அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.
மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.
அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். "படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்."
Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது. "அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்" என்ற இவ்விடயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வுசெய்யளானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.
அதனைத் தொடர்ந்து "உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்." என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழிநுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவரையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார். அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.
1) தாயின் அடிவயிறு (Abdominal wall)
2) கருப்பையின் சுவர் (Uterine wall)
3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம் (Amniotic Membrane)
இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு "The Developing Human – மனித வளர்ச்சி" என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.
ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"It has been a great pleasure for me to help clarify statements in the Qur'an about human development. It's clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centuries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god." (Dr. Keith more) 
"அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விள்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனி (அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது." என்றார்.
நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதை என்றும் உணர்த்தி நிற்கும்.......... 
...ஆலிப் அலி...

இஸ்லாமிய மருத்துவ மேதை அலி இப்னு ஸீனாமுஸ்லிம் மருத்துவ வரலாற்றில் அலி இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. அவரது அல் கானூன் பீல் தீப் என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது, மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர்  என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார்.

எமது இளம் சந்ததியினர் மூதாதையர்  பற்றிய வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் குன்றியவர்களாக காணப்படுவது எதிர்காலத்தில் எமது வரலாற்றை நாம் சூன்யமாக்கிக்  கொள்ளக் கூடிய ஒரு பயங்கர நிலையை உருவாக்கிவிடலாம். எமது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதற்கு வரலாற்றில் வந்துபோன  நாயகர்களை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பதும், அவர்களின் பணிகளை நினைவு கூர்வதும் அவற்றை எமது சந்ததியினருக்கு எத்தி வைப்பதும் எமது கடமையாகும்.  எமது சமூகத்திற்காகப் பாடுபட்டு பணிகள் புரிந்த எமது முன்னோர் எமக்காக விட்டச் சென்றவைகள்  பற்றிய தெளிவை நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நினைவுபடுத்தி வைக்கப்பட வேண்டும். உலகில் முன்னுதாரணமாகத் திகழப்பட வேண்டிய  பலரது வாழ்க்கை வரலாறுகள் அவ்வப்போது எமது இளைய தலைமுறையினரால் மீட்டிப் பார்க்கப்பட வேண்டும். அந்த வகையில் அலி இப்னு ஸீனா அவர்களைப் பற்றி சுருக்கமானதொரு விளக்கத்தை இங்கே தருகின்றோம்.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஜாஹிலியக் காலப்பகுதி மருத்துவத்துறை இல்லாதிருந்த காலப் பகுதியாகும்.  நோய் சுகமாக்கும் துறைகளாக மாந்திரீகம், சூனியம்  போன்ற துறைகள் கையாளப்பட்ட காலம், சுகாதாரம், உடல் நலம் பேணுவதில் அக்கால சமூகம் அவ்வவு அக்கறை காட்டியதாக இல்லை.

இஸ்லாத்தின் வருகையின் பின் மனித சிருஷ்டியின் தோற்றம், உடலமைப்பு பற்றியெல்லாம் அல்குர்ஆன் முஸ்லிம்களைச்  சிந்திக்கத் தூண்டியமையும் பெருமானார். (ஸல்) அவர்கள் அவ்வப்போது நோய் நிவாரணிகள் பற்றி விளக்கியமையுமே மருத்துவத்துறையில் எண்ணற்ற முஸ்லிம் மேதைகள் உருவாகி ஆயிரக்கணக்கான ஆக்கங்களை வெளிப்படுத்தக் காரணமாக இருந்ததெனலாம். பெருமானார் (ஸல்) அவர்களின் நோய் நிவாரணிகள் பற்றிய ஹதீஸ்கள் திப்பு நவவியா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் அறிவியற்   பொற்காலமாக கி.பி. 750- 850 கொள்ளப்படுகின்றது.  இது அப்பாஸியக் காலப் பிரிவாகும். இக்காலப் பிரிவிலேயே பைத்துல் ஹிக்மா என்னும் மொழிப்பெயர்ப்பு நிலையம் நிறுவப்பட்டு விஞ்ஞானம், மருத்துவம், தத்துவம் சார்ந்த கிரேக்க நூற்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆரம்ப கால முஸ்லிம் அறிஞர்கள் கிரேக்க நூல்களின் மொழிபெயர்ப்பாளர்களாக மாத்திரம் அல்லாமல் அந்த நூல்களிலுள்ள தவறுகளை ஆராய்ந்து திருத்தியும் பல புதிய மருத்துவ, அறிவியல், கருத்துக்களைப் புகுத்தியும் மருத்துவ, அறிவியல் துறைகளுக்குத் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.

மருத்துவ விஞ்ஞானம் இன்றைய உன்னத நிலையை அடைவதற்குக் காரணமாக இருந்த அன்றைய அறிஞர்களுள் அலி இப்னு ஸீனா முக்கியமானவராவார். இவர் கி.பி. 980 ஆம் ஆண்டு மத்திய ஆசியாவில் இன்று உஸ்பெகிஸ்தான் என்றழைக்கப்படும் அன்றைய புகாரா என்ற இடத்தில் பிறந்தார், இவரது இயற்பெயர் அபூ அலி அல் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸீனா என்பதாகும். ஐரோப்பியர் இவரை அவிஸென்னா (Avicenna) என்றழைப்பர். அலி இப்னு ஸீனா என்ற அரபுப் பதம் ஹிப்ரூ மொழியில் அவென்ஸீனா என்று குறிப்பிடப்படுகின்றது. அவிஸென்னா என்பது இலத்தீன் மொழி வழக்காகும்.

பத்து வயதாகும்போதே அலி இப்னு ஸீனா அவர்கள் அல்குர்ஆனை  கற்றுத் தேர்ந்து, அரபு இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் தேர்சியும் பெற்றார். இருபதாம் வயதாகும்போது மருத்துவத்துறையில் மிகுந்த ஆற்றல் கொண்டிருந்தார். அதனால்  அப்பிரதேச ஆட்சியாளரின் நோயைக் குணமாக்கும் சந்தர்ப்பம் அலி இப்னு ஸீனா அவர்களுக்குக் கிட்டியது. அதுவே ஆட்சியாளரது  குடும்ப நூலகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை இவருக்களித்ததோடு கிரேக்கத்தின் தத்துவம், கணிதம் போன்றவற்றில்  அறிவையும் அரிஸ்டோட்டலின் பௌதீகவியலையும் வாசித்தறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.

 முஸ்லிம் மருத்துவ வரலாற்றில் இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு.அவரது `அல் கானூன் பீல் தீப்' என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது,  மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர்  என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார். ஐந்து பெரும் பாகங்களைக் கொண்ட கானூனின் முதற் பாகத்தில் வரை விலக்கணங்களும், மனித உடல், ஆன்மா, நோய்கள் பற்றியும் இரண்டாம் பாகத்தில் அகர வரிசையில் நோய்களுக்கான அறிகுறிகளும் மூன்றாம் பாகத்தில் கால்முதல் தலைவரை உள்ள உறுப்புக்களை பாதிக்கும் நோய்கள் பற்றிய விளக்கங்களும் பொது நோய்கள் பற்றிய குறிப்புகளும் ஐந்தாம் பாகத்தில் கலவை முறையான மருந்துகளும்  சிகிச்சை முறைகளும் அடக்கப்பட்டுள்ளன. மருத்துவம் பற்றிய கோட்பாடுகளே இந்நூலின் அடிப்படையாக இருந்தன.

கெலனின் நூலில் இடம்பெறாத பல விடயங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.  அதனாலேயே  `அல் கானூன் பீல் தீப்' 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தலைசிறந்த மருத்துவக் கலைக் களஞ்சியமாக ஐரோப்பியர்களால் போற்றப்பட்டு  வந்துள்ளது.

அலி இப்னு ஸீனா அவர்களின் மற்றுமொரு மருத்துவ நூல் `கிதாப் அஷ்ஷிபா'வாகும். அக்காலம் வரை உலகில் விருத்தியடைந்திருந்த அத்தனை அறிவையும் கிதாப் அஷ்ஷிபாவில் தொகுத்துத் தந்துள்ளார். இந் நூலின் முதற்பகுதியில்  தர்க்கவியல், பௌதீகவியல், கணிதம், அதீத பௌதீகம் என்ற நான்கு பிரிவுகளும் இரண்டாம் பகுதியில் உளவியல், தாவரவியல், விலங்கியல் என்பனவும் அடக்கப்பட்டுள்ளன.  பௌதீகவியல் பிரிவில் அண்டவியல்வளி மண்டலவியல், விண்வெளி நேரம், வெற்றிடம், இயக்கம் என்பன பற்றிய கோட்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.

அலி இப்னு ஸீனா அவர்களின் `உர்ஜுதா பித்  திப்' என்பது மருத்துவ கலை வளர்ச்சி பற்றி விளக்கும் கவிதை நூலாகும். இதுவும் ஐரோப்பியர்களால்  மதிக்கப்பட்ட ஒரு நூலாகக் கொள்ளப்படுகின்றது.  மருத்துவக் கலை பற்றி இவர் 19 நூற்களையும் ஏனைய  துறைகள் பற்றி 90 நூல்களையும் ஆக்கி உலகிற்கு அளித்துவிட்டு கி.பி. 1037 இல் தனது 57 ஆவது வயதில் ஹமதான்  என்ற இடத்தில் காலமானார்.

-ஐ.ஏ.ஸத்தார்சூரத்துல் ஆதியாத் (100)சூரத்துல் ஆதியாத் (100) மக்காவில் அருளப்பட்டது.


பொருள்

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகிற குதிரைகள் மீது சத்தியமாக!

(2) பின்னர் குழம்புகளில் இருந்து தீப்பொறியை எழுப்புகிற குதிரைகள் மீது சத்தியமாக!

(3) மேலும் அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி அதனால் புழுதியைக் கிளப்புகிற குதிரைகள் மீது சத்தியமாக!

(4) மேலும் கூட்டத்தின் நடுவே நுழைந்து விடும் குதிரைகள் மீது சத்தியமாக!

(5) உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(6) திண்ணமாக அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கிறான்.

(7) மேலும் அவன், செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டவனாக இருக்கிறான்.

(8) அவன் அறியமாட்டானா? (அதாவது) மண்ணறைகளில் அடக்கப்பட்டுள்ள அனைத்தும் வெளியே கொண்டு வரப்;பட்டால்,

(9) மேலும் நெஞ்சங்களில் மறைக்கப்பட்டு உள்ளவை அனைத்தும்; ஒன்றுதிரட்டப்பட்டால்,

(10) திண்ணமாக அவர்களின் இறைவன் அந்நாளில் அவர்களைப்; பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான் என்பதை!

 

இறைவழிப் போராளிகள் பயணிக்கும் குதிரைகள்; மீது சத்தியம் செய்வதைக் கொண்டு இந்த அத்தியாயம் தொடங்குகிறது.

அத்துடன் அந்தக் குதிரைகளின் பல்வேறு குணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.அந்தக் குதிரைகள் வேகமாகச் செல்கிற பொழுது அவற்றின் குழம்புகள் தரையிலுள்ள பொடிப்பொடிக் கற்களில் பட்டுத் தீப்பொறிகள் தெறிக்கின்றன.


போராளிகள் இவற்றின் மீதேறிப் புறப்பட்டுச் சென்று அதிகாலையில் எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். அதனால் அதிகாலை நேரத்தில், காணும் திசை எங்கும் புழுதி மண்டலம்! மேலும் அந்தக் குதிரைகள் எதிரிகளின் அணிகளைப் பிளந்து கொண்டு ஊடுருவிச் செல்வதற்கு எத்தனிக்கின்றன! - குதிரைகள் பற்றிய இந்த வர்ணனை, போராளிகளின் வீரத்தைப் பறை சாற்று வதாகும்.

இந்தத் தொடர் சத்தியங்களுக்குப் பின்னணியில் மனிதனின் தீய குணங்கள் சில இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன. அதற்குத் தெளிவான கருத்துப் பொருத்தமும் உள்ளது.


அல்லாஹ் பொழியும் அருட்கொடைகளை அனுபவிப்பதை மனிதன் ஒப்புக்கொள்வதில்லை. அல்லாஹ்விடம் இருந்து அவனுக்குக் கிடைக்கும் எண்ணற்ற நலன்களையும் நன்மைகளையும் அவன் மறந்து விடுகிறான். அவன் மேற்கொள்ளும் நிலைப்பாடு களும் செயல்பாடுகளுமே அதற்குச் சாட்சி!


மனிதன் செல்வத்தை அளவுகடந்து நேசிக்கிறான். அதுவே தவறான வழிகளில் பணம் சம்பாதிக்குமாறு பல்வேறு காலகட்டங் களில் அவனைத் தூண்டுகிறது.


