Dec
31

இஸ்லாமிய ஜனநாயகம்


இஸ்லாம் என்ற சொல்லாட்சி வரும் பொழுது மனித உரிமை மீறல்கள், பெண்ணுரிமை பறிப்பு என்பது போல அங்கு ''ஜனநாயகம் இல்லை"" என்ற கருத்தையும் சேர்த்து இஸ்லாத்தின் மீது சேறு பூசுவதுண்டு. உண்மையில் இந்த தலைப்பு குறித்து விவாதங்கள் நடத்தப்பட வேண்டும், இன்னும் முஸ்லிம் நாடுகள் தங்கள் நாடுகளில் ஜனநாயகம் நிலவுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்வதோடு, இதுவரைக்கும் அதனை நடைமுறைப்படுத்ததாதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். உண்மையில் ஜனநாயகம் குறித்த விவாதங்களின் இறுதி முடிவு வருங்கால முஸ்லிம் உம்மத்திற்கு மிகவும் அவசியமானதொன்று என்பதும், அதிலும் குறிப்பாக மேற்குலகில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும், அதன் இருப்புக்கும் முக்கியத்துவமிக்கதாகும்.
Dec
28

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்



ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-
அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?
ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?
இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?
ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?
Dec
20

ஷைத்தானுக்கு எதிரான இறைநம்பிக்கையார்களின் போர்ப் பிரகடனம்

 ஷைத்தான். அவனைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவன் ஒவ்வொரு நிமிடமும் நம்மை அழிவின் பக்கம் அழைத்துச் செல்வதில் குறியாகவே இருந்து கொண்டிருக்கின்றான். நிச்சயமாக, நாம் அவனுடன் போர் செய்த வண்ணமே இருந்து கொண்டிருக்கின்றோம்.
நீங்கள் காலையில் கண் விழித்துப் பார்க்கும் பொழுது, உங்களது குடும்பமே அழிவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கின்றது. உங்களைச் சுற்றிலும் எதிரிகள் தாக்குவதற்குச் சமயம் பார்த்து நின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் கடுமையான, கொடூரமாக ஆயுதங்களும் இருக்கின்றன. முற்றுகையிட்ட வண்ணம் உங்களைத் தாக்கும் நிமிடத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களது துப்பாக்கிகளும், டாங்குகளும் உங்களது வீட்டுக் கதவை நோக்கி திருப்பப்படுகின்றன. துப்பாக்கிகளின் விசையின் மீது விரல்கள், கட்டளைக்காகக் காத்திருக்கின்றன. அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? யாரை உதவிக்கு அழைப்பீர்கள்?
நிச்சயமாக, முஸ்லிம்களாகிய நம்மைக் குறிபார்த்தபடி எதிரிகளின் தோட்டாக்கள் 24 மணி நேரம் இருக்கின்றன, வாரம் முழுவதும், மாதம் முழுவதும் ஏன் நம் வாழ் நாள் முழுவதும், அந்த எதிரியின் கணைகள் நம்மைத் தொடர்ந்த வண்ணம் தானே இருக்கின்றது.

Dec
14

One Of The Lions Of Islam





 

 


Dec
14

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர் அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்


அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மஹ்ஷர் வெளி:
சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
Dec
13

இஸ்லாமிய அரசில் மனித உரிமைகள்


;1.      உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பு:
இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி(ஸல்) கூறினார்கள்:
(இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரை பறிக்கக் கூடாது.
முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹ்ம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஓரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக்கூடநுகர முடியாது.
2.      மனித மாண்பின் பாதுகாப்பு:
  குர்ஆன் கூறுகிறது:
          1.      ஒருவரையொருவர் பரிகாசம் புரியாதீர்.
          2.      அவதூறு கற்பிக்காதீர்
         3.      பட்டப்பெயர் சூட்டி இழிவுபடுத்தாதீர்.
          4.      புறங்கூறாதீர், தரக்குறைவாக பேசாதீர்.
Dec
13

Happy Eid Mubarak

 
Assalamu Alaikkum
 
Wishing
A
Happy Eid Mubarak
كل عام و أنتم بخير
 
 
 
                          ?ui=2&view=att&th=1252ebdf707aadf2&attid=0.1&disp=attd&realattid=ii_1252ebdf707aadf2&zw

Dec
13

புகைத்தல்- மெதுவாக நிகழும் தற்கொலை


புகைத்தல் பழக்கம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருக்கவில்லை. பிற்பட்ட காலத்தில் அது தோன்றிய போது அதன் யதார்த்தத்தையும், தீங்குகளையும் உடனே அறிஞர்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் பெரும்பாலான சன்மார்க்க அறிஞர்கள் புகைத்தல் ஹராம் என்றே தீர்ப்பளித்துள்ளனர். புகைத்தல் உண்மையில் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாகவுள்ளது.
'தீங்கிழைக்கக் கூடிய அனைத்தும் ஹராம்" என்பது இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுள் ஒன்று. இவ்வகையில் புகையிலையும் கூட மனிதனது உடல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு கேடுவிளைவிப்பதால் ஹராமான (தடுக்கப்பட்ட)வற்றின் பட்டியலில் உள்ளடக்கப்படுகின்றது. குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் முதலிய பல்வேறு சட்ட மூலாதாரங்க@டாக இது நிறுவப்பட்டுள்ளது.
அல்குர்ஆன்
நீங்கள் உங்களை அழித்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நன்மையே புரியுங்கள். நன்மை புரிபவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். (பகரா : 195)
Dec
13

சூரத்துல் பய்யினா (98),

உரை
பொருள்-
அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!
(1) வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பாளர்கள் தங்களது நிராகரிப்பிலிருந்து விலகக் கூடியவர்களாய் இருக்கவில்லை., தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை!
(2) தூய்மையான வேத நூல்களை ஓதிக் காண்பிக்கக் கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடம் இருந்து (வரும் வரை!)
(3) அவற்றில் முற்றிலும் செம்மையான - நிலையான சட்டங்கள் எழுதப்பட்டிருக்கும்.
Dec
13

துல் ஹஜ் 10 நாட்களின் சிறப்பு

சர்வப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனது அருளும் சாந்;தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் - தோழர்கள் மீதும் அனைவர் மீதும் உண்டாவதாக!
அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு - அவர்கள் அதிக அளவில் நல்லமல்களை மேற்கொள்ளும் வகையில் சில பருவ காலங்களை அமைத்துக்கொடுத்திருப்பது அவனுடைய கருணையே ஆகும் ! அத்தகைய பருவ காலங்களில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும்! இந்;நாட்களின் சிறப்புக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பல ஆதாரங் கள் உள்ளன!
Dec
13

நிராகரிப்பிற்கும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி

யூஸ{ப் அல் கரளாவி

-----------------------------------------

சின்னஞ்சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்துதல்
அறிவு முதிர்ச்சியின்மையும், மத ஞானம் குன்றிய தன்மையும் காரணமாக பிரதான அம்சங்களை விட்டும், சிறுசிறு விவகாரங்களிலான ஈடுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இவை முழு உம்மாவினதும் தற்போதைய நிலைமை. அபிலாஷைகள், எதிர்காலம் முதலியன அனைத்திலும் பெரும் பாதிப்புகளை விளைவிக்கின்றன. தாடி வைத்திருத்தல், கணுக்காலின் கீழாக ஆடை அணிதல், தஷஹ{த்தின் போது விரலசைத்தல், புகைப்படங்கள் எடுத்தல் ஆகியன குறித்து தேவையற்ற வகையில் மிதமிஞ்சிய தர்க்க வாதங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
Dec
13

புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது


 ஹாருன் யஹ்யா

CHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்;ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். 'குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய ஆபிரிக்க நாடான  (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. 'மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்'; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது:
'புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது கருத்துகளை அழித்து விட கூடும்'; (1)
ஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல் லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்:
'இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்'. (2)

இவ்வாறு சொல்ல காரணம் இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)

1920 ஆண்டிலிருந்து Australopithecus சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம் மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன. உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus  ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும், மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus  , உண்மையில் 'மனிதனை போன்று' உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது

இதில் முக்கியமாக : முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும் வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, 'குரங்கிலிருந்து மனிதன்' வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும், முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மனிதன் அவனுக்கு பின்னால் எத்தகைய பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான். வேறு வகையில் சொல்வதானால், அவன் படைக்கப்பட்டான்.

நேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield  ஜோன் வில்ட்பீல்ட், 'மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்ற கட்டுரையில், வாஷிங்டன் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:

நான் 1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் : குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு போன்றேயுள்ளது.

தற்போது மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும் விவாதிக்கப்படுகிறார்கள். (3)
நேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான எழுதுகிறார்:

முடிவு எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை .முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது, எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது இப்போது உணரப்பட்டுள்ளது. (4)

சுருங்க கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும் 'குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு' விஞ்ஞான ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது. அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும் ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:

மனிதனின் தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று கொள்ள முடியாத வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின் பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது. (5)

டார்வினின் கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம் நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் விட முக்கியமான உண்மையான நாம் வாழும் பிரபஞ்சம், அதிலுள்ளவைகள் அனைத்தையும் இறைவன் தான் படைத்தான் என்ற உண்மையின் பக்கம் விரைந்து வருகிறது.


ஆய்வில் உதவிய நூற்கள்

(1) John Whitfield, "Oldest member of human family found", Nature, 11 July 2002
(2)D.L. Parsell, "Skull Fossil From Chad Forces Rethinking of Human Origins", National Geographic News, July 10, 2002
(3) John Whitfield, "Oldest member of human family found", Nature, 11 July 2002
(4) The Guardian, 11 July 2002
(5) Jonathan Wells, Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong, Washington, DC, Regnery Publishing, 2000, p. 225


If you have trouble viewing or submitting this form, you can fill it out online:
http://spreadsheets.google.com/viewform?formkey=dHQyWEZsR0x6SUhaYm80d1Q1Y1lEYXc6MA

Invite Your Friends

please kindly invite your friends to add this group








Dec
13

இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகள்


                                                    தொடர்...(1)

------------------------------------------
 
இந்தப் பூமிப் பந்தை விட்டே இஸ்லாத்தைத் துடைத்து எறிந்து விடலாம் என்பது இஸ்லாத்தின் எதிரிகளது கனவாக இருந்து வருகின்றது. ஆனால் இவர்களது இந்தக் கனவு நிறைவேறாத ஒன்று என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள். எனவே, அவர்கள் இஸ்லாத்துடன் இணைந்து வாழ்வது தங்களால் சாத்தியமற்றது என்று கருதிக் கொண்டவர்களாக, சில சடங்கு சம்பிரதாயங்களுடன் பவனி வரும் கிறிஸ்தவத்தினைப் போல இஸ்லாமியர்களும் வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இன்னும் இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாம் இன்னதென்று வரையறை செய்து தருவதை, அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றார்கள். இந்த வகையில் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கடுமையாக அவர்கள் உழைத்ததன் விளைவு, இதில் அவர்கள் பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்கள். அந்த மூன்று நூற்றாண்டின் இடையறாத அவர்களின் உழைப்பின் காரணமாக போலியான இஸ்லாமிய அங்கத்தவர்களையும், புதிய பிரிவுகளையும், புதிய கொள்கைகள் மற்றும் இஸ்லாத்திற்குள்ளேயே கருத்துமுரண்பாடுள்ள அம்சங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றை உருவாக்கி விடுவதில் அவர்கள் வெற்றி பெற்றே இருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.

உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறிகளாகக் கடைபிடிக்கும் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைகள் ஆகியவற்றை விட்டும், முஸ்லிம்களை பாராமுகமாக்கி விட வேண்டும் என்று அவர்கள் ரகசியமான முறையில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது ஒன்றும் ரகசியமானதொன்றல்ல. கிறிஸ்தவத்தில் உள்ள மத வழிபாட்டு முறைகளைப் போன்று இஸ்லாத்திலும் இருக்குமென்று சொன்னால், அத்தகைய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்களே தவிர, உண்மையான இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

 

இஸ்லாத்தின் எதிரிகளை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.

(1) மதச்சார்பற்ற அடிப்படைவாதிகள்,

(2) யூத மற்றும் இந்து மத அடிப்படைவாதிகள், மற்றும்

(3) கிறிஸ்தவ அடிப்படைவாதிகள்.

இந்த மூன்று அணியினரும் இணைந்தும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொண்டும், அவரவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து அதற்கான பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டும் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தால் அமெரிக்க ஜனத்தொகையில் 4 சதவிகிதத்தினராகவும் அல்லது 10 மில்லியனுக்கும் குறைவான தொகையைக் கொண்டவர்களாகவுமே இருப்பார்கள். இருப்பினும், இந்த சிறு தொகையினரிடம் எல்லையில்லாத அதிகாரங்களும் மற்றும் மக்களை வசீகரிக்கும் தன்மையும் கூட உண்டு. இவர்களைத் தவிர்த்து ஏனைய 96 சதவீதத்தினர் கண்மூடிக் கொண்டு பின்பற்றும் அறியாமைச் சமூகமாகவும் இன்னும் இந்த இஸ்லாத்தின் எதிரிகள் சொல்வதை நம்பக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் மற்றும் அவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றிக் கொண்டிருக்கும் மக்களையும் எவ்வாறு பிரிக்க முடியுமென்று சொன்னால், இடையறாத அறிவூட்டும் நடவடிக்கையின் மூலமாக, பிரச்சாரப் பணிகளின் மூலமாக முஸ்லிம்களால் சாதிக்க முடியும்.

இஸ்லாத்தின் எதிரிகள் தங்களை உயர் தகுதிமிக்க அறிவாளிகளாக அதாவது, மருத்துவர், பேராசிரியர், ரெவரெண்ட், ஆய்வாளர் இன்னும் இது போன்ற பட்டங்களை முன்னிறுத்திக் கொண்டு தங்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்ளக் கூடியவராக இருக்கின்றார்கள். இன்னும் இவர்களது கருத்துக்களுக்கு இன்றைய ஊடகங்கள் அதிமுக்கியத்துவத்தையும் வழங்குவதோடு, இவர்களது கல்வித் தகுதி மற்றும் பின்னணி ஆகியவை அவர்கள் சொல்ல வருகின்ற கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பனவாகவும் உள்ளது. இதற்கு சில எடுத்துக்காட்டுக்களை நாம் இங்கு முன் வைக்கலாம், டாக்டர் ராபர்ட் மோரே, டாக்டர் அனிஸ் ஷார்ரோஷ், ரெவெரெண்ட் பாட் ராபர்ட்ஸன், ரெவரெண்ட் பில்லி கிரஹாம், பேராசிரியர் ஸாம் ஹண்டிங்டன், பேராசிரியர். டேனியல் பைப்ஸ் மற்றும் பலர்.

மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரை தங்களை சமூகத்தில் அறிவாளிகளாக இனங்காட்டிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் மதம் என்பது மக்களின் வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒன்று என்று கருதும் அதேவேளையில், மக்கள் தனிப்பட்ட முறையில் கடவுள் அல்லது பல கடவுகள்களின் மீது மத நம்பிக்கை கொள்வதனைச் சகித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் பலவீனமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக ஒரு கடவுளையோ அல்லது பல கடவுள்களையோ வணங்கக் கூடியவர்களாக இருக்கின்ற அதேவேளையில், தங்களது நம்பிக்கைக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசயில் வாழ்க்கைக்கும் தாங்கள் ஏற்று நம்பிக்கை கொண்டிருக்கின்ற கடவுள் கொள்கைக்கும் ஏதேனும் தொடர்பிருக்கின்றதா என்பதைக் கவனிப்பதில்லை, இவர்களில் அந்த மதங்களின் குருமார்களாகத் திகழக் கூடியவர்களும் அடங்குகின்றார்கள். இத்தகையவர்கள் குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிரிடையாக இருக்கின்றார்கள், ஏனெனில், இஸ்லாம் என்பது ஒரு கொள்கையுடன் பிணைக்கப்பட்ட சமூகச் சூழலை உருவாக்க விளைவதோடு, இதன் காரணமாக மதச்சார்ப்பற்ற கொள்கையுடன் போட்டி போடக் கூடியதாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே, இந்த மதச்சார்பற்ற கொள்கையுடையவர்களின் நோக்கமே இஸ்லாத்தினை முற்றாக அழித்து விட வேண்டும் என்பதேயாகும், இதற்கான தெளிவாக திட்டமும் அவர்களிடம் உண்டு. மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள மூன்று வகையினரில் இந்த மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளே எண்ணிக்கையில் அதிகம் இருப்பதோடு, மிகவும் பலம் வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். ஏனெனில், இந்தக் குழுவினரில் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், வியாபாரிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலைநாட்டுப் பொதுமக்களின் பெரும் பகுதியினர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தான் அரசாங்கச் சக்கரத்தை இயக்கக் கூடியவர்களாகவும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை அமைப்புகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்களாகவம், வங்கிகள், சர்வதேச வணிகத் தளங்கள், அறிவாளிகளின் குழுமங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூட நிர்வாகங்கள், நிதிநிறுவன அமைப்புகள், நன்கொடை அமைப்புகள் என்று எங்கினும் அவர்கள் நிறைந்து காணப்படுகின்றார்கள். இவர்கள் தான் இஸ்லாத்தினை எதிர்க்கக் கூடிய இயக்கங்களை இயக்கக் கூடிய தலைமைகள் ஆவார்கள். இத்தகைய தீவிரவாதிகளையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும் நாம் பேராசிரியர்களாகவும், துறைசார் நிபுணர்களாகவும், குருமார்களாகவும், கல்வியாளர்களாகவும் மற்றும் அறிவுசார்நிபுணர்களாகவும் இருக்கக் காணலாம்.

ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அனைத்து மதச்சார்ப்பற்ற அரசியல்வாதிகளும் இஸ்லாத்தின் எதிரிகளல்ல. மாறாக, அவர்களில் பெரும்பகுதியினர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாத்தின் எதிரிகளாக இருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். இந்த எதிரிகள் ஆராய்ச்சிகளின் மூலமாகவும், கல்வித்துறை சார்ந்த வகையிலும், வெளியீடுகள் மூலமாகவும், புத்தகங்கள், பத்திரிக்கைகளில் பத்திரிக்கைத் துறைசார் நிபுணர்களைக் கொண்டும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறாக, அவர்கள் சமூகத்தில் வாழக் கூடிய மக்களின் மூளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

Dec
13

சூரத்துல் Qகத்ர் (97),

மக்காவில் அருளப்பட்டது.

உரை

பொருள்

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) மாட்சிமை மிக்க இரவில் இறக்கிவைத்தோம்.

(2) மாட்சிமைமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா?

(3) மாட்சிமைமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

(4) அதில் மலக்குகளும் ஜிப்ரீலும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்து கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகிறார்கள்.

(5) அந்த இரவு முழுவதும் நலம் மிக்கதாகத் திகழும்., வைகறை உதயம் வரையில்!

 

இந்த அத்தியாயம், பாக்கியமிக்க ஓர் இரவு பற்றி பேசுகிறது. அதுதான் புனித ரமளான் மாதத்தில் அமைந்துள்ள லைலத்துல் ஞகத்ர் இரவு.

நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் தங்கியிருந்த பொழுது மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் வருகை தந்து குர்ஆனின் முதல் ஐந்து வசனங்களை இறக்கியருளியது இந்த இரவில்தான்.

லைலத்துல் ஞகத்ர் இரவு அருட்பாக்கியங்கள் நிறைந்தும் உயர் அந்தஸ்து பெற்றும் திகழ்வதற்குக் காரணம் ஜிப்ரீலின் முதல் வருகை அதில் அமைந்ததேயாகும். இவ்வையகம் இறைவழிகாட்டலின் ஒளியால் பிரகாசிக்கத் தொடங்கியது அன்றிலிருந்துதானே. அதனால்தான் அது ஆயிரம் ஆண்டுகளை விடச் சிறந்த இரவாக மலர்ந்துள்ளது.

இந்த இரவில் ஒரு மனிதன் வாய்மையுடனும் மன ஓர்மையுடனும் முழு ஈடுபாட்டுடனும் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டால் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஈடான நற்கூலியை அல்லாஹ் அவனுக்கு வழங்குகிறான்.

மேலும் இந்த இரவில் ஏனைய மலக்குகளுடன் ஜிப்ரீலும் சிறப்பான முறையில் ப+மிக்கு வருகை தருகிறார்கள். நன்மை மற்றும் சாந்திக்குரிய விஷயங்களையும் நம்பிக்கையாளர்களுக்கான பிரார்த்தனைகளையும் ஏந்திக்கொண்டு வருகிறார்கள்.

எவ்வாறு குர்ஆன் ஓதும் பொழுது மலக்குகள் இறங்குகிறார்களோ, திக்ர் செய்யும் நல்லடியார்களை சூழ்ந்து கொள்கிறார்களோ, வாய்மையான எண்ணத்துடன் கல்வி கற்கும் மாணவர்களுக்குத் இறக்கைகளைத் தாழ்த்திக் கண்ணியமும் பாதுகாப்பும் அளிக்கிறார் களோ அதைப் போன்றதாகும் இதுவும்.

இது அதிகாலை வரை தொடர்கிறது. ஏனெனில் அத்துடனேயே இரவு முடிவடைகிறது.

கவனிக்க வேண்டிய கருத்துகள்

1) லைலத்துல் ஞகத்ர் என்பது மகத்தான ஓர் இரவு. அதில் தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

2) நன்மை மற்றும் நற்கூலியைப் பொறுத்து இந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.

3) இந்த இரவில் மலக்குகளும் ஜிப்ரீலும் ப+மிக்கு இறங்கி வருகிறார்கள்.

4) லைலத்துல் ஞகத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அமைந்துள்ளது.


Dec
13

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள்

(கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் முன்னாள் பொதுச் செயலாளர்)

  Almujtamaa Magazine Interviewed the x-General Secretary of the Church Councils for East & Middle Africa "who embraced Islam." (Issue : 1629. Dec, 04-10, 2004.

--------------------------------------
 
பெயர் : அசோக் கோலன் யாங்

நாடு : சூடான்

பதவி : கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் பொதுச் செயலாளர்

இவர் கடந்த 2002 ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவர் மதங்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறித்து ஒப்பு நோக்கி ஆய்வு செய்த பொழுது, இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்பதைப் பற்றிய தெளிவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இவரை குவைத்திலிருந்து வெளிவரும் அல் முஜ்தமா என்ற அரபுப் பத்திரிக்கை பேட்டி கண்டது. அந்தப் பேட்டியின் தமிழாக்கமே இது.

நான் ஏன் முஸ்லிமானேன்..! ஏனென்றால்,

திருமறைக் குர்ஆனை எந்த தனிப்பட்ட மனிதரும் எழுதவில்லை, அதேநேரத்தில் பைபிளுக்கு பல்வேறு நூலாசிரியர்கள் இருக்கின்றார்கள்.

திருமறைக் குர்ஆன் அல்லாஹ்வின் சத்திய வாக்கியங்களாகும்.

இஸ்லாம் அழைக்கின்ற ஓரிறைத் தத்துவத்தின் பாலே அனைத்து நபிமார்களும் மக்களை அழைத்தார்கள்.

இஸ்லாமே இறுதி மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள்.

இவரது முயற்சியின் காரணமாக 1,50,000 பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், இவர்களில் 2500 பேர் தேவாலயங்களின் தலைவர்களாவார்கள்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கு பல்விதமான தந்திரங்களைக் கையாளுகின்றன. இது பற்றி அவர் மேலும் கூறியதாவது :

மனித உதவி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையின் கீழ் செயல்படுகின்றன

உதவிகளை வழங்குவதன் மூலம்

தங்களது அரசாங்கத்தின் வழியாக அரபுக்களின் மீதும், இன்னும் முஸ்லிம்களின் மீதும் பலப்பிரயோகத்தைத் திணித்தல் மூலமாக

இன்னும், தனிநபர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன, அவை : பணம், பதவி, பெண் ஆகியவற்றின் மூலமாக.

மேலும், அவர் கூறும் பொழுது, இஸ்லாத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது, இன்னும் சாதி அமைப்புகளும் கிடையாது, முஸ்லிம்கள் அனைவரும் சமமே. ஆனால், கிறிஸ்துவத்தில் கறுப்பு நிற நீக்ரோ கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்களின் சர்சுக்குச் சென்று வழிபாடு நடத்த இயலாது, ஏன்.., (முன்னாள்) அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலின் பவலைக் கூட வெள்ளைக்காரர்களின் சர்ச்சிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக எத்தனை கிறிஸ்தவ அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, ஆயிரக்கணக்கான அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவற்றில் சூடானில் மட்டும் 500 அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

பரமரகசியக் கூட்டங்கள் :

கடந்த 1981 ல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரம ரகசியமானதொரு கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டேன், அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் முஸ்லிம்களிடையே கிறிஸ்தவத்தைப் பிரச்சாரம் செய்வதென்று அதில் கலந்து கொண்டவர்கள் தீர்மானித்தார்கள்.

மேற்கு நாடுகளில் மக்கள் தங்களது வருமானத்தில் 5 சதவீதத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றார்கள்.

முஸ்லிம் நாடுகளில் முதலீடு செய்கின்ற மேற்கு நாடுகளின் நிறுவனங்கள், தங்களது முதலீட்டின் மீது வருகின்ற வருமானத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றன.

மேலும் அவரிடம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் சொல்வது உங்களது உயிருக்கே ஆபத்தாகவல்லவா முடியும் போலிருக்கின்றது? என்று சொன்ன பொழுது, ஆம்..! நான் சொல்வது என்னுடைய உயிருக்கே ஆபத்தானது என்பதை நான் நன்கறிவேன், எப்பொழுது கிறிஸ்தவ அமைப்புகள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொண்டனவோ அப்பொழுதே என்னைத் தீர்த்துக் கட்ட முனைந்தன, ஆனால் என்னுடைய இனத்தவர்கள் எனக்கு அளித்திருக்கும் பாதுகாப்பின் காரணமாக அவர்களது முயற்சியில் அவர்கள் தோல்வியையே கண்டார்கள். இன்னும் நான் சாவினைக் கண்டு பயப்படவில்லை, இஸ்லாத்திற்காக என்னுடைய உயிரை அற்பணிக்கவும் நான் தயாராகி விட்டேன், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற சதிகளை அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன?

இதற்கு அவர் பதிலளிக்கையில், இவர்கள் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதல்களின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள். குறிக்கோளின்றி அவர்கள் செயல்படுவதில்லை, ஆனால் அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலமாகத் தங்களது செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றார்கள். உதாரணமாக, தாங்கள் குறி வைத்திருக்கும் நாடு அல்லது பகுதியைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள், அதில் அவர்களது மதம், மக்கள் தொகை, அவர்கள் மதத்தைப் பின்பற்றுகின்றவர்களா அல்லது அல்லவா, பால் - ஆண், பெண், மக்களது தேவைகள் அதாவது பணம், உணவு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் இன்ன பிற தேவைகள் என்று ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள்.

எகிப்தில் செயல்பட்டு வரும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பிற்கு எதிராகவும், முடியுமானால் அதன் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்வதற்கும், எனக்கு 1 மில்லியன் 800 ஆயிரம் (18 லட்சம்) சம்பளமாகக் கொடுக்கப்பட்டது,

என்னருமை முஸ்லிம் சகோதரர்களுக்கு :

அல்லாஹ் இஸ்லாம் என்ற அருட்கொடையை உங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான், அதனை நீங்கள் மறுக்க முடியாது, ஏனென்றால் அதுவே நம்முடைய உண்மையான சொத்து, அதை நம்மிடம் இருந்து அழித்து விடத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் நம்மைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள். உங்களுக்கு எதிராகக் கிளப்பி விடப்படும் எந்தவிதமான குழப்பங்களையும் எதிர்கொள்வதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கான அடித்தளமான கல்வி நம்மிடம் தேவையாக இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் 10 சதவீதமாவது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைத் தங்களது வாழ்வில் கடைபிடிப்பார்களென்றால், மேற்கத்தியர்களை விட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், இன்னும் அதுவே நம்முடைய அநேகமான பிரச்னைகளையும் தீர்த்து விடக் கூடியதாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்த ஒரு முன்னேற்றத்தை வெறும் 10 சதவீத இஸ்லாத்தை நம்முடைய வாழ்வில் அமுல்படுத்தியதன் விளைவாகப் பெற முடியுமென்றால், இஸ்லாமிய வாழ்வை முழுமையாக நாம் கடைபிடிப்போமென்றால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று கூறினார்.


Dec
13

இறைநம்பிக்கையை வளர்க்கும் அறிவியல்

இறைவன் மனிதனுக்கு மட்டும் 'சிந்தித்து உணர்தல்" என்ற மிகப் பெரிய பொக்கிஷத்தை வழங்கி உள்ளான். எனினும் மனிதர்களில் பலர் இந்த அறிவைப் பயன்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்துவதே கிடையாது.

இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு மனிதனுள்ளும் புதைந்து கிடக்கின்ற இந்த அறிவுப் பொக்கிஷத்தைப் பற்றி பலர் அறிவதே இல்லை. தன்னுள் புதைந்து கிடக்கும் இந்த அறிவை ஒருவன் பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்று சொன்னால், அந்தக் கணம் வரைக்கும் எதுவொன்று அவனுக்கு விளங்காத அற்புதமாக இருந்ததோ, விடை கிடைக்காத புதிராக இருந்ததோ, அவை அத்தனையும் விளங்க ஆரம்பித்து விடும். இன்னும் அவன் அதில் மூழ்கிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், அவனது சிந்திக்கும் திறன் கூடுவதோடு மட்டுமல்லாமல், பலருக்கு இது கைவரக் கூடிய கலையுமாகி விடும். அதாவது ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், சிந்திக்கும் ஆற்றல் உங்களிடம் மலர வேண்டும் என்றால், அது குறித்து நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

திருமறைக் குர்ஆனில், இறைவன் கூறுகின்றான் - நம்பிக்கையாளர்களின் அனைத்துச் சூழ்நிலைகளின் பிரதிபளிப்பானது, அவர்களைச் சிந்திக்க வைத்து பயனுள்ள முடிவுகளுக்கு அவனை இட்டுச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான் :

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ''எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!"" (3:190-191).

இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் இறைவனை எவ்வாறு அடிக்கடி நினைவு கூற வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள் எனில், அபூ மூஸா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வினை நினைவு கூறக் கூடிய இல்லத்திற்கும், இன்னும் அவனை நினைவு கூறாத இல்லத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் உயிருள்ள மற்றும் உயிரற்றதற்கும் உள்ள வித்தியாசமாகும் என்று கூறினார்கள். (புகாரீ)

இன்னும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களது செயல்களிலேயே மிகவும் சிறந்த செயலாகவும், இன்னும் உங்களுக்கு உயர்ந்த தகுதிகளைப் பெற்றுத் தரக் கூடியதும், இன்னும் உங்களின் மிகவும் பரிசுத்தமான அரசன் உங்களுக்கு தங்கத்தையும் வெள்ளியையும் கொடுப்பதைக் காட்டிலும் உயர்வான அந்தஸ்தை அளிக்கக் கூடியதொன்றை உங்களுக்கு நான் கற்றுத் தரவில்லையா? எனக் கேட்டு விட்டுக் கூறினார்கள் , நிச்சயமாக, அல்லாஹ்வை (திக்ரு) நினைவு கூறுங்கள். (புகாரீ)

இருப்பினும், உங்களில் எவர் சிந்தித்துணர்வதில்லையோ, அவர் நிச்சயமாக சத்தியப் பாதையை விட்டும் தூரமாகவே இருந்து கொண்டிருக்கின்றார். அவர் தனது வாழ்க்கையை சொந்த அனுமானங்கள் மற்றும் தவறிழைப்பதிலேயே கழித்துக் கொண்டிருக்கின்றார். இதன் விளைவாக, இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கத்தையும், நாம் ஏன் இந்த உலகத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையையும் அவர் அறிய முடிவதில்லை. இருப்பினும், அல்லாஹ் மனிதர்கள் நினைப்பது போல அதனை வீணுக்காகவும், விளையாட்டுக்காகவும் படைக்கவில்லை என்பதை திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது :

வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (44:38-39)

''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?"" (23:15)

அல்லாஹ்வினுடைய அத்தாட்சிகளையும், அவனது பிரமிக்கத்தக்க படைப்பினங்களையும், அவன் உருவாக்கி வைத்திருப்பவற்றையும் பார்ப்பார்களானால், அவர்கள் அது படைக்கப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்து கொள்வார்கள், அவர்கள் தான் தங்களுக்கு வழங்கப்பட்ட அந்த உயர்ந்த சிந்தித்து உணரும் தன்மையின் அவசியத்தை அப்பொழுது புரிந்து கொள்வார்கள்.

தங்களுக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கும் பொருள்களில் சிறியதோ அல்லது பெரியதோ அவற்றின் படைப்பின் மக்கத்துவத்திலிருந்து, அவர்கள் ஒரு முடிவுக்கு வரக் கூடியவர்களாக இருப்பார்கள். இதனைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள் : உங்கள் இதயங்கள் சிந்திக்கட்டும், இன்னும் அவை (உங்களைப் படைத்த) இறைவனது நினைவாகவே இருக்கட்டும்.

உதாரணமாக, நம்மைச் சுற்றிலும் விரவிக் கிடக்கின்ற இயற்கையைப் பாருங்கள். எவர் அல்லாஹ்வின் மீதும் இன்னும் நம்மைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், தங்களைச் சுற்றிலும் விரவிக் கிடக்கின்ற இயற்கையின் அழகைக் காணட்டும். அவை அத்தனையையும் அழகாகப் படைத்தவன் இறைவன் தான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும். அந்த அத்தனை அழகிற்கும் சொந்தக்காரன் அல்லாஹ் தான் என்றும், கண்ணைக் கவரக் கூடிய அத்தனையிலும், அழகு என்ற அவனது தன்மை புதைந்து கிடக்கின்றன என்பதைக் காணட்டும். அதன் அழகிலிருந்து பருகிய இன்பத்தினைப் பெற்றுக் கொண்டு அவன் அல்லாஹ்வை நினைவு கூறக் கூடியவனாக இருப்பான். எவ்வாறெனில், அவனை நினைவு கூறக்கூடியவனது இதயம் ஒளி பொருந்திய வீட்டினைப் போலவும், அல்லாஹ்வை நினைவு கூறாதவனது இதயம், ஒளி இழந்த வீடு போலவும் காட்சியளிக்கும்.

நீங்கள் காலாற நடந்து போகும் பொழுது, உங்களைக் கடந்து செல்லக் கூடிய பறவையைப் பாருங்கள். அவற்றில் தான் எத்தனை வண்ணங்கள், ஊர்ந்து செல்லக் கூடிய எறும்பைப் பாருங்கள், அதில் ஒரு சீரான அணிவகுப்பு, இவை அத்தனையிலும் உங்களுக்குத் தேவையான, இறைவனைப் பற்றிச் சிந்திப்பதற்கான விவரங்கள் புதைந்து கிடக்கின்றன. புதைந்து கிடக்கின்ற உண்மைகளை முகிழ்ந்து ஆய்வு செய்பவர்களுக்கு விளங்கும், இறைவனது மகத்துவமும், அவனது மாட்சிமைமிக்க சக்தியும்..!

பறந்து செல்லும் அந்த வண்ணத்துப் பூச்சியைப் பாருங்கள், நமது கண்ணைக் கவரும் எவ்வளவு அருமையான படைப்பு. கண்ணாடித் தாள் போன்ற அதன் சிறகில் தான் எத்தனை வண்ணங்கள், என்ன அழகான கோடுகள். யார் அதனை வரைந்தது, அதன் வண்ணத்தை குலைத்தெடுத்து நேர்த்தியாகப் பூசியது யார், இன்னும் அந்த வண்ணத்தில் ஒளியையும் இணைத்து மிளிரச் செய்தது யார், இவை எல்லாம் மனிதனது படைப்பாற்றல் அல்லவே, அந்த மகத்துவமிக்க இறைவனின் படைப்பின் ரகசியமல்லவா!!

அதனைப் போலவே, விதவிதமான தாவர இனங்களைப் பாருங்கள். மரங்களைப் பாருங்கள், பற்றிப் படரும் கொடியினத்தைப் பாருங்கள். அவற்றில் தான் எத்தனை அழகு. அவற்றில் தான் எத்தனை விதவிதமான பூக் கூட்டங்கள். அவற்றின் வண்ணங்களில் தான் எத்தனை விதங்கள். மரங்களைப் பாருங்கள், அவற்றில் தான் எத்தனை வேறுபாடுகள். ஒரே தண்ணீரைக் குடித்து, ஒரே இடத்தில் வளரும் வேம்பும், கரும்பும்..! எத்தனை மாற்றங்கள், ஒன்று கசக்கின்றது, ஒன்று இனிக்கின்றது. அதில் கசப்பை ஊட்டியது யார்? இன்னொன்றில் இனிப்பைத் தூவியது யார்?

அந்த மலரைப் பாருங்கள். காலையில் தான் மலர வேண்டும் என்று அவற்றுக்குக் கற்றுக் கொடுத்தது யார்? இன்னும் மாலையில் மலரும் மல்லிகையைப் பாருங்கள், மாலையில் தான் மலர வேண்டும் என்று அதற்குக் கற்றுக் கொடுத்தது யார்? அவற்றின் அழகான இதழ்களைப் பாருங்கள், அவை முதிர்ந்து அவற்றிலிருந்து வெளிவரும் விதைகளைப் பாருங்கள், யார் அவற்றை அச்சில் போட்டு வார்த்தெடுத்தது? இதனைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்தோமா?

சூரிய காந்திப் பூவைப் பாருங்கள்..! சூரியனை நோக்கியே அதனது முகம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று அதற்குக் கற்றுக் கொடுத்தது யார்?

இன்னும் அவற்றில் இருந்து வெளிவருகின்ற சுகந்தம் தரக் கூடிய வாசனைகளைப் பாருங்கள். அவற்றில் தான் எத்தனை எத்தனை விதவிதமான வாசனைகள். அந்த ரோஜாவைப் பாருங்கள்..! அத்தனை இதழ்களிலும் மாறாத ஒரே மாதிரியான மாறாத வாசனை. இன்றைக்கிருக்கின்ற மிகவும் உயர் தொழில் நுட்பத்தினால் கூட, ஒரே விதமான வாசனையை உருவாக்க முடியாது. ஒவ்வொரு பரிசோதனைச் சாலையின் தயாரிப்பிலும் மாறுபாடு காணப்படும். தொழிற்சாலைகளில் உற்பத்தியாகக் கூடிய ரோஜா வாசனைத் திரவியத்தைப் பாருங்கள், அதனை அதிகம் தெளித்தால், அதன் வாசனை கூட நமக்கு வெறுப்பைத் தந்து விடும். ஆனால் அந்த மலர்களை நீங்கள் கிலோ கணக்கில் வைத்திருந்தாலும் ஒரே விதமான வெறுப்பூட்டாத வாசனை தந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

இறைநம்பிக்கை கொண்டவர்கள், இவை அத்தனையும் நமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றது என்று சிந்தித்து, அதனைப் படைத்துத் தந்திருக்கும் இறைவனை நினைவு கூறக் கூடியவர்களாகவும், புகழக் கூடியவர்களாகவும் இன்னும் அதற்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இதனால் தான் தங்களது வாழ்விடங்கள், தோட்டங்கள் மற்றும் தங்கள் மனங் கவரக் கூடிய இடங்களில் நுழையக் கூடியவர்கள் இறைவனைப் புகழ்ந்து இவ்வாறு கூறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் :

நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது 'மாஷா அல்லாஹ{; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்" - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - (18:39)

இவ்வாறு நினைவு கூறுவதன் மூலம், இறைவன் அழகுடன் அனைத்தையும் படைத்திருப்பதன் நோக்கம் என்னவெனில், இந்த மனித சமுதாயத்திற்குச் சேவையாற்றுவதற்காகத் தான், என்பதைப் புரிந்து கொள்வான். இவ்வாறாக இறைநம்பிக்கை கொண்ட மனிதனுக்கு உயிர் கொடுத்து எழுப்பபப்படக் கூடிய அந்த மறுமை நாளில், தனது அருட்கொடைகளில் இருந்து அபரிதமான வளங்களை வழங்கிடுவான். அந்த அருட்கொடைகளை அவனது வாழ்நாளில் வேறு எங்கினும் கண்டிருக்கவே மாட்டான். அதனைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :

சுவனமானது அல்லாஹ்வை நினைவு கூறக் கூடிய(வர்களின்) தளமாக இருக்கின்றது.(அஹ்மது)

இவற்றை அனுபவிக்கத் துடிக்கும் மனிதன், இறைவன் மீது முன்பைக் காட்டிலும் அதிகமாக அன்பு வைத்து நேசிக்கக் கூடியவனாக மாறி விடுவான்.

அந்த நேசமே, அவனை இறைநம்பிக்கை கொண்ட மனிதனாக, அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மனிதனாக மாற்றம் பெறச் செய்யும்.

ஆம்..! படைத்தவன் மீது நம்பிக்கை கொள்வதற்கு, படைப்பினங்களில் அத்தாட்சிகள் விரவிக்கிடக்கின்றன.

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ''எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!"" (3:190-191).
 




If you have trouble viewing or submitting this form, you can fill it out online:
http://spreadsheets.google.com/viewform?formkey=dHQyWEZsR0x6SUhaYm80d1Q1Y1lEYXc6MA

Invite Your Friends

please kindly invite your friends to add this group








Dec
12

வாழ்க்கை ஒரு சோதனையா? சாதனை புரிவோம்!

இன்றைக்கு நம்மில் பலருக்கு பல பிரச்னைகள். வீடில்லா சுமை, திருமணமாகாத பிரச்னை, நோய், தொழிலில் முன்னேற்றமின்னை, வேலை இல்லை, மனைவி சரியில்லை, கணவன் சரியில்லை, பிள்ளைகள் சரியில்லை என்பது போன்ற பல பிரச்னைகள். இவையெல்லாம் வாழ்க்கையின் பெரும் பிரச்னைகளல்ல. எப்படி?..! என்ற உங்கள் கேள்வி எனக்குக் கேட்கிறது. பொறுங்கள்.

இந்தப் பிரச்னைக்கு மட்டுமல்ல, வாழ்வின் எந்தப் பிரச்னைக்கும் முகம் கொடுப்பது நாம் எமது வாழ்வை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தங்கியுள்ளது. அதனை ஒரு சோதனையாக நாம் கருதினால் எல்லாமே சோதனையாகத் தான் தெரியும். அன்றி சாதனை செய்வதற்கு அல்லாஹ{த்தஆலா தந்த ஒரு சந்தர்ப்பம் என்று கருதினால் அதுவும் அப்படியே ஆகும். ஏனெனில் அல்லாஹ் அல்குர்ஆனில் எமக்கு வாக்களித்திருக்கின்றான்.

மனிதனுக்கு (இவ்வாழ்வில்) முயற்சித்தவையேயன்றி வேறில்லை (53:39).

சோதனைகளைச் சாதனையாக்குவது எப்படி? அடிப்படையில் நாம் சில விஷயங்களை கவனத்திலெடுக்க வேண்டும்.

முதலாவதாக,

அல்லாஹ் நம்மால் தாங்க முடியாத கஷ்டங்களைத் தருவதில்லை. இது அல்குர்ஆனில் அல்லாஹ் எமக்களித்திருக்கும் வாக்குறுதி. அவன் வாக்குறுதி மீறுபவனல்ல.

அல்லாஹ் ஒரு நப்ஸ{க்கு அதன் சக்திக்கு மீறி நிர்ப்பந்திப்பதில்லை. (அல் பகறா : 286).

எனில், இதை இன்னொரு விதமாகக் கூறப் போனால் எந்தக் கஷ்டத்தையும் அல்லாஹ் தரும் போது அதைத் தாங்கக் கூடிய சமாளிக்கக் கூடிய சக்தியையும் எமக்குத் தந்தே இருப்பான். அந்தத் திறனை நாம் உணர்ந்து கொண்டு, தெரிந்து கொண்டு செயல்படுவதில் தான் எமது திறமை சோதிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம்.

இரண்டாவதாக,

எந்தக் கஷ்டமுமே, அல்லாஹ் அறியாமல், அவன் அனுமதியின்றி எமக்கு நேர்வதில்லை. எமக்கு நிகழும் நன்மைகள் யாவும் அவனிடமிருந்தே வருபவை. தீமைகள் யாவும் எமது கைகள் சம்பாதித்தவை. எனில் எமது சக்தியை மீறி நடக்கக் கூடியவை யாவும் அவனிடமிருந்தே வருகின்றன. அதாவது, அவற்றில் எதுவுமே தீயதாக இருக்க முடியாது. எந்தப் பெரிய கஷ்டத்திலும் ஒரு லநவ மறைந்திருக்கும். எந்தச் சோதனையிலும் அல்லாஹ்வின் ரஹ்மத் ஒளிந்திருக்கும். அதைக் கண்டு கொண்டு அதன் பலாபலன்களைப் பெற்றுக் கொள்வது தான் இவ்வுலக ரகசியம். இன்னொரு விதமாகச் சொல்லப் போனால் எமக்கு வரும் கஷ்டங்கள் யாவும் அல்லாஹ் எனும் அளவற்ற அருளாளனான பரீட்சகர் எமக்களிக்கும் ஒரு பரீட்சை. அவை யாவற்றையும் எப்படியும் மேற்கொண்டு வெற்றி கொள்ளலாம். ஏனெனில் அல்லாஹ் எம்மை எப்போதும் கண்காணித்தவனாக, அக்கஷ்டங்கள் எங்களை மீறி விடாமல் எமது மனப்பாங்கிற்கேற்ற வழிவகைகளை அமைத்துக் கொடுப்பவனாக என்றும் எப்போதும் எம்முடனேயே இருக்கின்றான் என்ற அந்த மனப்பான்மையை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமாயின் இவ்வாழ்வின் சோதனைகள் யாவுமே ஒரு தற்காலிகப் பரீட்சையாக வெற்றிக்கு வித்திடும் படிக்கற்களாக எமக்குத் தோற்றும்.

மூன்றவதாக,

முக்கியமாக, இந்த வாழ்வு மறுவுலக வாழ்வின் படிக்கல் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வுலக வாழ்வு மறுவுலக வாழ்வுடன் ஒப்பிடும் போது ஒரு ஈயின் ஒரு இறக்கைக்குக் கூட சமானமானதல்ல. எனவே பெரிதாகத் தெரியும் எதுவுமே உண்மையில் பெரிய விஷயங்களல்ல. எமது வாழ்வின் அதாவது ஈருலக வாழ்வின் முழப் பரிமாணத்தையும் கணக்கிடும்போது இவையெல்லாம் பெரிய விஷயங்கள் அல்ல என்பது எமக்கு நினைவிலிருக்க வேண்டும். இளம் வயதில் பெரிதாகத் தெரிபவை பின்னால் தூசாய்ப் போகும். இன்று கவலைக்குரியவை நாளைக்கு சிரிப்பாய் மாறும். இதற்கெல்லாம் உறுதுணையாய், அல்லாஹ் எமக்கு மறதி, தூக்கம், மனமுதிர்ச்சி இப்படியான நிஃமத்துக்களை தந்துள்ளான். இவை யாவற்றினதும் பாதிப்புகள் பலாபலன்களையெல்லாம் அன்றே சிந்தித்து, உணர்ந்து கொண்டால் இவ்வாழ்க்கையின் எந்தப் பிரச்னைகளையும் எதிர் கொண்டு வெற்றி கொள்வது கஷ்டமாகத் தெரியாது.

இவையெல்லாம் சாதாரண மனிதனுக்கெட்டாத பெரும் தத்துவங்களாகத் தெரியலாம். இவற்றை யதார்த்தத்திற்குக் கொண்டு வருவது எப்படி? மிக இலகு!

அடிப்படையில் இந்த மாற்றத்தை உங்கள் உள்மனம் வேண்ட வேண்டும். அதற்கான துஆக்கள் பலவற்றை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்திருக்கின்றார்கள். மிகச் சுலபமான ஓரிரு துஆக்களைக் குறிப்பிடுகிறேன்.

சூரா பாத்திஹாவில் வரும்,

இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்

நேர்வழியில் சீராக நடத்தி வைப்பாயாக, என்ற வசனங்களை ஓதும் ஒவ்வொரு முறையும் மானசீகமாக அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்.

சூரா அத்தலாக்கின் 2-3 வசனங்களை

வமய் யத்தகில்லாஹ யஞ்அல்லஹ{ மக்ரஜா

அதன் கருத்தை மனதில் கொண்டு அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு ஓதி வாருங்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ{ம்ம இன்தக அஹ்தஸபு முஸிப்னீ ஃபஅஜ்ஸனீ ஃபீஹா வப்தல்னீ ஃபீஹா ஐஹரா

நாம் அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்கிறோம். அவனிடமே மீளவிருக்கிறோம். யா அல்லாஹ்! இந்தப் பிரச்னையை நாம் உன்னிடம் சாட்டுகிறேன். இதற்குக் கூலியும் தந்து இதையே நல்லதாக மாற்றியும் வைப்பாயாக!

இவற்றை ஓதும் அதே வேளையில் குர்ஆனை உங்கள் உற்ற துணையாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் குர்ஆனின் ஒரு பக்கமாவது கட்டாயம்ஓதுவது என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதே சமயம் குர்ஆன் மொழிபெயர்ப்பையும் வாசிப்பதைத் தவறாது அன்றாடப் பழக்கத்தில் கொண்டு வாருங்கள். குர்ஆன் விளக்கம் கொண்ட புத்தகங்களை வாங்கியோ தெரிந்தவர்களிடம் இரவலாகப் பெற்றுக் கொண்டோ வாசித்து வாருங்கள்.

அல்லாஹ்வுக்குமிகவும் விருப்பமான இந்த விசயங்களைச் செய்து கொண்டு வர ஷைத்தான் உங்களை விட்டு வைக்க மாட்டான். தனிhயகச் செய்ய முயன்றால் மனசு ஊசலாட்டம் காட்டும். எனில் இயன்றவரை இன்னும் சிலரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வீட்டாரையோ தோழிகளையோ அல்லது அண்டை அயலாரையோ சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவருமே இல்லாவிட்டால் பேனா நண்பர்களையாவது சேர்த்துக் கொண்டு ஒருவருக்கொருவர் ஊக்கமும் எச்சரிக்கையும் செய்து கொள்ளுங்கள்.

மிக முக்கியமாக தொலைக்காட்சி பார்ப்பதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். செய்தி, படிப்பினை போன்ற விஷயங்களுக்கல்லாமல் வெறுமனே சினிமா, பாடல்கள் இவையெல்லாம் தொகை;காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். எமக்கும் வேலையில்லைதானே என்று இந்தக் குட்டிச் சாத்தானின் முன் அமர்வதை நிறுத்திக் கொள்ளவும். இப்லீஸ் முதன் முதலாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து, அவனுக்கு முன்விட்ட சவால் என்ன? ஆதமின் மக்களுக்கு அழகானதை அசிங்கமாகவும் தோன்றச் செய்வேன் என்பது தானே! அந்தச் சங்கல்பத்தை அவன் செயல்படுத்தும் மிக இலகுவான சாதனம் இந்த தொலைக்காட்சி.

