Dec
12

சுவனம் நோக்கிய பாதையில் இளைஞர்கள்

 
இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது இதற்கு  இஸ்லாத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா? என்றால் இல்லை  ஒவ்வொரு  குடும்பத்திலும் ஒரு இளைஞானவது சீரழிகிறான் இந்த சீரழிவிற்கு 2 காரணங்கள்  உள்ளன
 
ஒன்று தவறான நண்பர்கள் , இப்படிப்பட்ட நட்பின் காரணமாக அவர்களிடம்  கட்டுக்கடங்காத வேகமும் துணிச்சலும் நிறைந்துவிடுகிறது இதனை நன்முறையில் பயன்படுத்தினால் அவன் மிகச் சிறந்த மனிதனாக வரலாம் ஆனால் ஷைத்தான் அவனை சூழ்ந்துக்கொண்டு அவனை சிந்தனையை மறக்கடித்து விடுகிறான்!
 
மற்றொரு காரணம் இஸ்லாம் அவர்களை சென்றடைவதில் உள்ள சிக்கல்  
 
மனிதன் மஹ்ஷரில் வெற்றி பெற நபிகளாரின் அறிவுரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹ்சரின் கேள்விக் கணக்கைப்பற்றி கூறும்போது பின்வரும் 5 கேள்விகளை முன்வைத்தார்கள் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்றார்கள்
1) வாழ்நாளை எப்படி கழித்தான்,
2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்,
3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்,
4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்,
5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)
 
 
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க நாம் எம்மைத் தயாராக்குவதிலும், ஏனய இளைஞர்களைத் தயாராக்குவதிலும் எமது பங்களிப்பு என்ன?...
 
 
மறந்துவிட வேண்டாம், எம்மையும் ஏனய அனைவரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பது எம் ஒவ்வொருவரதும் கடமை.

0 comments:

Post a Comment