கொலை
--------------------------------------------------------------------------------
எவனேனும் ஒருவன், ஒர் இறை நம்பிக்கையாளனை வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். அதில் நிரந்தரமாக அவன் தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான். இன்னும், அவனைச் சபிக்கிறான். அல்லாஹ் அவனுக்காக மாபெரும் வேதனையையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 04:93)
அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள். இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபச்சாரமும் செய்யமாட்டார்கள் - எனவே, இவற்றைச் செய்கிறவர் தண்டனை அடைய நேரிடும்.
மறுமை நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும். இன்னும், அதில் இழிவாக்கப்பட்டவராக நிரந்தரமாகத் தங்கிவிடுவர்.
ஆனால், (அவர்களில் எவர்) பாவமீட்பு வேண்டி இறைநம்பிக்கையும் கொண்டு, நற்செய்கைகள் செய்கிறார்கள் - அவர்களின் பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 25:68-70)
இதன் காரணமாகவே, நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், ‘எவரொருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்' என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 5:32)
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும்போது -
‘‘எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?'' என்று (அல்குர்ஆன் 81:8-9)
அல்லாஹ் குர்ஆனில் கொலையின் கொடுமை பற்றி கூறுகிறான். அழிவின் பால் உங்களை இட்டுச் செல்லக்கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்ற நபிமொழியில் மூன்றாவதாக இடம் பெறுவது, நியாயமின்றி ஒருவனைக் கொலை செய்வது என்பதாகும். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் நாயன் என்று அழைக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:68)
என்ற குர்ஆன் வசனத்தை நபியவர்கள் ஓதிக் காட்டினார்கள். நூல்கள்: திர்மிதீ, நஸாயீ
இரண்டு முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாளுடன் சண்டை செய்தால், கொல்பவனும் கொல்லப்படுபவனும் நரகத்திலேயே இருப்பார்களென நபி(ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டவுடன், அல்லாஹ்வின் தூதரே! கொல்பவன் நரகத்திற்குப் போவது முறைதான்; கொல்லப்படுபவனுமம் ஏன் நரகத்திற்குப் போக வேண்டும்? எனக் கேட்கப்பட்டது கொல்லப்பட்டவனும் தன் சகோதரனைக் கொல்லும் எண்ணத்துடன் தானே சண்டையிட்டான்? என நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்
தங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பகைமை, உலக விவகாரம், தலைமைத்தனம் இவைகளுக்காகச் சண்டையிடும் முஸ்லிம்களுக்குத்தான் இந்த நபிமொழி எச்சரிக்கையளிக்கிறது. தற்காப்புக்காக, அல்லது தன் குடும்பத்தின் மானத்தைக் காப்பதற்காக, அல்லது திருடனைத் தாக்குவதற்காக வாளை ஏந்தும்போது ஒரு முஸ்லிம் நரகவாதியாகமாட்டான் என இமாம் அபூ சுலைமான் விளக்குகிறார்கள்.
சிலரின் கழுத்தைச் சிலர் வெட்டிக் கொல்லும் காஃபிர்களாக எனக்குப் பின்னால் மாறி விடாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
விலக்கப்பட்ட இரத்தத்தைச் சிந்தாமலிருக்கும் வரை (கொலை செய்யாமலிருக்கும் வரை) தன் மார்க்கத்தில் விசாலமாக (மகிழ்வுடன்) இருப்பான் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்கள்: புகாரீ, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா
ஒரு விசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதை விட அல்லாஹ்விடம் பயங்கரமானதாகும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, பைஹகீ, இஹ்பஹானீ, இப்னுமாஜா
அல்லாஹ்வுக்கு இணைவைத்தலும், கொலை செய்வதும், பொய்ச் சத்தியம் செய்வதும் பெரும்பாவங்களில் உள்ளவையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், நஸயீ
ஒவ்வொரு கொலை நடைபெறும் போதும் அதன் பாவத்திற்குச் சமமாக, முதல் கொலையைச் செய்த ஆதம்(அலை) அவர்களின் மகனுக்கும் பாவத்தில் பங்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
எவன், பாதுகாப்பளிக்கப்பட்டவனைக் கொன்றானோ அவன் சுவர்க்கத்தின் வாடையைப் பெற்றுக் கொள்ளமாட்டான்; சுவர்க்கத்தின் நறுமணம் நாற்பது வருடத் தொலைவுக்கு வீசிக் கொண்டிருக்கும் (புகாரீ) எனவும்,
எவன், பாதுகாப்பளிக்கப்பட்டவனைக் கொன்றானோ அவன் அல்லாஹ்வின் பாதுகாப்பை மீறியவனாகிறான், சுவர்க்கத்தின் வாடையை அவன் பெற்றுக் கொள்ளமாட்டான்; சுவர்க்கத்தின் ஐம்பது (வருட) கால தூரம் வரை வீசிக் கொண்டிருக்கும். நூல்: திர்மிதீ
மனமுரண்டாக ஒரு விசுவாசியைக் கொலை செய்த குற்றத்தையும், முர்தத்தாக (மதம் மாறி) இறந்த குற்றத்தையும் தவிர, ஏனைய குற்றங்களை அல்லாஹ் மன்னிக்கக் கூடும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்கள்: அபூதாவூத், நஸயீ, ஹாகிம், இப்னுஹிப்பான்,
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment