நிராகரிப்பிற்கும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி

யூஸ{ப் அல் கரளாவி

-----------------------------------------

சின்னஞ்சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்துதல்
அறிவு முதிர்ச்சியின்மையும், மத ஞானம் குன்றிய தன்மையும் காரணமாக பிரதான அம்சங்களை விட்டும், சிறுசிறு விவகாரங்களிலான ஈடுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இவை முழு உம்மாவினதும் தற்போதைய நிலைமை. அபிலாஷைகள், எதிர்காலம் முதலியன அனைத்திலும் பெரும் பாதிப்புகளை விளைவிக்கின்றன. தாடி வைத்திருத்தல், கணுக்காலின் கீழாக ஆடை அணிதல், தஷஹ{த்தின் போது விரலசைத்தல், புகைப்படங்கள் எடுத்தல் ஆகியன குறித்து தேவையற்ற வகையில் மிதமிஞ்சிய தர்க்க வாதங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

துரதிருஷ்டவசமாக, இரக்கம் ஏதும் இல்லாக் கொடூரம் வாய்ந்தனவாக எதிர்ச்சக்திகள் பல எம்மைப் பல புறத்திலிருந்தும் துவம்சம் செய்து வரும் இன்றைய நிலையில் இவ்வாறான வரட்டு வாதங்கள் தொடர்ந்தும் நிலவி வருவது மட்டுமின்றி, எமது சிந்தனையையும் ஆக்கிரமித்திருப்பது கவலைக்குரியது. கம்யூனிஸம், ஸியோனிஸம், கிறிஸ்தவம், மதச்சார்பின்மை முதலியன எம்மைத் தமது பிடிக்குள்ளாக்கி வருகின்றன. முஸ்லிம் உம்மாவின் வரலாற்று வழி வந்த இஸ்லாமிய பண்புகளை அழித்தொழிக்கும் வகையில் கிறிஸ்தவ மிஷனரிகள் புதியதொரு சிலுவை யுத்தத்தை நடாத்தி வருகின்றன. உலகின் பல்வேறு பாகங்களிலும் முஸ்லிம்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு வருகின்றார்கள். முஸ்லிம் அழைப்பாளர்கள் கேவலமான அச்சுறுத்தல்களுக்காளாக்கப்பட்டு வருகின்றார்கள்.
வியப்பூட்டும் வகையில், அதேவேளை கவலையூட்டும் வகையில் கல்வியும் செல்வமும் தேடியவர்களாக முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் முதலிய மேலைநாடுகளுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளோர் இப்படியான சின்னஞ்சிறு அம்சங்கள் மீதான தேவையற்ற விவாதங்களையும் தம்முடன் கொண்டு சென்றுள்ளமையைக் காண முடிகின்றது. ஆய்ந்து காணப்பட வேண்டிய அல்லது இஜ்திஹாதுக்கு விடப்பட வேண்டியனவான சிற்சிறு விவாகாரங்களைப் பெரிதுபடுத்தி முஸ்லிம்களிடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்தி வைக்கும் பிரச்சினைகளையும் வாதாட்டங்களையும் நான் நேரடியாகவே கண்டுள்ளேன். செவியேற்றும் உள்ளேன்.
சட்ட வல்லுனர்கள் நிச்சயமாக இவ்விவகாரங்களில் பல்வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிப்பர். மக்கள் அவை குறித்து என்றிருந்தேனும் ஒருமித்த கருத்தினைக் கொள்வரோ என்பதும் ஐயம். பிரயோசனமற்ற இச்சிறு பிரச்சினைகளில் தமது எதிர்காலத்தை விரயம் செய்வதனைக் கைவிட்டு, முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் தமது சக்தியையும் வளங்களையும், இஸ்லாத்தினை; சரிவர ஏற்று நடக்கவும், கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றவும் தடுக்கப்பட்டுள்ளனவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துவார்களாயின் நிச்சயம் அவற்றிலிருந்து பெரு நன்மைகள் விளையும். அதன் மூலம் இஸ்லாத்தின் பரம்பலுக்குப் புதுப்புது வழிமுறைகள் தோற்றம் பெறுவதனையும் அவர்கள் காண்பார்கள்.
சின்னஞ்சிறு விஷயங்கள் சம்பந்தமான பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தி விடுபவர்கள். முக்கியமான சமயக் கடமைகளை அலட்சியம் செய்பவர்களாக அறியப்பட்டிருக்கின்றமை. மேலும் கவலையூட்டும் ஓர் அம்சம். பெற்றோர் மீதான கருணை,அனுமதிக்கப்பட்டன, தடை செய்யப்பட்டன என்பன குறித்து தீவிரமாகப் பரிசீலனை செய்து பயிற்சியெடுத்தல், தத்தமது சொந்தக் கடமைகளையும் சரிவர நிறைவேற்றல் முதலிய விஷயங்களில் அலட்சியப் பாவத்துடன் நடந்து கொள்வர். தம்மைத்தாம் திருத்திக் கொள்ள முயலாதோராய், பிரச்னைகளைக் கிளறி விடுவதில் பெருமகிழ்ச்சி காணும் இவர்கள் இறுதியில் பகைவர்களாக அல்லது வஞ்சகர்களாக மாறி விடுகின்றனர். இவ்வாறான வீண் சச்சரவுகள் பற்றியதாகவே பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது. ''நேர்வழி காட்டப் பெற்றவர்கள் ஒரு போதும் சீர்கெட மாட்டார்கள். வாதங்கள் புரிந்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டார் ஒழிய.""
வேதங்கள் அருளப் பெற்றவர்கள் அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தை உட்கொள்வது ஆகும் என முன்னரும், இன்றைய கால கட்டத்திலும் எத்தனையோ ஃபத்வாக்கள் கொடுக்கப்பட்டிருந்தும் கூட, அது குறித்து முஸ்லிம்களை எச்சரிக்கை செய்பவர்கள் ஏராளம். எனினும், அதனிலும் பாரதூரமான பிரச்சினைகளைப் பொறுத்தமட்டில் இவர்களது சிந்தனையையும் நடவடிக்கைகளையும் காணும் போது விசமே ஏற்படுகின்றது. மேலும், உறுதியாகவே தடுக்கப்பட்டுள்ள அம்சங்களிலும் செய்கைகளிலும்ள அவர்கள் ஆழமான ஈடுபாடு கொண்டுள்ளமையையும் காணலாகும். இது ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஒரு மனிதரை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றது. நம்பிக்கைக்குரிய சில சகோதரர்களிடமிருந்து இந்த மனிதர் குறித்து நான் தெரிந்து கொண்டேன். யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களால் அறுக்கப்பட்டனவற்றின் மாமிசத்தை உட்கொள்வது தீயது என தெளிவாகவும் உரத்த குரலிலும் கோஷமெழுப்பி வாதாடுவார் அவர். எனினும் யூதர்களுடனும் கிறிஸ்தவர்களுடனும் ஒன்றாக அமர்ந்து எதனையும் சாப்பிடுவதிலும், மது அருந்திக் களிப்பதிலும் அவர் எவ்விதத் தயக்கமும் காட்டுவதில்லை.
இத்தகையோரான சில முஸ்லிம்களின் முற்றும் முரண்பட்ட செயற்பாடுகள் அப்த்-அல்லாஹ்-இப்ன்-உமர் (ரலி) அவர்களைச் சினங்கொள்ளச் செய்தது. பெரும் உயிர்த்தியாகியான ஹ{ஸைன் இப்ன் அலி (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த வேளை. ஈராக்கிய மனிதர் ஒருவர் அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரலி) அவர்களை அணுகி, கொசு ஒன்றனைக் கொல்வது ஹலாலோ, ஹராமோ என வினவி நின்றார். இமாம் அஹ்மத், தனது முஸ்னத் ல் கூறினார் :
நான் இப்னு உமருடன் அமர்ந்திருந்தேன். ஒரு மனிதர் வந்து கொசுவின் இரத்தம் குறித்துக் கேட்டார். (மற்றோர் அறிவிப்பின்படி, அந்த மனிதர் கொசு ஒன்றனை ஒரு மஹ்ரம் கொல்வது குறித்து வினவினார்). இப்னு உமர் அம்மனிதரிடம் கேட்டார் : ''நீர் எங்கிருந்து வருகின்றீர்?"" அம் மனிதர், ''ஈராக்கிலிருந்து"" என்றார். அப்போது இப்னு உமர் கூறினார் : ''இந்த மனிதரைப் பாருங்கள்! இவர்கள் (ஈராக்கியர்) அல்லாஹ்வின் தூதரது பேரரை (ஹ{ஸைன் இப்னு அலியை)க் கொன்று விட்டுள்ள நிலையில், இவர் கொசுவின் இரத்தம் குறித்துக் கேட்கின்றார். நபிகள் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். 'அவர்கள் (ஹஸன், ஹ{ஸைன்) இருவரும் இவ்வுலகில் எனக்கு இனிய மணம் தரும் இரு மலர்களாவர்.""