குடும்பம், வெட்கம், மானம், இறைபக்தி இவற்றையெல்லாம் அவசியமற்றவையாக்கி கண்டவனோடு ஓடிப்போவதையும், குடும்பத்தை எதிர்த்து மாற்றானோடு காதல் கொண்டு வெற்றி கொள்வதையும் நியாயப்படத்தி, இது தான் வாழ்க்கை என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் பயங்கர சாதனம் இந்த தொலைக்காட்சி. சங்கீதமும், ஆண்-பெண் கவர்ச்சியும், கீழ்த்தர பாலின உணர்வுகளும் அன்றாட வாழ்வின் சர்வசாதரண நிகழ்வுகள். எனவே நாமும் அவற்றில் ஈடுபட்டாக வேண்டும் எனும் போதையை ஊட்டும் ஒரு சாத்தானின் கைங்கரியம்.

என் வாழ்வில் நான் வெற்றி பெற வேண்டுமானால் என் மனதை நான் முதலில் வெற்றி கொள்ள வேண்டும் என உணர்ந்த ஒவ்வொருவரும் முதன் முதலில் செய்ய வேண்டியது, நம் வீட்டுக்குள் சுகமாக வீற்றிருக்கும் இந்தச் சாத்தானுக்கு அடிபணிவதில்லை என்ற கங்கணத்தை மனதில் கொண்டு அதை அமுல்படுத்துவதுதான், வீட்டில் வேலையற்றிருக்கும் பெண்களின் மனதை வழிகெடுக்கும் பெரிய தஜ்ஜால் இந்த தொலைக்காட்சி. யார் வாழ்வில் வெற்றி பெற விரும்புகிறீர்களோ, முதலில் இப்படியான விஷயங்களில் மனதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுவது அவசியம்.

வீட்டில் மற்ற எல்லோரும் பார்க்கிறார்களே நான் எப்படிப் பார்க்காமல் இருப்பது? என மனது ஊசலாடும். இத்தகைய ஊசலாட்டங்களை எடுத்துக் கொண்டு வெற்றி பெறுவதில் தான் வாழ்க்கையின் ரகசியமே இருக்கிறது. இதில் நீங்கள் முயன்று முன்னேறினால் தானாகவே ஒரு தன்னம்பிக்கையும் உள்மனச் சந்தோசமும் உண்டாகும். முயற்சித்துப் பாருங்கள். எதிர்பாராத ஒரு திருப்தியும் வெற்றி மனப்பாங்கும் கிடைக்கும்.

அடுத்ததாக இவ்வளவு நாளும் வீணாக தொலைக்காட்சிக்கு முன் கழித்த அந்த நேரத்தை எப்படி நல்ல முறையில் பயன்படுத்தலாம் என எண்ணிப் பாருங்கள். இதோ சில யோசனைகள்.

எப்போதும் புதிய கலைகளைக் கற்றுக் கொள்ள முயலுங்கள். ஒரு மனிதன் விசேடமாக பெண் என்றுமே புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வதை நிறுத்தக் கூடாது. சில சமயங்களில் இதைக் கற்றுக் கொண்டு என்ன பயன்? என நினைக்கத் தோன்றும். ஆனால் எந்தக் கல்வியும் வீண் போவதில்லை. என்றோ எங்கோ ஏதோ ஒரு விதத்தில் அவை கை கொடுக்கும்.

உங்களுக்குத் தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதத் தெரியுமா? தெரியா விட்டால் யாரிடமாவது ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். இது இலகுவில் ஒதே நாளில் கூட கற்றுக் கொள்ளக் கூடியது. ஆயினும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வாஜிபான சுன்னத்தாகும்.

அரபு மொழி - ஊரில், வசதியில்லா விட்டால் தபால் மூலம் கற்றுக் கொடுக்கும் சில நிறுவனங்கள் உள்ளன. செலவும் மிகக் குறைவு. அல்லாஹ்வின் கலாமான குர்ஆனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிய்யத்தை வைத்துக் கொண்டு தொடங்குங்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில், அதிசயமான முறையில் உதவிகளும் வசதிகளும் உங்களுக்குக் கிடைக்கும்.

மற்றும் பெண்களுக்குத் தேவையான தையல், சமையல், பின்னல் இவற்றை நண்பிகள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொடுத்தோ முதியவர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ளலாம். இவையெல்லாம் தொழிற்பயிற்சிப் பள்ளிக்குப் போய்த்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. அப்படி ஒரு வசதி இருந்தால் போகலாம். அப்படியான பயிற்சிப் பள்ளிகள் இல்லைஎனில், அல்லது வசதி இல்லா விட்டால் அண்டை அயலார், தாய் மற்றும் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள். அங்கெல்லாம் எப்படிப்பட்ட திறமைகள் ஒளிந்திருக்கின்றன என்ற உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

பத்தரிக்கைகள், சஞ்சிகைகளுக்கு இப்படியான கருத்துக்கள் அல்லது கவிதைகள் எழுதிப் பாருங்கள். போட்டிகளில் கலந்து கொள்ளுங்ள் (கலந்து கொள்ளும் போட்டிகள் ஹலாலானதா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்) வெற்றியைப் பற்றி கவலைப்பாடாதீர்கள். பங்கு  கொண்டோம் என்பதில் சந்தோஷப்படுங்கள். உங்கள் திறமை உங்களையே ஆச்சரியத்தில் வீழ்த்தக் கூடும்.

நீங்கள் ஆங்கிலம், சிங்களம் தெரியாதவராக இருப்பின் அவற்றைக் கற்றுக் கொள்ள முயலுங்கள். ஒரு வழமையான வகுப்பாக இல்லா விட்டாலும் இம் மொழிகளைப் பேசத் தெரிந்த யாராவது இருப்பின் அவர்களுடம் பேசியாவது பழகிக் கொண்டு வாருங்கள்.

அன்றாடப் பத்திரிக்கைகளை வாங்கிப் படியுங்கள். சினிமா, பாட்டு, நாடகம் இவற்றை விட்டு ஊர், உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களால் உதவி செய்ய முடியா விட்டாலும் மற்ற முஸ்லிம்களுக்காகவாவது செய்யலாம்.

இவையெல்லாம் கூட்டாகச் செய்ய முடியுமானால் ஒருவருக்கொருவர் ஊக்கமும் அறிவுரையும் கொடுத்துக் கொள்ளலாம். மனக் கவலைகளுக்கு நேரமும் இராது. கடைசியாக சில சமூக சேவைகளில் ஈடுபடலாம். எப்படி? (இன்ஷா அல்லாஹ் இன்னுமொரு இதழில் பேசுவோம்).
 


Dec
12

அதன் பெயர் லட்சியம்

அந்தக் கப்பல் மிதந்து கொண்டிருக்கிறது. ஆறு மாத காலமாகவே அது மிதந்து கொண்டு தான் இருக்கிறது. கருங்கடலில் இருப்பதாக குறிப்பிட்ட ஒரு தீவைக் கண்டு பிடிக்க அது போய்க் கொண்டிருந்தது.

அந்தத் தீவு மட்டும் கண்டு பிடிக்கப்பட்டால், அந்தக் கப்பலில் பயணம் செய்த இரு நூறு பேருக்கும் வளமான நாடே கிடைத்து விட்டதாக அர்த்தம். கப்பல் தலைவன் கெட்டிக் காரன். நம்பிக்கைக்குரியவன். அப்படி ஒரு தீவு இருப்பதாக அறிந்தே அவன் பயணம் தொடங்கியிருந்தான். வாழ வழி இல்லாதவர்கள் இருநூறு பேருக்கு வளமான வாழ்வை உருவாக்குவதே அ வன் திட்டம். அதற்கென அவன் குறித்த இலக்கே அந்தத் தீவு. பலவகை கடல்களையும் தாண்டிக் கப்பல் போய்க் கொண்டிருந்தது. கடல் கொந்தளிப்பினாலும், பருவக் கோளாறினாலும் மூன்று மாதங்களில் அடையலாம் என்ற கணக்குத் தவறி விட்டது. ஆறு மாதங்கள் ஓடி விட்டன. கப்பல் தலைவனோ பசியையும், தூக்கத்தையும் பொருட்படுத்தாது சுக்கானைப் பிடித்தபடி இருந்தான். பயணம் செய்தவர்களுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது. எப்படியும் நாம் அந்தக் தீவை அடைந்து விடுவோம் என்று தலைவன் ஆறுதல் சொன்னான். அந்த ஆறுதலால் அவர்கள் பசி அடங்கவில்லை. எங்களுக்குப் பசிக்கிறது, பசிக்கிறது என்று அவர்கள் சத்தமிட்டார்கள். நாம் விரைவில் அந்தத் தீவை அடைந்து விடுவோம். அங்கே காய்களும், கனிகளும் கேட்பாறின்றிக் குவிந்து கிடக்கின்றன. குறிப்பிட்ட இலக்கை அடையும் வரை அந்த மீன்களை மட்டுமே உணவாகக் கொண்டு நாம் வாழ்ந்து விட முடியும். நிரந்தர இன்பத்துக்காக தற்காலிகமாகத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். நாம் ஒரு இலட்சியப் பயணம் செய்கிறோம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். சோதனைகளைக் கட்டுப்பாடோடு சகித்துக் கொள்வதன் மூலம் தான் ஒளிமயமான எதிர்காலத்தை நாம் பெற முடியும். உழுகிற காலத்தில் அரை வயிறு தான் கிடைக்கும். சமயங்களில் கிடைக்காமலும் போகலாம். அறுவடைக்குப் பின் அற்புதமான சாப்பாடு கிடைக்கும். நாம் நமது இலட்சியத்தை அடைகிற வரையில் பொறுமையாக இருங்கள். தலைவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால் அவர்களோ வெறும் மீனை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கத் தயாரில்லை. எங்களுக்கு இந்த உணவு அலுத்துப் போய் விட்டது. வேறு வகை உணவு வேண்டும் என்று கத்தினார்கள். அவர்கள் பொறுமையோடு இருக்கும் சக்தி அற்றவர்களானார்கள். எல்லோருமாக சேர்ந்து கப்பல் தலைவனை உதை;தார்கள். அடி தாங்காமல் அவன் மரணமடைந்தான். திக்கு முக்காடித் திசை தடுமாறி ஓடத் தொடங்கிற்று. பயணம் செய்தவர்களுக்குப் பசியை உணரத் தெரிந்ததே தவிர கப்பலை ஓட்டத் தெரியவில்லை. சூறாவளியில் சிக்கிக் கப்பல் மூழ்கத் தொடங்கிற்று. அவர்கள் தங்கள் கப்பல் மூழ்கி விட்டது இனி அவர்களுக்குப் பசி எடுக்காது. நீ அவசரக்காரனாக இருந்தால் அதுவரையில் படட கஷ்டம் வீணாகி விடும். ஒட்டகத்தில் ஏறியவன் ஊர் போய்ச் சேரும் வரை அதை கொன்று விடக் கூடாது.
 