மேலும் பணத்தைத் திரட்டுவது எப்படி? சம்பாதிப்பது எப்படி? சேமிப்பது எப்படி என்றே எந்நேரமும் மனிதன் சிந்திக்கிறான். அதனால் இறைவழிபாட்டில் அவனது ஈடுபாடு குறைந்து விடுகிறது.

இத்தகைய போக்கு ஆபத்தானது என்று மனிதனை அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். மறுமை நாளினை நினைத்துப் பார்க்கும் படியும் அன்று மக்கள் மண்ணறைகளில் இருந்து வெளியேறி வருவதை எண்ணிப் பார்க்கும்படியும் அவனிடம் கூறுகிறான்.


அந்நாளில் மக்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டி உலகத்தில் அவர்கள் செய்த செயல்களையும் பேசிய பேச்சுகளை யும் ஏற்றிருந்த கொள்கைகளையும் அவர்கள் முன்னிலையில் சமர்ப் பித்து அவற்றின் பேரில் கேள்வி கணக்கு கேட்பான்.

அந்த மறுமை நாளில் பணமோ, உயர் பதவிகளோ எந்தப் பயனும் அளிக்க மாட்டாது. நல்ல அமல்கள்தாம் நற்பயன் அளிக்க வல்லவை.


கவனிக்க வேண்டிய கருத்துகள்

1) அல்லாஹ்வின் பாதையில் (தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது) எனும் ஜிஹாதின் சிறப்பு மகத்தானது.

2) இறையருட்கொடைகளை மறுக்கும் மனிதன் தனக்குத் தானே அநீதி இழைத்தவனாகிறான்.

3) உலகின் சுகபோகங்களையே மனிதன் அதிகம் நேசிக்கிறான்.

4) மறுமை நாளில் மண்ணறைகளில் இருந்து மனிதர்களை அல்லாஹ் வெளியேற்றுவான்.அவர்கள் செய்த அமல்களை ஒன்று திரட்டி கேள்வி - கணக்கு கேட்பான்.


ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களுடன் ஒரு சிறை அனுபவம்"நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்கமாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத்திற்குரியது.".......

 

உடலைப் பலவீனப்படுத்தும் நோய்களையும் யூத வெஞ்சிறையில் கொடிய சித்திரவதைகளையும் பொருட்படுத்தாமல் பிறந்த மண்ணிற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் உயிர் நாடியாகத் திகழ்ந்த அஹ்மத் யாஸீன் அவர்களுடன் சிறையில் ஐந்து மாதங்கள் உடனிருந்து சேவை புரிந்த சிறைத்தோழர் முஹ்ஸின் அபூ அய்துவா அவர்கள் அந்த வீரத்தியாகி மரணமடைந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவருடனான சிறை அனுபவ நினைவலைகளை பத்திரிகை உல கோடு பகிர்ந்துகொள்கிறார்.

பதற்றப்படாத உள்ளமும் வார்த் தைகளால் விபரிக்க முடியாத துணிவும் கொண்ட ஒரு மாமனிதரின் முன்னால் நிற்கிறேன் என்ற எண்ணம் எனக்கு பல முறை ஏற்பட்டதுண்டு. உடல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தா லும் அவருடைய சிந்தனைகளுக்கோ அறிவுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்பட வில்லை. தெளிவான சிந்தனைகளும் சீரிய பார்வையும் அவரை பிற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இஸ்லரேலியக் கொடூரங்கள் அக்கிரமமான ஏகாதிபத்திய ஆசைகள் ஆகியவற்றின் அஸ்திவாரத்தை தகர்த் தெறிவதுதான் அவருடைய உறுதியான சிந்தனையாக இருந்தது. இதுதான் அவரை பிற தலைவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தியது.

இதுவரை கண்டிராத இடையாராத போராட்ட வீரியம் கொண்ட உருக்கு மனிதராக ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்கள் திகழ்ந்தாலும் ஒரு மலரின் தூய்மையைப் போன்றவர் அவர். அதிசயிக்கத்தக்க குணநலன்களைக் கொண்ட அந்த மனிதரையும் தங்களுக்கேற்பட்ட அவமதிப்பிற்கு (பலஸ்தீன் பூமியை இஸ்ரேல் அபகரித்தது) செங்குருதியால் பதிலளிக்கும் அவர்களு டைய தோழர்களையும் பற்றி வார்த்தைகளால் விபரிப்பது எங்களது மொழி யில் முடியாத ஒன்று. ஆனாலும் முன்னோர்களைப் பற்றிய நினைவலை களை அவர்களைப் பின்தொடர்வோர் தங்களது நாவின் மூலம் உயிர்ப்பிப்பது அவர்களுக்கு செய்யும் செஞ்சோற்றுக் கடனாகும்.