தடைகளை மிதமிஞ்சி விரிவுபடுத்தல்
இத்தகு நுனிப்புல் மேயும் தன்மையினதும்,இஸ்லாமிய சட்டவொழுங்கு முறைகள், அல் ஷரீஆ என்பன பற்றி அறிவீனத்தினதும் ஒருவகை வெளிப்பாடாக அமைவது, தடை செய்யப்பட்டனவற்றைத் தகாத முறையில் விரிவுபடுத்தி அமைப்பதாகும். குர்ஆனும், ஸ{ன்னாவும் இதற்கு எதிரான தெளிவான எச்சரிக்கைகளை விடுத்துள்ள நிலையில் அவ்வாறு செய்தல் தகுமானதல்ல. குர்ஆன் கூறுகின்றது :
உங்கள் நாவில் வந்தவாறெல்லாம், பொய் கூறுவதைப் போல் (எதைப்பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும், இது ஆகாது என்று அல்லாஹ்வின் மீது (அபாண்டமாகப்) பொய் கூறாதீர்கள். எவர்கள் அலலாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கின்றார்களோ, அவர்கள் நிச்சயமாகச் சித்தியடையவே மாட்டார்கள். (16:116)
நபிகள் (ஸல்) அவர்களின் தோழர்களும்,ஆரம்ப காலத்திய நேர்வழி காட்டப் பெற்றோரும் நிச்சயமாகவே தடுக்கப்பட்டனவென்று அறியாத நிலையில் எதனையும் தடை செய்யவில்லை. தம் விருப்பத்துக்கு ஒவ்வாதன ஏதும் நிகழ்ந்த விடத்து அவற்றுக்கு ஆதாரமாக எதனையும் கூறாது விட்டார்கள். அல்லது தமது வெறுப்பினைக் காட்டினார்கள். எனினும் ஒரு போதும் இறுதி முடிவாக அவற்றை ஹராம் எனக் கூறியதில்லை. தீவிரவாத்தோர் எதனையும் உடனடியாகவே தடை செய்யப்பட்டதெனக் கூறிவிடுவர். அவர்களது உள்நோக்கங்கள் நன்மையானவையாயின், இறைநம்பிக்கையும் முன்னெச்சரிக்கையும் அவர்களை வழி நடாத்தலாம். மாறாக, அவர்கள் அல்லாஹ் மட்டுமே அறிந்த சுயநல நோக்கங்களைக் கொண்டோராகவும் இருக்கலாம்.
இஸ்லாமிய சட்டவியல் துறையின் ஓர் அம்சம் சம்பந்தமாக இரண்டு கருத்துக்கள் காணப்பட, ஒன்று அதனை முபாஹ் என்றும், மற்றது மக்ரூஹ் என்றும் தெரிவிக்குமாயின், தீவிரத்தன்மையானவர் பின்னைய கருத்தையே ஏற்றுக் கொள்வார். ஒருவர் மக்ரூஹ் எனவும், மற்றொருவர் ஹராம் எனவும் தீர்ப்பளிப்பாராயின் இதிலும் பின்னைய கருத்தையே அவர் ஏற்பார். இரு அபிப்ராயங்கள் வழங்க, ஒன்று கருமங்களை இலகுவாக்கி வைப்பதாகவும், மற்றது கருமங்களை கடினமாக்கி வைப்பதாகவும் இருப்பின், அதிலும் பின்னையதையே அவர் ஏற்பார். அப்த்-அல்லாஹ்-இப்னு- உமரின் கடினமான அபிப்பராயங்களைத் தீவிரமாகப் பின்பற்றுவார்களேயொழிய இப்னு அப்பாஸின் இலகுபடுத்தும் கருத்துக்களை ஒரு போதும் ஏற்கார். இதற்க ஒரு முக்கிய காரணம்,இலகுபடுத்தி வைக்கும் அம்சங்கள் குறித்த கருத்துக்கள் பற்றிய அவர்களது அறியாமையுமாகும்.
இதனை விளக்கும் வகையில் நானே நேரடியாகக் கண்ட ஒரு சம்பவத்தை குறிக்க விரும்புகின்றேன். தீவிரத்தன்மை கொண்ட ஒருவரது முன்னிலையில் நின்ற வண்ணம் தண்ணீர் அருந்தினார் ஒரு மனிதர். முன்னவர் ஆவேசப்பட்டவராக, அந்த மனிதரை உடனே உட்கார்ந்து நீர் அருந்தும்படியும், நின்ற நிலையில் நீர் அருந்துவது நபிகளாரின் ஸ{ன்னாவுக்கு முரண்பட்டது என்றும் உரத்த குரலில் பேசலானார். தண்ணீர்அருந்திக் கொண்டிருந்த அந்த மனிதரால் பிரச்சினையைக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. குழப்பத்துக்குள்ளான அவர் இன்னமும் நின்ற நிலையிலேயே இருந்தார். அவர் ஓர் உண்மை முஸ்லிமாயின் வாந்தியெடுப்பதன் மூலம் தான் நின்ற