நன்றி : மீள் பார்வை, அக்டோபர்
இதில் பெறும் படிப்பினை என்ன உங்களுக்குத் தெரியும்
அதை மற்றவருக்கும் கற்றுக்கொடுங்கள்...

Dec
12

வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்!!

சுல்தான் ஸலாஹ{த்தீன் அல் அய்யூபி (ரஹ்) வரலாற்றிலிருந்து..!

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 42 : வசன எண் : 40)

சுல்தான் ஸலாஹ{த்தீன் அய்யூபி என்ற பெயர் இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பெயராகும். ஆம்! புனித ஜெருஸலம் நகர் கிறிஸ்தவர்களின் பிடியில் 90 ஆண்டு காலம் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த பொழுது, முஸ்லிம்கள் மட்டுமல்ல யூதர்களும் கூட அங்கு தினமும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். சிலுவை யுத்தம் நடந்த காலங்களில் ஜெருஸல நகரத் தெருக்களில் கரண்டைக் கால் அளவுக்கு மனித இரத்தம் ஓடியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அத்தகையதொரு கொடுமையிலிருந்து அந்தப் புனிதப் பூமியை மீட்டதோடல்லாமல், தனது மனித நேயத்தால் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த பண்பாளராகவும் சுல்தான் ஸலாஹ{த்தீன் அல் அய்யூபி அவர்கள் திகழ்ந்தார்கள்.

இரண்டாம் உமர் என்று போற்றப்படக் கூடிய உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பிறகு, இஸ்லாமிய நெறிமுறைப்படி ஆட்சி செய்த பண்பாளர் என்ற நற்பெயரை இவர் பெற்றிருக்கின்றார் என்பதிலிருந்து இவரது ஆட்சி முறை எப்படி இருந்திருக்கும் என்பது தெளிவாகும்.

சிலுவை யுத்தம் நடந்து முடிந்த பின், சுல்தான் ஸலாஹ{த்தீன் (ரஹ்) ஜெருஸலம் நகரில் நின்று கொண்டிருக்கின்றார். அப்பொழுது ஒரு பெண்களின் குழுவொன்று அவரைக் கடந்து செல்கின்றது. அப்பெண்களின் குழுவில் இருந்த சிறுமி ஒருத்தி சுல்தானைப் பார்த்து,

ஓ சுல்தான் !! நாங்கள் இந்த நகரை விட்டுக் கிளம்புவது உங்களது கண்களுக்குத் தெரியவில்லையா?! நீங்கள் பிடித்து வைத்திருக்கக் கூடிய போர்க்கைதிகளின் தாயார்களும், மனைவிமார்களும், தங்கைகளும், இன்னும் பெற்றெடுத்த மகள்களுமாக, ஆண் துணைகளின்றி நாங்கள் இந்த நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றோம். உங்களிடம் இருக்கக் கூடிய எங்களுடைய ஆண்களை விட்டால், எங்களுக்கு வேறு ஆதரவு கிடையாது, அவர்களை நாங்கள் இழந்து விட்டோமென்றால் எங்கள் வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் நாங்கள் இழந்தவர்கள் போலாவோம். எங்கள் மீது இரக்கப்பட்டு, அவர்களை நீங்கள் விடுவித்தீர்கள் என்று சொன்னால் எங்களது வாழ்க்கையையே மீட்டித் தந்த நன்மைக்குரியவராவீர்கள்! என்று அந்தப் பெண்கள் முறையிட்டு நின்றார்கள்.

அந்தப் பெண்களைப் பார்த்து புன்முறுவல் செய்து விட்டு, தனது தோழர்களை நோக்கி, இவர்களது ஆண்களை விடுதலை செய்து இவர்களுடன் அனுப்பி வையுங்கள். இன்னும் இங்கு இருக்கும் பெண்களின் துணைக்கிருந்த ஆண்களில் எவரும் போரில் கொல்லப்பட்டிருந்தால், அதற்குப் பிரதியீடாக அவர்களுக்கு பண உதவி செய்து அனுப்பி வைக்கும்படியும் ஸலாஹ{த்தீன் உத்தரவிட்டார்.

அப்பொழுது, ஒரு பிரஞ்சுச் சிறுமி சுல்தான் அருகில் வந்து, கொலைகாரர்களே! நீங்கள் என்னுடைய தந்தையைக் கொன்று விட்டு, என்னுடைய சகோதரர்கள் இருவரையும் சிறை பிடித்து விட்டீர்களே! பாவிகளா? என்றாள். அவளது சினத்தைக் கண்டு கொள்ளாத ஸலாஹ{த்தீன் இவளது சகோதரர்களையும் விடுதலை செய்யுங்கள் என்று தனது தோழர்களுக்கு உத்தரவிட்டு அந்தச் சிறுமியைப் பார்த்து, சிறுமியே! உன்னுடைய தந்தை எதனால் கொல்லப்பட்டார் என்று தெரியுமா? உன்னுடைய தந்தையால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போரால் தான் அவர் தன்னுடைய மரணத்தைத் தழுவினார் என்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிரையும் அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போர் காவு கொண்டு விட்டது என்று பதிலளித்தவுடன், குற்ற உணர்வின் மேலீட்டால் அந்தச் சிறுமி தன்னுடைய தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, என்னுடைய இந்த அறியாமைக்கு நான் வருந்துகின்றேன், உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன் என்று கூறியதோடு, இவ்வளவு பண்பாடுள்ள உங்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதற்கு வருந்துகின்றேன் என்று கூறி, சுல்தான் ஸலாஹ{த்தீனிடம் மன்னிப்புக் கோரினாள்.

நான் சந்தித்த இந்தக் கொடூரமான சூழ்நிலைத் தாக்கத்தின் காரணமாக உங்களிடம் நான் வரம்பு மீறி நடந்து கொண்டதற்கு என்னை மன்னியுங்கள், இன்னும் உங்களைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் எங்களது ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த வெறுப்புணர்வின் காரணமாகவே நான் அவ்வாறு நடந்து கொண்டேன். ஆனால் இப்பொழுது நான் உண்மையைக் கண்டு கொண்டேன் என்பது மட்டுமல்ல, இதுவரை நாங்கள் அறியாமையில் இருந்திருக்கின்றோம் என்பதையும் உணர்ந்து கொண்டு விட்டேன், இப்பொழுது உங்கள் முன் நான் நிற்பது, உங்களது மன்னிப்பை வேண்டித் தான் என்று கூறி முடித்தாள்.

எங்களை வழி கெடுத்த அந்தப் பாவிகள் மீது சாபம் இறங்கட்டும், அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டது மட்டுமின்றி, எங்களது புனித பூமியில் இரத்தம் சிந்தவுடம் வைத்து விட்டார்கள். எங்கள் உற்றார் உறவினர்களிடமிருந்து எங்களைப் பிரித்தும் விட்டார்கள். எங்களது உணர்வுகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு, அவர்களது நலன்களை அடைந்து கொண்டார்கள்.

இப்பொழுது நாங்கள் உண்மையை நேரடியாக உணர்ந்து கொண்டு விட்டோம், அவர்கள் சொன்னவற்றில் எதுவும் உண்மை இல்லை என்பதையும் கண்டு கொண்டோம் என்றும் அவள் கூறினாள்.

சுல்தான் ஸலாஹ{த்தீன் அல் அய்யூபி (ரஹ்)அவர்களது வரலாற்றை ஆய்வு செய்பவர்களுக்கு, அவரைப் பற்றி அறிந்து கொள்ளவும், இன்னும் உண்மையான இஸ்லாமிய போதனைகளைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும், அவர்களது கொள்கைகளையும் அறிந்து கொள்ள இதனை விடச் சிறந்த அறிமுகம் தேவை இல்லை.

அடக்குமுறையை அதைப் போன்றதொரு வலிமை கொண்டு தடுக்கப்பட வேண்டும்

இறைவன் வகுத்திருக்கும் தண்டனைகளுக்குரிய வரம்புகளை மீறாது பேண வேண்டும்

வலிமையற்றோரையும், போரில் தோற்கடிக்கப்பட்டோரையும் பழிக்குப் பழி வாங்காமல், அவர்களை மன்னித்து, நீதமுடன் நல்ல முறையில் நடத்த வேண்டும்,

இந்த மூன்று அடிப்படைகளின் கீழ் நின்று ஆட்சி செய்தவர் தான் சுல்தான் ஸலாஹ{த்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள். இன்னும் தவறிழைப்பவர்களுக்குத் தண்டனை வழங்குவதை விட, அவர்களது குற்றங்களை உணரச் செய்து மன்னித்து விடுவதே மேலானது என்ற கொள்கையைக் கொண்டவராகத் திகழ்ந்தார். இது மட்டுமல்ல இன்னும் இரக்கம், அன்பு, வீரம், கொடைத்தன்மை, பொறுமை ஆகிய நற்குணங்களுக்கு இலக்கணமாகவும் திகழ்ந்தார்.

இத்தகைய நற்குணங்களின் மூலமாகத் தான் பிரபல சிலுவை யுத்தங்களில் மிகப் பெரிய படைகளை எதிர்த்து, அவரால் வெற்றி பெற முடிந்தது.

