர் தொழுது கொண்டிருக்கும்போது (தடுப்பவனைப் பார்த்தீரா?)

(11) நீர் என்ன கருதுகிறீர்? அவர் நேர்வழியில் நடந்தாலுமா? (தொழவிடாமல் அவரைத் தடுக்க வேண்டும்?)

(12) அல்லது தூய்மையை மேற்கொள்ளும்படி அவர் ஏவினாலுமா? (தொழவிடாமல் அவரைத் தடுக்க வேண்டும்?)

(13) (இந்த மனிதன்) சத்தியத்தைப் பொய் என்று தூற்றினால் மேலும் புறக்கணிக்கவும் செய்தால் (அவனது செயல்பற்றி) நீர் என்ன கருதுகிறீர்?

(14) அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியாதா?

(15) அவ்வாறன்று! அவன் (இப்படிச் செய்வதிலிருந்து) விலகிட வில்லையெனில், நிச்சயமாக நாம் அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம்.

(16) கடும் தவறிழைத்த, பொய்யுரைத்த நெற்றி முடியை!

(17) அவன் தனது கூட்டத்தை அழைக்கட்டும்.

(18) (தண்டிக்கக்கூடிய) மலக்குகளை நாம் அழைப்போம்!

(19) அவ்வாறன்று! அவனுக்குக் கீழ்ப்படியாதீர். ஸ{ஜூது செய்யும்! (;இறைவனின்) நெருக்கத்தைப் பெறும்!

 

இந்த வசனங்கள் குறைஷித் தலைவர்களில் ஒருவனைப் பற்றி பேசுகின்றன.பண பலமும் படை பலமும் அவனிடம் குவிந்திருந்தால் ஆணவத்தில் மூழ்கி அடாவடிச் செயல்கள் செய்யத் துணிந்தான். அவன்தான் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கொடிய விரோதியாக இருந்த அப+ஜஹ்ல் என்பவன்.

நபிகளார்(ஸல்)அவர்கள் கஅபா சென்று தொழுவது வழக்கம். ஆனால் அதை அப+ ஜஹ்ல் கடுiமாயக ஆட்சேபித்தான். நமது கடவுட் சிலைகளை மறுத்துவிட்டு நமது வழிபாட்டு முறையைக் கடுமையாகக் குறைகூறிக்கொண்டு முஹம்மத் இங்கு வந்து அவர் விருப்பப்படி தொழுவதை-தலையைத் தரையில் வைத்து ஸ{ஜூது செய்வதை நான் கண்டால் அவரது பிடரியைக் காலால் அழுத்தி முகத்தை மண்ணைக் கவ்வச்செய்து விடுவேன் என்று ஆணவம் பேசினான். (அவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டா கட்டுமாக)

இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் ஒருதடவை கஅபாவில் தொழுதார்கள்.அவர்கள் ஸ{ஜூது செய்து கொண்டிருந்த பொழுது அப+ ஜஹ்ல் அதைப் பார்த்துவிட்டான். உடனே நபியவர்களின் பிடரியில் காலால் மிதிக்கும் திமிரான எண்ணத்துடன் வந்தான்.

ஆனால் அப+ ஜஹ்ல் என்பவனால் நபியவர்களை நெருங்க முடியவில்லை. அருகில் வந்ததும் அஞ்சி நடுங்கியவாறு திடுக்கிட்டுத் திரும்பினான். அப்பொழுது அவனுடைய ஆட்கள் கேட்டனர்: "ஏன் இப்படி அலறியடித்துக்கொண்டு வருகிறாய்? உனக்கு என்ன ஆனது?" என்று! அதற்கு அவன் பதில் சொன்னான்: "எனக்கும் முஹம்மதுக்கும் மத்தியில் பெரிய நெருப்புக் கிடங்கு ஒன்றைப் பார்த்தேன். வேறு சில பயங்கரமான பொருட்களையும் கண்டேன். அதனால்தான் ஓடி வந்து விட்டேன்"

நபி(ஸல்) அவர்கள் இது பற்றி குறிப்பிடும்பொழுது - "அவன் என்னை நெருங்கியிருந்தாhல் மலக்குகள் அவனைத் துண்டு துண் டாக வெட்டி வீசியிருப்பார்கள்"

கருத்து இதுதான்: வரம்பு மீறிச் செயல்படும் இந்த அநியாயக் காரனைப் பாருங்கள். மக்களைத் தொழ விடாமலும் வணக்க வழி பாடு செய்ய விடாமலும் தடுக்கிறான். இவனது செயல் எவ்வளவு மட்டரகமானது!

அதுவும் நேர்வழியில் நடைபோட விடாமல் ஒரு நபியைத் தடுத்தான் எனில், பிறரை நன்மை புரியுமாறு ஏவுதல், தீமையை விட்டும் தடுத்தல் எனும் பணியை மேற்கொள்ள விடாமல் ஒரு நபியை அதாவது முஹம்மத் நபி(ஸல்) அவர்களைத் தடுத்தான் எனில் அந்தச் செயல் இன்னும் எவ்வளவு கீழ்த்தர மானது! ஆடா வடித்தனமானது!