* தங்களுடைய கட்டுரைகளில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத துணிவு கொண்ட ஒரு மாமனிதர் என்று ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களை நீங் கள் குறிப்பிடுகிறீர்கள். உங்களது ஐந்து மாத சிறை வாழ்க்கையில் இத்தகைய உவமையைப் போன்று ஏதேனும் நிகழ்வுகளை அவரிடம் கண்டீர்களா?

இது சம்பந்தமாக நான் கூற விரும்புவது என்னவென்றால் ஷெய்க் அஹ் மத் யாஸீன் அவர்களைப் பற்றி அவர் களுடைய ஆதரவாளர்களும் நண்பர் களும் கூறுவதைவிட அவர்களின் எதிரிகள் கூட ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர் களின் நெஞ்சுறுதியையும் அவர்கள் தாம் கொண்ட இலட்சியத்தில்- வார்த்தை களால் விபரிக்க முடியாத உறுதியையும் அங்கீகரித்தார்கள். இது சம்பந்தமாக அவர்களுடனான இரண்டு அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கி றேன்.

நானும் ஷெய்க் அவர்களும் செய்த குற்றத்தின் விசாரணை நாடகத்திற்குப் பின் நாங்கள் இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்படவேண்டுமென்ற தீர்ப்பை நான் அறிந்தேன். ஷெய்க் அவர்களின் அருகாமை எனக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தியது. ஆனாலும் நோயா ளியான ஒரு மனிதருக்கு சிறைத் தண்டனை அளித்ததை அறிந்து நான் நிலைகுலைந்தேன், சிறைஅதிகாரி யோடு நான் வாதிட்டேன்.

"வயோதிபரான ஒரு நிரபராதியை சிறையில் அடைக்கும் அளவுக்கும் மனி தத் தன்மை இழந்தவரா நீங்கள்?" என்று நான் கேட்டபோது அந்த நபர் இவ் வாறு பதிலளித்தார். "உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நடக்கக் கூட இய லாத இந்த மனிதரை இனியும் சிறையில் அடைத்து எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் அவருடைய மூளையையும் கேடுகெட்ட அறிவையும் தான் சிறைவைக்கிறோம்".

ஷெய்க் அவர்களை உடல்ரீதியாக சித்திரவதை செய்வதைக் கண்டு பொருக்க இயலாத நான் அந்த சிறை அதிகாரியிடம் கேட்டேன், "எதற்காக அந்த நோயா ளியான மனிதரை துன் புறுத்துகிறீர்கள். ஒரு ஊனமுற்றவரை அடித்து துன்பு றுத்துவதன் மூலம் உங்கள் வீரத்தை வெளிப்படுத்துகின்றீர்களா?" என்று. அதற்கு அந்த சிறை அதிகாரி கூறினான், "யார் கூறினார் இவர் நோயாளி என்று. அவருடைய தலையும் மூளையும் ஆரோக்கியமாக வல்லவா இருக் கின்றது" என்று.

 சுருக்கமாகக் கூறினால் தான் கொண்ட இலட்சியத்திற்காக எந்த எல்லை வரை செல்லவும் எத்தகைய சித்திரவதைகளையும் தாங்கவும் உறுதிபடைத்த ஷெய்க் அவர்களின் தியாக மனநிலையை எதிரிகள்கூட அங்கீக ரித்தார்கள் என்பதுதான்.

* ஏதேனும் காரியங்களுக்காக ஷெய்க் அவர்களை எதிரிகள், பயமு றுத்தல், சித்திரவதை செய்தல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத் தியதை உங்களால் நினைவுகூற இயலுமா?

முடியும் என்பது மட்டுமல்ல. ஒன்றிற்கு மேற்பட்ட தடவை சிறை உயரதிகாரி களின் விலை குறைந்த மிரட்டல் தந்திரங்களையும் கேடு கெட்ட ஆசை வார்த்தைகளையும் ஷெய்க் அவர்கள் சந்தித்ததுண்டு. ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்ற ஈலாத் ஸெய்பூன் என்ற இஸ்ரேலிய இராணுவ வீரனைப் பற்றிய விபரமளிக்க வேண்டி சிறை அதிகாரிகள் ஷெய்க் அவர்களை நிர்ப்பந் தப்படுத்தினார்கள்.

