சிந்திக்க சில நபிமொழிகள்

1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).


2)
மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121).

3)
ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481).

4)
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442).

5)
உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444).

6)
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).

7)
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).

8)
மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம்.

9)
இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.

10)
வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

11)
ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

12)
எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி.

13)
மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

14) ''
நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான். (2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

15)
பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி

16)
கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம்.

17)
பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.

18)
நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

19)
எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.

20) செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி).  நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

21)
நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான்.

22)
இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி.

23)
இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.

24)
தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

 

http://www.ottrumai.net/TArticles/29-LetUsThinkOnTheseHadhees.htm

 

 


மாரிஸ் புகைல் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு


2652739011_3d5615db62.jpg?v=0

ஒரு பிரான்ஸ் நாட்டவரும் மம்மியும் 1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது. இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார். பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது. உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார். அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக 'அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்." என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் 'பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே" என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். 'இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?" என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் 'மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?" 'முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?" 'முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?" போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். 'பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை" என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான். அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் 'உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்". என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக 'நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்" என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு 'அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு" எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம்

http://www.mujahidsrilanki.com/2010/08/மாரிஸ்-புகைல்-இஸ்லாத்ததை/




வாரி வழங்குவோம்.


مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ وَاللّهُ يُضَاعِفُ لِمَن يَشَاء وَاللّهُ وَاسِعٌ عَلِيمٌ {261}

2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்அறிந்தவன்.



நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரிவாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902

ரமளான் மாதத்தில் பெருமானார்(ஸல்) அவர்கள் சடைவடையாமல் தர்மம் செய்யக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதால் தான் மழைக்காற்றை விட வேகமாக வாரி வழங்குவார்கள் என்ற உதாரணத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் வர்ணித்துக் கூறி இருக்கின்றார்கள்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.

அவ்வாறு தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்குவதால் நம் பொருளாதாரம் ஒருப்போதும் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான்.

2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்அறிந்தவன்.

அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது,

1.       தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.

2.       தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.

மேற்காணும் இரண்டு நற்பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால்கீழ்காணும் விதம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் விஷயத்தில் ஏவியவைகளை செய்யவேண்டும்தடுத்தவைகளை தடுத்துக் கொள்ள வேண்டும்.  

ரமளான் மாதத்தில் சடைவடையாமல் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் உதவிக் கேட்டு வந்தவர்களை எதாவது ஒருக் காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பியதில்லை.

உதவி கோரியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து அனுப்புவார்கள் அவர்களிடத்தில் கொடுத்து உதவ ஏதுமில்லை என்றால் உதவிக் கோரியவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் தோழர்களிடத்தில் சென்று இவர்களுக்கு இயன்றளவு உதவி செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வார்கள்.

ஒருக் குழுவாக உதவி கேட்டு வந்தால் மிம்பரில் ஏறி நின்று மக்களை அழைத்து தான தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டும் திருமறைக் குர்ஆன் வசனங்களை எடுத்துக்கூறி உருக்கமாக உரை நிகழ்ததி மக்;களின் உள்ளங்களை அந்த ஏழைகளின் மீது ஈர்க்கச் செய்து விடுவார்கள்.

சிறிது நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளதை கொண்டு வந்து கொட்டி அவர்களின் பையை நிறைத்து அனுப்புவார்கள்.    

நபி(ஸல்)அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ்தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதைதன் தூதருடைய (என்னுடைய)நாவினால் நிறைவேற்றித் தருவான் எனக்கூறினார்கள். 1432. அபூமூஸா(ரலி) அறிவித்தார். 

இன்று நம்மில் பலர் கை வசம் எதுவும் இருந்தால் கொடுத்து உதவுகிறோம்,

கை வசம் எதுவும் இல்லை என்றால் இல்லை என்றுக் கூறி ஒதுங்கி விடுகிறோம்,

நம்மிடம் இருப்பு இல்லை என்றாலும் உதவிக் கோரி வந்தவர்களை நம்முடைய நண்பர்களிடம்உறவினர்களிடம்அல்லது உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்ய வேண்டும்அவர்களிடமும் எதுவும் கிடைக்க வில்லை என்றால் தொண்டு நிருவனங்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்;ய வேண்டும். இவ்வாறான எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நபி வழி.

இவ்வளவு தான் என்ற வறையரை.

இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று வறையருத்துக் கொடுப்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நம்முடைய பொருளாதாரத்தில் ஏற்படும் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக அமையும்.

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள் நூல் புகாரி 1433.

தடுத்துக் கொண்டால் ?

கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவதுமார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர்தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்துவிரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது. 1444 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

படிப்பினைகள்

அல்லாஹ்வுக்காகவென்ற சிந்தனையில் தானதர்மம்மற்றும் தஃவாப் பணிகளுக்கு வாரி வழங்கினால் வாரி வழங்குபவர்களின் பொருளாதாரத்தை அல்லாஹ் பல்கிப் பெருகச் செய்வான்.

இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் இதற்கு மேல் முடியாது என்று சிறயளவில் வழங்கினாலும்அதே அளவே அல்லாஹ்வும் வழங்குவான். கூடுதல் அபிவிருத்தயை எதிர் பார்க்க முடியாது.

கொடு;க்காமல் தடுத்துக் கொண்டால் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும்.

நோன்பு அல்லாஹ்வுக்குரியது என்று அல்லாஹ் கூறுவதால் அல்லாஹ்விற்காக நோன்பு நோற்றிருக்கும் புனித ரமளான் மாதத்தில் தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்கும் தியாகப் பணியில் ஈடுபட்டால் அவற்றிற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்குவான்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற அளவு தர்மம் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.