நிலையில் குடித்த நீரை வெளியெடுத்து விட வேண்டும் எனக் கூறி நின்றார் முன்னவர். இந்தச் சந்தர்ப்பத்தில் அமைதியாகத் தலையீடு செய்த நான் அத்தீவிரவாதியை நோக்கிக் கூறினேன் : ''இத்தனை கடுமையாக நடந்து கொள்ள வேண்டுமளவு பாரதூரமானதல்ல இந்த விவகாரம். நின்ற நிலையில் நீர் அருந்துவது பிரச்னைக்குரியதாயினும் கூட, சின்னஞ்சிறு விஷயமேயாகும் அது. இந்தளவு கண்டனமும் கடூரமும் தேவையே இல்லை."" அவர் கூறினார் : ஆனால், அதனை முற்றாகக் கண்டிப்பதோடு, தவறுதலாக அவ்வாறு செய்யும் யாரும், வாந்தியெடுத்தேனும் அதனை வெளியாக்கி விட வேண்டும் என ஹதீஸ்கள் இருக்கின்றனவே..? அவருக்குப் பதிலளிக்கும் போது நான் கூறியன பின்வருமாறு : என்றாலும் கூட, நின்றி நிலையில் நீர் அருந்துவதனை அங்கீகரிப்பனவான அஹாதீஸ் கூடிய ஆதாரப்பூர்வமானவையாக அமைந்துள்ளன. எனவேதான் புஹாரீ,தனது தொகுப்பில் நின்ற நிலையில் நீர் அருந்துதல்"" என்ற ஓர் அதிகாரத்தை அமைத்து, அதில் இவற்றைச் சேர்த்துள்ளார். அதனைத் தடை செய்யும் எந்த ஒரு ஹதீஸையும் அவர் காட்டவில்லை. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அத்திர்மிதியும் ஏனையோரும் பல ஹதீஸ்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது விடைபெறும் ஹஜ்ஜின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் நீர் அருந்தினார்கள் என்பதும் உண்மையே. மேலும், எனக்குக் கிட்டியிருக்கும் ஓர் அறிவிப்பின்படி, அலி-இப்னு-அபீதாலிப் (ரலி), நின்ற நிலையில் தண்ணீர் அருந்தியவராகக் கூறினார் : ''நான் இப்போது செய்வதை நீங்கள் காண்பது போல, நின்ற நிலையில் நீர் அருந்துவதனைச் சிலர் விரும்புவதில்லை. என்றாலும் நபிகளார் இவ்வாறு செய்வதனை நான் கண்டேன்""17 அத்திர்மிதீ யும், நின்ற நிலையில் தண்ணீர் அருந்துவதனை நபிகள் (ஸல்) அவர்களின் ஏராளமான தோழர்களது கூற்றுக்களினதும் நடவடிக்கைகளினதும் ஆதாரத்துடன் அங்கீகாரம் செய்கின்றார். அத்திர்மிதீயின் அறிவிப்பின்படி, இப்னு உமர் கூறினார் : 'அல்லாஹ்வின் தூதர் (ஸல) அவர்களது காலத்தில் நாம் நடந்து திரிந்தவர்களாகச் சாப்பிடுவோம். நின்ற நிலையில் நீர் அருந்துவோம். மேலும் கப்ஷா கூறினார் : ஒருமுறை நான் நபிகளாரைக் கண்ட வேளை, அன்னார் தொங்கவிடப்பட்ட தோலாலான தண்ணீர்ப்பையொன்றிலிருந்து நீர் அருந்துவதனைக் கண்டேன்."18
மிக்க ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அறிவிப்பாளர்கள் அனைவரிடமிருந்தும் எமக்குக் கிட்டியுள்ள அறிவிப்புகளின் பிரகாரம் நிச்சயமாக, அமர்ந்திருக்கும் நிலையில் நீர் அருந்துவ வரவேற்கத்தக்கதொன்றாகக் குறிக்கப்பட்டிருப்பினும், நின்ற நிலையில் நீர் அருந்துவதெனத் தடை செய்வனவாக எதுவும் இல்லை. அந்த அறிஞர்களும் முன்னைய நிலையை ஆதரிக்கும் அஹாதீஸ் பின்னைய காலங்களில் ரத்தாகி விட்டன என்றும், அபூபக்கர், உமர், உத்மான், அலி ஆகியோரின் நடவடிக்கைகள் இதனை ஊர்ஜிதம் செய்கின்றன என்றும் காட்டுவர். எனவே இவ்வாறான தெளிவற்ற, சிக்கலான ஒரு விவகாரத்தின் பின்னணியில், நின்ற நிலையில் நீர் அருந்துவதும் ஒரு மனிதனைக் கண்டனத்துக்குள்ளாக்குதல் முறையான செய்கையாகாது. (பக்கம் : 55-60)

0 comments:

Post a Comment