ஷெய்க் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்துமா றும் அவ்வாறு செய்தால் உலகத்தில் அவர் விரும்பும் எந்தப் பகுதியிலும் சுகபோகமாக வாழ்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் காட்டினர். ஆனால், எவராலும் அழிக்க இயலாத மன உறுதியுடன் பளிச்சிடும் உறுதியான வார்த்தைகளால் ஷெய்க் அவர்கள் அளித்த பதில் ஒவ்வொரு பலஸ்தீன சகோதரனும் மன தில் பூட்டிப் பாது காக்க வேண்டியவை.

"நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்படவேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்க மாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத் திற் குரியது.

சிறைக்கு வெளியேயுள்ள ஓர் அனுபவத்தைக் கூறுகிறேன். சில அமெரிக்க அறபு தலைவர்கள் இஸ்ரேல் உலவுத் துறை வட்டாரங்களின் சதித்திட்டங் களைப் பற்றிய இரகசியத் தகவலை அளித்தார்கள். ஷெய்க் அவர்கள் அமெ ரிக்காவின் உதவிக்கு இவ்வாறு பதில ளித்தார்கள்: "எவரும் எனக்காக வருந்த வேண்டிய தேவையில்லை. தற்காப் புப் போரைப் பற்றிய பூரண அறி வோடுதான் நாங்கள் இந்தப் பணியை ஏற்று செயல்படுத்தத் துவங்கியிருக் கிறோம். நாங்கள் இப்பணியைத் துவக் கிவைத்தது சொந்த நாட்டிற்காக இரத்த சாட்சிகளாக மாறத்தான்".

தொடர்ந்து அவர் கூறிய வார்த்தைகள் யூத ஸியோனிஸ்டுகளின் காதுகளில் இடிமுழக்கமாக இறங்கக் கூடியவை. பலஸ்தீனிலுள்ள பிஞ்சுக் குழந்தைக ளின் குருதியா உங்கள் வயிற்றுக்கு விருப்பமானது? என்னை மட்டும் எதற் காக இந்தப் பூவுலகில் மீதம் வைத்துள்ளீர்கள்? பிறக்கும் பொழுதே கஷ்டங் களைத் தாங்குவதற்கு விதிக்கப்பட் அந்தக் குழந்தைகளின் ஆன்மா வைக் காட்டிலும் என்னுடைய ஆன்மாவிற்கு மதிப்பொன்றுமில்லை.

நீங்கள் என்னைத்தான் கொல்ல முயல்கின்றீர்கள் என்றால் அதற்காக நீங்கள் சிரமப்படத் தேவையில்லை. உங்கள் இலக்கு நானென்றால் அது ஒருபோதும் தவறாது. என்னுடைய ஒவ்வொரு நகர்வும் எல்லோரும் அறி யும் விதமாகப் பகிரங்கமானது. உங்களுடைய கரங்களால் கொல்லப்பட வேண்டும் என்பதே எனது இறுதி இலட்சியம்.

நாங்கள் நெஞ்சுறுதியின் உடன் பிறப்புக்கள். போராட்டத்தின் தீப் பிழம்புகள் சிதறும் தலைமுறையின் உற்ற நண்பர்கள். தன்மானத்தின் பாதுகாப்பிற்கா கத்தான் போர் செய்யும் உறுதி பூண்டிருக்கிறோம் என்று அமெ ரிக்க அறபு லகத்தோடு கூறுங்கள்.

* தன்னைப் பீடித்திருக்கும் நோய்களோடு ஷெய்க் அவர்கள் எவ்வாறு சிறைக் கொட்டகையில் மன ரீதியான, உடல் ரீதியான சித்திர வதைகளை எதிர் கொண்டார்கள்?

உண்மையில் என்னவென்றால் ஒருநாள் கூட ஷெய்க் அவர்கள் தனக்கு ஏற் படும் சிரமங்கள் குறித்து குறைபட்டுக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பின் தொடரும் நோய்களுடனேயே எப்பொழுதும் உதட்டில் புன்சிரிப் போடும் இருப்பார்கள். வெறுப்பு அல்லது பொறுக்க இயலாத தன்மையின் ஒரு அம்சம்கூட அவர்களின் ஜொலிக்கும் முகத்திலோ அல்லது அமைதியான வார்த்தைகளிலோ வெளிப்படாது.

