சூரத்துல் பய்யினா (98),

உரை
பொருள்-
அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!
(1) வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பாளர்கள் தங்களது நிராகரிப்பிலிருந்து விலகக் கூடியவர்களாய் இருக்கவில்லை., தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை!
(2) தூய்மையான வேத நூல்களை ஓதிக் காண்பிக்கக் கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடம் இருந்து (வரும் வரை!)
(3) அவற்றில் முற்றிலும் செம்மையான - நிலையான சட்டங்கள் எழுதப்பட்டிருக்கும்.

(4) முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்கள் பிளவுபட்டுப் போனது (நேர்வழி குறித்த) தெளிவான சான்று அவர்களிடம் வந்த பிறகுதான்!
(5) ஆனால் தங்களது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாய், முற்றிலும் மன ஒருமைப்பட்டவர்களாய் அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்., (என்பதைத் தவிர) - தொழுயையை நிலை நாட்ட வேண்டும்., ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை. இதுதான் மிகவும் சீரான, செம்மையான மார்க்கம்.
(6) வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பாளர்கள் திண்ணமாக நரக நெருப்பில்தான் நுழைவார்கள் அதில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அவர்கள்தான் படைப்பினங்களிலேயே மிகவும் கீழ்த்தரமானவர்கள்.
(7) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாகப் படைப்பினங்களி-லேயே மிகவும் சிறந்தவர்கள்.
(8) அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியுற்றார்கள். இவை (அனைத்தும்) தம் இறைவனை அஞ்சக் கூடிய மனிதருக்கு உரியதாகும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் சமர்ப்பித்த இஸ்லாமிய சன்மார்க்கம் தொடர்பாக நிராகரிப்பாளர்களின் அதாவது, ய+தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிலைவணக்கம் செய்துவந்த இணைவைப்பாளர்கள் ஆகியோரின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை இந்த அத்தியாயம் எடுத்துரைக்கிறது.
இம்மூன்று பிரிவினரும் தங்களின் தவறான மத நம்பிக்கைகளிலும் பொய்யான சித்தாந்தங்களிலும் நீடித்துவந்தனர். இறுதி நபியின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அது பற்றி அவர்களின் வேதங்களில் கண்ட முன்னறிவிப்புகளையும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வராத வரையில் எங்களின் (தவறான) மதத்தை நாங்கள் கைவிடப் போவதி;ல்லை" என்று ஒரு சாரார் கூறினார்கள் - இந்த வார்த்தை அவர்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகிறது.
அவர்கள் எதிர்பார்த்தபடியே முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் வருகை தந்து குர்ஆன் எனும் தெளிவானதொரு சான்றையும் அளித்தார்கள். இஸ்லாம் எனும் சத்திய சன்மார்க்கத்தின் பக்கம் அழைப்பும் விடுத்தார்கள்.
அந்த மக்கள் பின்பற்றி வந்த மதமும் மதச் சித்தாந்தங்களும் தவறானவை என்றும் அவர்கள் செய்துவந்த அறியாமைக் காலத்து சடங்கு - சம்பிரதாயங்கள் ஆகாதவை என்றும் தெளிவுபடுத்தினார்கள்.
அப்பொழுது வேதக்காரர்களாகிய ய+த, கிறிஸ்தவர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டது. அவர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை ஏற்றனர்.நேர்வழி திரும்பினர். அறியாமையிலிருந்தும் வழிகேட்டிலிருந்தும் அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். ஆம், நபியவர்களின் வருகைக்கு முன்பு வரை தங்கள் நிராகரிப்புப் போக்கிலிருந்து அவர்கள் விலகாமலேயே இருந்தனர்.
ஆனால் அவர்களில் பெரும்பாலோரின் நிலை அப்படியே நீடித்தது. எதிர்பார்த்த நபி வந்த பிறகும் எவ்விதக் கூடுதல் குறைவும் இல்லாத, கற்பனைக் கதைகள் கலந்திடாத, முற்றிலும் பரிசுத்தமான குர்ஆன் எனும் வேதத்தை அவர் வழங்கிய பிறகும் பெரும்பாலான மக்கள் தங்களது போக்கை மறு பரிசீலனை செய்ய வில்லை. பழைய மதக்கொள்கைகளிலேயே விடாப்பிடியாக இருந் தார்கள்.
ஆம், கிறிஸ்தவர்கள்-ஈஸா நபியை கடவுளின் குமாரர் என்றனர்., அவர்களின் அன்னை மர்யத்தையும் கடவுள் அல்லது கடவுளின் அன்னை என்றனர். ய+தர்கள் - உஸைர் கடவுளின் குமாரர் என்றனர்.
சிலைகளை வணங்கி வந்த இணைவைப்பாளர்கள் - மலக்குமார்கள் இறைவனின் பெண் மக்கள் என்றனர்.
இவ்வாறாக இவர்கள் அனைவரும் உண்மைக்குப் புறம்பான கற்பனைக் கொள்கைகளில் மூழ்கிக் கிடந்தார்கள். மனிதர்களையும் மலக்குகளையும் கடவுளர் என்றும் கடவுளின் குமாரர் என்றும் கடவுளின் அவதாரங்கள் என்றும் விபரீதமான கற்பனைகளில் மூழ்கி அநாச்சாரங்களை ஏற்படுத்திக் கொண்டு வழிகேட்டில் உழன்று கொண்டிருந்தார்கள் இன்றும் அதிலிருந்து அவர்கள் மீளவில்லை.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அறிவுறுத்தியது ஏகத்துவக் கொள்கையைத்தான். ஒரே இறைவனை வணங்கி வழிபட வேண்டும் என்றுதான் அவர்களுக்கு ஆணையிடப்பட்டது. இதுவே மக்களைப் பண்படுத்தக் கூடிய, பயனளிக்கக் கூடிய சீரிய மார்க்கம்.
இத்தகைய சீரிய கொள்கைதான் இஸ்லாம் எனும் சத்திய மார்க்கம் என்றும் அதனை ஏற்றுக்கெண்டோர் எத்தகைய உயர் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. நிராகரிப்புப் போக்கை மேற்கொள்வோர் அனைவரும் நரகம் செல்வர் என்றும் அவர்கள்தான் படைப்பினங்களிவேயே மிகவும் கெட்டவர்கள் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. திருக்குர்ஆன் இன்னோர் இடத்தில் குறிப்பிடுகிறது:
திண்ணமாக எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ பிறகு எவ்விதத்திலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லையோ அவர்கள் தாம் ப+மியில் நடமாடும் படைப்புகளிலேயே அல்லாஹ் விடத்தில் மிகவும் மோசமானவர்கள்" (8 : 55)
இறைநம்பிக்கை கொள்வதுடன் நல்ல அமல்கள் செய்துவதும் இணைத்தே சொல்லப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. அப்படிச் செயல்படும் முஸ்லிம்களைக் குறித்தே, அவர்கள் படைப்பினங்களிலேயே சிறந்தவர்கள்., அவர்களுக்காக அல்லாஹ் சுவனத் தோட்டங்களைத் தயார் செய்துவைத்துள்ளான்., அங்கு அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்வார்கள்.,அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். அவர்கள் செய்த நற்செயல்களை ஏற்றுக்கொள்கிறான் என்றும் புகழ்ந்துரைக்கப் பட்டுள்ளது.
சுவனவாசிகள் பேரானந்தம் அடைவர். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மேலான நன்மைகளைப் பொருந்திக் கொள்வர். இது எவ்வளவு மகத்தான அந்தஸ்து! இவ்வுலகில் அவர்கள், அல்லாஹ் வுக்கு அஞ்சி தீமைகள் செய்யாது நன்மைகள் ஆற்றி வாழ்ந்ததுவே இதற்குக் காரணம்.
கவனிக்க வேண்டிய கருத்துகள்
1) முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மனித குலம் முழுவதற்கும் அனுப்பப்பட்ட இறுதி நபி.
2) ஒரிறை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.,ஒரே இறையை மட்டுமே வணங்க வேண்டும் என்பதுதான் மனித குலம் முழுவதற்கும் இறைவன் அளித்த கட்டளை.
3) இஸ்லாம் மட்டுமே சத்திய மார்க்கம். ஏனைய மதங்கள் அனைத்தும் போலியானவை.
4) இறைமறுப்பாளர்கள்தான் படைப்பினங்களிலேயே மிகக் கெட்டவர்கள். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். இறைநம்பிக்கை கொண்டு நல்ல அமல்கள் செய்யும் முஸ்லிம்கள்தான் படைப்பினங்களிலேயே மிகச் சிறந்தவர்கள். அவர்கள் சுவனபதியில் நிரந்தரமாகத் தங்கிவாழ்வார்கள்.
5) அல்லாஹ் சுவன வாசிகளைப் பொருந்திக்கொண்டான். அங்கு அவர்களுக்காகத் தயார் செய்து வைத்துள்ள மிக்க மேலான இன்ப நலன்கள் குறித்து அவர்களையும் பொருந்திக்கொள்ளச் செய்வான்.








If you have trouble viewing or submitting this form, you can fill it out online:
http://spreadsheets.google.com/viewform?formkey=dHQyWEZsR0x6SUhaYm80d1Q1Y1lEYXc6MA

Invite Your Friends

please kindly invite your friends to add this group
















0 comments:

Post a Comment