குர்ஆன் நிழலில்


முஸ்லிம்களாகிய நாம்,குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்பதை முழுமையாக நம்புகின்றோம்.ஆனால் அந்த அல்லாஹ்வுடைய வார்த்தையை நம்மில் பலர் தினந்தோறும் ஓதுவதில்லை.
நம்முடைய நாவு அல்லாஹ்வுடைய வார்த்தையை விரும்புவது உண்மையென்றால்???
அதை தினந்தோறும் கற்பதற்கும் ஓதுவதற்கும் தயாராவோம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்குர்ஆன் வர்ணிக்கும் மறுமை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..

"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
        
           அல்குர்ஆன்
73:14. அந்நாளில் பூமியும்இ மலைகளும் அதிர்ந்துஇ மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.

82:1. வானம் பிளந்து விடும்போது

82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது

82:4. கப்றுகள் திறக்கப்படும் போது

82:5. ஒவ்வோர் ஆத்மாவும்இ அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்ததுஇ எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

கைதேர்ந்த கட்டிடக் கலைப் பொறியாளர்களைப் போல் கூடு கட்டும் சிறிய பறவைகள்

haroon yahya

மரக்கிளைகளிலோ, கட்டிடங்களிலோ, சிலவேளைகளில் உங்களது வீட்டுப் பால்கனியின் மூலையிலோ சிறிய பறவைகள் கூடுகள் கட்டியிருப்பதை நிச்சயமாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இவைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கும் சில சாதாரண பறவையினங்களின் கூடுகளே. ஆனால் இந்த உலகில் வாழும் பறவையினங்களில் நீங்கள் அறியாத எண்ணற்ற பறவையினங்கள் முற்றிலும் வித்தியாசமான முறையில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. இந்த கூடுகளைப் பற்றி நாம் ஆய்வு செய்வோம்.

இஸ்லாமியப் பரம்பல் குறித்து Dr.Zakir Naik(02)




கேள்வி எண்: 5
முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் - பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.
பதில்:
உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி
விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் தவறான பிரச்சாரம் - இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கும் தவறாக விமரிசிக்கப்படுவதற்கும் காரணங்களாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நடந்த வெடி குண்டு விபத்தின் பின்னனியில் "மத்திய கிழக்கு நாடுகளின்" கைவரிசை இருக்கிறது என அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு செய்தன. ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்க காரணமாயிருந்த குற்றவாளி அமெரிக்காவின் ஆயுதபடையைச் சார்ந்த ஒருவன்தான் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.



இஸ்லாமியப் பரம்பல் குறித்து Dr.Zakir Naik (01)

கேள்வி எண்: 4
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.
பதில்:
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.