சூரத்துஷ் ஷரஹ்

சூரத்துஷ் ஷரஹ் (94), மக்காவில் அருளப்பட்டது.

--------------------------------------------------------------------------------

பொருள்

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) (நபியே) நாம் உமது இதயத்தை உமக்கு விரிவாக்கித் தரவில்லையா?

(2) மேலும் உமது பெரும் சுமையை உம்மை விட்டு நாம் இறக்கிவைத்தோம்.

(3) அது, உமது முதுகை முறித்துக் கொண்டிருந்தது.

(4) மேலும் உமக்காக உமது புகழை நாம் உயர்த்தினோம்.

(5) உண்மையில் சிரமத்துடன் இலகு உள்ளது.

(6) திண்ணமாக சிரமத்துடன் இலகு உள்ளது.

(7) நீர் ஓய்வாக இருக்கும்போது வணக்க வழிபாட்டில்; முனைப்புடன் ஈடுபடுவீராக.

(8) மேலும் உமது இறைவன் பக்கமே ஆர்வம் கொள்வீராக!



சிறுவயது முதலே நபியவர்களை அல்லாஹ் பேணிப் பாதுகாத்து வந்தான். அதற்குக் காரணம், இஸ்லாத்தின் அழைப்பை மக்களிடம் நிறைவாக எடுத்துச் சொல்லும் நல்லாற்றலை நபி (ஸல்) அவர்கள் பெற வேண்டும் என்பதுதான். அது பற்றியே இந்த அத்தியாயம் எடுத்துரைக்கிறது. இது, முன்புள்ள அத்தியாயத்திற்கு ஒப்பான கருத்தே ஆகும்.

அல்லாஹ், நபிகளாரின் இதயத்தை நிறைவான இறைநம்பிக்கை மூலம் ஒளி பெறச்செய்து, தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றும் விஷயத்தில்; அவர்களுக்கு நல்லார்வம் ஊட்டு கிறான்;.

மக்கத்து குறைஷிகள் இறைநிராகரிப்புக் கொள்கையில் பிடிவாதமாக இருந்ததினாலும் பலவகையான நெருக்கடிகளை நபியவர்களுக்குக் கொடுத்து வந்ததாலும் நபியவர்கள் பெரிதும் கவலை அடைந்தார்கள். ஏனெனில் அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்றிட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் அவர்களுக்கு இருந்தது. இந்த அத்தியாயத்தின் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் ஆறுதல் அளித்து அவர்களின் மனக் கஷ்டங்களையும்; கவலைகளையும் அகற்றினான்.

மேலும் நபி(ஸல்) அவர்களின் பெயரையும் புகழையும் அல்லாஹ் உயர்த்தினான். இப்புவி எங்கும் பரவச் செய்தான். எல்லாக் காலமும் நிலைக்கச் செய்தான். இதோ! தினமும் ஐவேளை தொழுகைளிலும் சரி, தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கிலும் சரி, அல்லாஹ்வின் பெயருடன் நபியவர்களின் பெயரும் சேர்த்தே கூறப்படுகிறது. ப+மி உருண்டையின் சுழற்சியின் அடிப்படையில் பார்த்தால் உலகில் எந்நேரமும் எங்காவது ஒரு மூலையில் ஏதாவதொரு பள்ளிவாசலில் பாங்கோசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தொழுகையும் நபியவர்களின் மீதான ஸலவாத்தும் தொடர் நிகழ்வாகவே உள்ளன.

மேலும் நபியவர்களின் மீது ஸலவாத் சொல்லவும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து வாழவும் அவர்களை நேசிக்கவும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஆணையிட்டுள்ளான் இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த கண்ணியத்திற்கும் புகழுக்கும் சாட்சியாகும்.

மட்டுமல்ல அல்லாஹ் சங்கைக்குரிய தன் தூதருக்கு இவ்வாறு நல்வாக்கு அளித்தான். அதாவது மக்காவில் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையும் ஏழ்மையையும் நெருக்கடிகளையும் அகற்றுவதாகவும் செல்வச் செழிப்பையும் அமைதியையும் தருவதாகவும் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகை செய்வதாகவும் வாக்குறுதி அளித்தான். அந்த வாக்குறுதிகள் அனைத்;;;தையும் நிறைவேற்றவும் செய்தான்;.

ஆம், முஸ்லிம்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர், இஸ்லாம் பல பகுதிகளில் பரவிய பின்னர் எல்லாம் நிறைவேறின. இஸ்லாத்திற்கு வெற்றியையும் முஸ்லிம்களுக்கு ஆட்சியதிகாரத் தையும் நிம்மதியையும் அல்லாஹ் வழங்கினான்.

இத்தகைய அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்துமாறும் வணக்க வழிபாட்டில் ஆர்வத்துடனும் முனைப்புடனும் ஈடுபடு மாறும் நபியவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான். அதாவது, அழைப்புப் பணி தொடர்பான பகல் நேர ஈடுபாடுகள் முடிந்து விட்டால் இரவு நேரத்தில் தொழுகையில் நில்லுங்கள். அல்லாஹ்வின் உவப்பைப் பெறும் வகையில் ஆர்வத்துடன் வணங்கி வழிபடுங்கள்; என்று அறிவுரை கூறுகிறான்.

இந்த அத்தியாயத்தின் கட்டளைகள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் நிறைவாகச் செயல் படுத்தினார்கள்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்

1) அழைப்புப் பிரச்சாரப் பணியில் உளப்ப+ர்வமான ஈடுபாட்டையும் பிடிப்பையும் நபியவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான்;. தூதுச் செய்தியை முழுமையாக மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் நபியவர்களுக்கு நல்லுதவி அளித்தான்.

2) நபி (ஸல்) அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்தினான். அவர்களின் பெயரை இப்புவி எங்கும் பரவச் செய்தான். எல்லாக் காலமும் நிலைக்கச் செய்தான்.

3) இரட்சகனின் உவப்பை அடைய நாடி தொடர்ந்து வணக்க வழி பாட்டில் ஈடுபடுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.

0 comments:

Post a Comment