அலை அடங்கிய கடல் போன்ற உள்ளமும், சாந்த கம்பீர முகமும்தான் அவர் களுடைய அடையாளம். உதடுகள் எப்பொழுதும் பிரார்த்தனையிலேயே இருக்கும். அல்குர்ஆன் தான் அவர்களுடைய மொழி. அதன் காரணமாகத் தானோ என்னவோ அவருடைய மார்க்க-அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு போதும் பிழைகள் நிகழாதது. அதேபோலவே அவர் சோதனைகளை உறுதி யோடு எதிர்கொண்டதும் என்று என்னால் கூற இயலும்.

ஜமாஅத்தாக தொழுவதற்குக் கூட இயலாத ஒரு குறுகிய இடத்தில்தான் நானும் ஷெய்க் அவர்களும் இன்னொரு சகோதரரும் அடைக்கப்பட்டிருந் தோம். வடக்கு பலஸ்தீனில் ஒரு மறைவான தரக்குறைவான சிறைக் கூட மாக இருந்தது அது. உடம்புகளிலுள்ள எழும்புகளைக்கூட துளைக்கும் கடும் குளிர் நிலவும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் போர்த்துவதற்கு ஒரு போர்வைகூட இல்லாமல் அந்த நோயாளியான வயோதிப மனிதர் கழித்தது, ஐந்து மாதங்கள். ஒலிவ் மரங்கள்கூட குளிர்ந்து விறைத்துப் போய் நிற்கும் அந்தத் துன்புறுத்தும் இரவுகளில் கதவுகள்கூட இல்லாத இரும்பு ஜன்னல் களைக் கொண்ட அந்தக் குறுகிய அறையில் தங்குவதற்கு நேர்ந்த பிறகும் ஷெய்க் அவர்கள் எந்தக் குறைகளையும் முறையிடத் தயாரானதில்லை.

அதுமட்டுமல்ல, அந்தச் சிறையில் எங்கள் மூன்றுபேரைத் தவிர மற்ற அனை வருக்கும் போர்வை வழங்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் யூதர்கள். இதுபற்றி நான் ஷெய்க் அவர்களிடம் "பிற சிறைக்கைதிகளுக்கு போர்வை வழங்கப்பட் டுள்ளது, நமக்கு வழங்கப்படவில்லை. இதனைக் கேட்பது நமது உரிமையல் லவா? என்று கேட்டேன். அதற்கு ஷெய்க் அவர்கள் அளித்த பதில், நாம் வசிப் பது சிறைக் கூடத்தில், நட்சத்திர ஹோட்டலிலல்ல.

இன்னொரு சூழலில் சிறைக் கைதிகளிடம் காட்டுமிராண்டித்தனமான முறை யில் நடந்துகொள்ளும் ஸியோனிஸ்டுகளின் மறுக்கும் நட வடிக்கைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு ஷெய்க் அவர்களிடம் ஒப்புதல் கேட்ட பொழுது ஷெய்க் அவர்கள் கூறினார்கள், "நாம் இருப்பது சிறைக்கூடத்தில். மனிதத் தன்மையை இழந்துவிட்ட எதிரிகளிடம் உரிமை யைக் கோருவது என்பது முட்டாள்த்தனம் என்பதைத் தவிர வேறு என்ன? நீங்கள் உண்ணாவிரதம் இருந்துகொள்ளுங்கள். அதில் நான் கலந்துகொள்ள மாட்டேன்" என்று.

* விசாரணைகளை ஷெய்க் அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?

விசாரணையின்போது ஷெய்க் அவர்களைப் பின்தொடர எங்களுக்கு அனுமதி யில்லாததால் விசாரணைக் கூண்டில் ஷெய்க் அவர்களின் பதில் எவ்வாறு இருந்தது என்பதை அறிய எங்களால் இயலாதுபோனது. ஆனாலும் விசார ணைக்கு முந்திய இரவில் ஷெய்க் அவர்கள் பூரணமாக விசாரணைக்குத் தயாராவார்கள். தன்மானம் ஜொலிக்கும் முகத்தைக் கொண்டவர்களாக ஷெய்க் அவர்கள் அவ்வேளை களில் திகழ்வார்கள்.