தொழவிடாமல் தடுப்பதுடன் மட்டும் இவன் நிறுத்திக் கொள்ள வில்லை. மறுவுலகத்தை நிராகரிக்;கிறான்., அதைப் பொய்யென்று தூற்றவும் செய்கிறான்.அல்லாஹ்வை நிராகரிக்கிறான். இஸ்லாத்தை புறக்கணிக்கிறான்., எதிர்க்கிறான்., சத்தியத்தை அலட்சயமாகக் கருதுகிறான்.

அவனுடைய செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் கண்கா ணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? மறு உலகில் அவை குறித்து கடுமையான கேள்வி விசாரணை உண்டு என்பதை அவன் தெரிந்துகொள்ளவில்லையா?

இது அப+ ஜஹ்லுக்கு மட்டுமல்ல., அவனைப் போல் செயல் படும் அனைவருக்கும் விடுக்கப்படும் கடுமையான எச்சரிக்கை யாகும்.

அப+ ஜஹ்ல் என்பவன் பாவமீட்சி தேடித் திருந்தவில்லையா னால் - நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக எதிர்ப்பதை, அவர் களது அழைப்புப் பிரச்சாரப் பணிக்கு இடைய+று விளைவிக்கும் கொடிய போக்கை நிறுத்திக் கொள்ளவில்லையானால் இவ்வுலகில் நம்பிக்கையாளர்களின் கைகளாலும் கடும் தண்டனை அவன் மீது சாட்டப்படும். மறுமை எனப்படும் இன்னோர் உலகத்தில் மலக்கு களின் மூலமாகவும் கடும் தண்டனை அவனுக்குக் காத்திருக்கிறது.

மேலும் நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுக்கும் மலக்குகளுக்கு ஆணையிடுவான். அவர்கள் அப+ ஜஹ்லின் தலை முடியைப் பிடித்து இழுத்து நரகத்தில் தள்ளுவார்கள்.

அப+ ஜஹ்ல் இவ்வுலகில் வேண்டுமானால் உதவிக்காகத் தன் அடியாட்களை அழைக்கலாம்., அவர்களுடன் சேர்ந்து இஸ்லாத்துடன் கடுமையாக மோதலாம். ஆனால் மறு உலகத்தில் அவன் எவரையும் உதவிக்கு அழைக்க முடியாது. ஏனெனில் அவர்கள் அனைவரையும் பிடித்து மலக்குகள் நரகத்தில் வீசியெறிந்து விடுவார்கள்.

பிறகு தன்னுடைய சங்கைக்குரிய நபியிடம் அல்லாஹ் கூறு கிறான்:நபியே! சத்தியத்தின் மீது நிலைத்திருங்கள். அப+ஜஹ்லையும் அவன் போன்றவர்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து விடுங்கள். தொடர்ந்து உம் இறைவனை நீங்கள் தொழுது வாருங்கள். அவனது திருமுன்னால் சிரம் வைத்து வணங்கி வாருங்கள். அதன் மூலம் அவனது அண்மையைப் பெறுவீர்கள். ஏனெனில் மனிதன் தன் இறைவனோடு மிக நெருக்கமாக இருக்கும் நிலை அவன் ஸ{ஜூத் செய்யும் நிலைதான்.

இதனையே நபி(ஸல்) அவர்களும் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள்: "மனிதன் தன் இறைவனோடு மிக நெருக்கமாக இருக்கும் நிலை அவன் ஸ{ஜூத் செய்து கொண்டிருக்கும் போதுதான்! எனவே அதில் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்"

கவனிக்க வேண்டிய கருத்துகள்

1) இஸ்லாத்தின் பேரிலும் இறைத்தூதருடனும் அப+ ஜஹ்ல் கொண்டிருந்த கடும் பகையும் அவனைப் போன்ற கொடிய விரோதிகளின் தண்டனை என்ன என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

2) எதிரிகளின் எல்லாவிதமான தீங்கில் இருந்தும் தன் தூதருக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பவனாக இருக்கிறான்.

3) இறைவழிபாடு செய்யவிடாமலும் நன்மை செய்யவிடாமலும் மக்களைத் தடுப்பது தான் மிகமிக மோசமான தீமையாகும்.

4) இறைவழிபாட்டில் தொடர்ந்து ஈடுபடுமாறும் ஸ{ஜூது செய்யு மாறும் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பகரும் அறிவுரை.

5) இந்த அத்தியாயத்தில் ஸஜ்தா திலாவத்-ஓதலின் சிர வணக்கம் வருகிறது.  எனும் அத்தியாயத்தின் இறுதி வசனத்தை ஒருவர் ஓதினால் கிப்லாவை முன்னோக்கி ஒருமுறை ஸ{ஜூத் செய்திட வேண்டும்.


0 comments:

Post a Comment