கடினமான மூலநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அதிகமான இரத்தம் வெளி யாகும். மேலும் பொறுக்க இயலாத வேதனையும் அவர்களுக்கு ஏற்படும். இதனால் அவர்கள் சில மாத்திரைகளை உட்கொண்ட பிறகே விசாரணையை சந்திக்கச் செல்வார்கள். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பிறரின் உதவி தேவைப்படும். ஷெய்க் அவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் எதிரிகளிடம் தனக்கு உதவி புரிய அனுமதித்ததே இல்லை.

விசாரணைகளுக்கு முந்திய நாளே பிறரின் உதவி இல்லாமல்தான் இந்த மாத்திரைகளை உட்கொள்வார்கள். அல்லாஹ்வின் எதிரிகளிடமிருந்து ஒரு மிடர் தண்ணீர்கூட வாங்கிக் குடிக்காமல் இருப்பதற்கு விசாரணை தினங்க ளில் நோன்பிருக்கும் ஷெய்க் அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

* ஐந்துமாத சிறையனுபவமானாலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாட்க ளில் மனதைப் பாதித்த ஏதேனும் நிகழ்வுகள் பற்றிக் கூற இயலுமா?

ஐந்து மாதம் ஷெய்க் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததை நான் மிக பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தக் காலக்கட்டத்தில் மறக்கவிய லாப் பல சம்பவங்களும் நடந்தது. ஒரு நாட்காலியில் அமர்ந்து கட்டி லில் சாய்ந்துகொண்டுதான் ஷெய்க் அவர்கள் குர்ஆனை ஓதவும், சிறையில் அபூர்வ மாகக் கிடைக்கும் நூல்களையும் படிப்பார்கள். நூல்களின் பக்கங்களைப் புரட்ட சைகை காண்பிக்கும்பொழுது நான் அதனைப் புரட்டிக் கொடுப்பேன்.

ஒருமுறை நான் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாலும் களைப்பா லும் தூங்கிப் போனேன். திடீரென நான் தூக்கத்திலிருந்து விழித்தபோது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. ஷெய்க் அவர்கள் நூலின் பக்கத்தைப் புரட்ட தலையை அசைத்தவாறு தலையையும் நெஞ்சையும் புத்தகத்தின் அருகில் கொண்டு வந்து நாக்கை வெளியில் நீட்டி அதனால் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்ட முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். இது ஒருபோதும் மறக்கவியலா நிகழ்ச்சியாக இருந்தது.

அக்காட்சியினால் துக்கமும் குற்ற உணர்வும் ஆச்சரியமும் உள்ளத்தில் தோன்றவே நான் ஷெய்க் அவர்களிடம் கேட்டேன், ஏன் உதவிக்கு என்னை எழுப்பவில்லை?

அதற்கு ஷெய்க் அவர்கள் கூறியபதில் அவர்மீது நான் கொண்டிருந்த மதிப்பை பன்மடங்காக்கியது. ஷெய்க் அவர்கள் கூறினார்கள், "எனக்கு சுய மாக செய்ய முடியும் காரியத்தை நான்தான் செய்ய வேண்டுமென்று உறுதி கொண்டுள்ளேன். உங்களுடைய உதவி மட்டும் இல்லாவிட்டாலும் தனியாக எழுந்துநிற்கவும் என்னால் இயலும்".

இதைகேட்ட எனக்கு சிரிப்பு தோன்றியது. பக்கவாத நோயால் பீடிக்கப்பட்ட, இருகால்களையும் பயன்படுத்த இயலாத அந்த முதியவர் கம்பை ஊன்றிய வாறு எழுந்து நடப்பதும், ஒரு அடியெடுத்து வைக்கும்போதே தரையில் வீழ்வதும் மீண்டும் அதிக ரித்த ஊக்கத்தோடு கம்பை ஊன்றிய வாறு எழுந்து நிற்பதையும் நான் காண்பதுண்டு.

சிறிது காலத்திற்குப் பின் அவருடைய இயக்கத் தோழர்கள் அவருக்கு சக்கர நாட்காலி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்கள். நோயினால் துன்புற்ற வேளையி லும் சிறையில் கொடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் அறி வைத் தேடுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை அந்த முதியவர் எங்களுக்குக் கற்பித்தார்.

நன்றி: www.meelparvai.net