பல போர்களில் வெற்றி பெற்று அதனால் கிடைக்கப் பெற்ற செல்வங்கள் இருந்தும், அவற்றில் இருந்து எதனையும் தனக்காக ஒதுக்கிக் கொள்ளாத பண்பாளராகத் திகழ்ந்தார். ஒருமுறை ஒரு தோழர் இவ்வாறு கேட்டார் :

உங்களுக்குக் கிடைத்த இந்த செல்வத்தை ஏழைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இன்னும் போர்களுக்குமே செலவழித்துக் கொண்டிருக்கின்றீர்களே? உங்களுக்கென எதனையும் சேமித்து வைக்கக் கூடாதா? என்று கேட்டார்.

ஒரு மனிதனின் பலம் எங்கிருக்கின்றதென்றால் அவன் அவனைப் படைத்தவனிடம் கேட்கும் பிரார்த்தனையின் பலனில் தான் இருக்கின்றது, ஏழை அடியானுடைய பிரார்த்தனையை இறைவன் வீணடித்து விடாமல், கண்டிப்பாக அங்கீகரித்து விடுவதால், அவன் முன்னிலையில் நான் ஏழை அடியானாக நிற்கவே ஆசைப்படுகின்றேன், என்று தனது தோழருக்குப் பதிலிறுத்தார்.

இஸ்லாம் வரையறுத்திருக்கும் வரையறைகளைப் பேணுவதிலும், தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில், மேலதிகமான வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபடக் கூடியவராகவும், இன்னும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைகளை மிகவும் பேணுதலுடன் கடைபிடிக்கக் கூடியவராகவும் சுல்தான் ஸலாஹ{த்தீன் (ரஹ்) அவர்கள் திகழ்ந்தார்கள். இரவு நேர தஹஜ்ஜத் தொழுகைகளை தினமும் நிறைவேற்றக் கூடியவராகவும் இருந்தார்.

புகழ்மிக்க மன்னராக இருந்த போதிலும், அவர் இறந்த பொழுது ஒரு தினாரும், 47 திர்ஹம்களைத் தவிர வேறு எந்தச் சொத்தையும் அவர் தனது சொத்தாக விட்டு வைத்திருந்திக்கவில்லை. இன்றைய ஆட்சியாளர்களைப் போல அரண்மணை போன்ற பங்களாக்களையோ, தோட்டங்களையோ, ஆடம்பரமான எந்தப் பொருளையும் அவர் தன்னுடைய வாரிசுகளுக்கு விட்டு விட்டுச் செல்லவில்லை. அவர் வைத்திருந்த அந்தப் பணம், அவரது அடக்கச் செலவுகளுக்குக் கூட போததாகவே இருந்தது. இருப்பினும் அவர் சாதாரண ஆட்சியாளராக அவர் மரணிக்கவில்லை, இன்றிருக்கும் சிரியா விலிருந்து லிபியா வரை இன்னும் பாலஸ்தீனம், எகிப்து அடங்கலாக உள்ள பிரதேசத்தின் தனிப்பெரும் ஆட்சியாளராக இருக்கும் நிலையில் தான் அவர் மரணமடைந்தார்.

அவர் வாழ்ந்த சம காலத்தில் மன்னர்கள் படாடோப மிக்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பொழுது, தனக்காக எதனையும் சேமித்து வைக்காது, இஸ்லாமியக் கொள்கை வழியின் பால் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் தான், இறைவன் அவருக்கு அவ்வளவு பெரிய வெற்றியை வழங்கினான். இன்னும் மாற்று மதத்தவர்களும் கூட போற்றும் உயர்ந்த மனிதராக வாழ்ந்து காட்டினார். அதன் மூலம் அவர் இஸ்லாமியக் கொள்கைகளைப் பூரணமாகப் பின்பற்றி வாழ்ந்த காரணத்தால், தான் வாழ்ந்த சம கால மக்களுக்கொரு உதாரண மனிதராகவும் திகழ்ந்திருக்கின்றார்.

ஒருமுறை அவர் ஒரு மனிதரால் பாதிக்கப்பட்டிருந்த போதும், ஆட்சியாளர் என்ற நிலையில் இல்லாது நீதி கேட்டு நீதிபதியிடம் சென்று முறையிட்டார். இவரது பொருளைக் கவர்ந்து சென்ற மனிதருக்கு எதிரான வழக்கில், பொருள் இவருடையது தான் என நிரூபிக்கப்பட்ட பின்னர், அந்தப் பொருளுக்குச் சொந்தம் கொண்டாடிய அந்த மனிதரிடமே அந்தப்பொருளை ஒப்படைத்து, அந்த மனிதரையும் மன்னித்து விட்டார்.

இது தான் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் தேவையுமாக இருக்கின்றது. இஸ்லாத்தின்படி வாழ்ந்து காட்டுங்கள். வெற்றிப்படிகள் உங்கள் காலுக்கடியில். வாருங்கள் இஸ்லாத்தினை வாழ்ந்து காட்டுவோம்!!

இறைமறை சுட்டிக் காட்டும் உதாரணமிக்க, படைக்கப்பட்ட சமுதாயங்களிலேயே உன்னதமான சமுதாயம் என்று உலகுக்கு அறிவித்துக் காட்டுவோம்.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (இறையச்சத்திற்க்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 5 : வசன எண் :08)
 

Dec
12

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்...

 மூலம் - இஸ்லாம்வெப்.காம் - ஷேக் அயாத் அல் கர்னி
--------------------------------------------------------------------------------
 
ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக "விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு" என்றான்.
"தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே" என்றேன். அதற்கு ஷைத்தான் "நான் அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப் போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்;க்கம் இலேசானது. அதை கடினமாக்கி விடாதே!" என்றான். அவன் பேச்சில் மயங்கி உறங்கி விட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து "வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது" என்றான்.
நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் "உன் இளமைப் பருவம் முடியுமுன் அதை முழுமையாக அனுபவி" என்றான். நான் "மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்", என்றேன். அதற்கவன் "பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாது" என்றான்.
நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில் உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான். நான் "அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய்" என்றேன். "இல்லை, இல்லை. நீ இரவு படுக்குமுன் துஆ செய்யலாமே" என்றான்.
நான் "உம்ரா செல்ல நாடியுள்ளேன்" என்றேன்."நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளு தானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய்" என்றான்.
நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் " நீ ஏன் பாடல், கவிதைகளை பாடி உன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்?" என்றான். நான் "பாடல் பாடி கூப்பாடு போடுவது ஹராம்" என்றேன். உடனே அவன் "மார்க்க மேதைகளிடையே இசை, பாடல் குறித்து கருத்து வேற்றுமை உள்ளது" என்றான். "இசையை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களை நான் படித்துள்ளேன்" என்றேன். உடனே அவன் " அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது" என்றான்.
அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் "என்ன வெட்கப்படுகிறாய்? முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே!" என்றான். "அந்நியப் பெண்ணை பார்ப்பது நரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன்" என்றேன். அவன் சிரித்து விட்டு "இயற்கை அழகை கலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான் " என்றான்.
நான் "தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன்" என்றேன். உடனே அவன், "ஏன் நீ தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்?" என்றான். "என் நோக்கம் இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து இயம்புவது" என்றேன். உடனே அவன் "இல்லை உன் நோக்கம் உன்னை எல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன் அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்த வேலையை செய்" என்றான்.
 
நான் "இமாம் அஹமது இப்னு ஹன்பல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அவர் மக்களை குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் அழைத்து என்னை எதிர்த்தார் " என்றான்.
 
நான் "இமாம் இப்னு தைமிய்யாவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்?" என்றேன்.அதற்கு அவன் "அவருடைய வார்த்தைகள் என் தலையை பிளக்கின்றன." என்றான்.
 
நான் "இமாம் புகாரி எப்படி?" என்றேன். அதற்கு அவன் "அவர் தொகுத்த ஹதீஸ் கிதாப் என் வீட்டில் இருந்தால் என் வீட்டையே கொளுத்தி விடுவேன்" என்று கோபமாகக் கூறினான்.
 
நான் "ஸலாவுதீன் அய்யூபி எப்படி?" என்றேன். அதற்கு அவன் "அவரைப் பற்றி பேசாதே. என்னையும், என் தோழர்களையும் கேவலப்படுத்தி, எங்களை மண்ணோடு புதைத்தார்" என வெறுப்போடு கூறினான்.
 
நான் "அல் ஹஜ்ஜாஜ் பற்றி?" என இழுத்தேன். அதற்கு அவன் "அவர் போன்று இன்னும் 1000 மனிதர்கள் வரவேண்டும். அவர் தன் நடவடிக்கைகள் மூலம் என்னையும், என் தோழர்களையும் சந்தோஷப்படுத்தியது போன்று யாரும் செய்யவில்லை" என்று உற்சாகமாகக் கூறினான்.
 
நான் "பிர்அவ்ன் எப்படி? " என்றேன். அதற்கு அவன் "அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன் வெற்றி பெற விரும்பினேன்" என்றான்.
 
நான் "அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்?" எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன், "அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள்" என்று உற்சாகமாகக் கூறினான்.
 
நான் "அபூ லஹப் எப்படி?" என்றேன். அதற்கு அவன் "நாங்கள் என்றென்றும் இணைபிரியாத தோழர்கள்" என்றான்.
 
நான் "லெனின் எப்படி?" என்றேன். அதற்கு அவன். "என் சிறந்த சீடர்;, ஸ்டாலின் என்ற என் சிறந்த தளபதியை உருவாக்கினார்," என்றான்.
 
நான் "மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி?" என இழுத்தேன். உடனே அவன் "அவை தான் என் வேத புத்தகங்கள்" என்றான்.
 
நான் "மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றை நான் படிப்பது வீண் விரயம்" என்றான் கேலியாக.
 
நான் "டி.வி., சாடிலைட் சேனல் பற்றி" என்றேன். அதற்கு அவன் "அவை தான் மக்களை என்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை" என்றான்.
 
நான் "பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு" என்றேன்.
அதற்கு அவன் "அவை மட்டுமல்ல சன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ் இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள் பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவை மூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்" என்று பெருமையாகக் கூறினான்.
 
நான் "காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி?" என்றேன். அதற்கு அவன் "அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான் வரவேற்கிறேன்" என்றான்.
நான் "சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப்", என்றான்.
நான் "கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன்.
 
அதற்கு அவன் "என் எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து, அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன்" என்று பெருமையோடு கூறினான்.
 
நான் "இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "நீ புறம் பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னை நோகடிக்காதே" என்றான்.
 
நான் "வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அதுவே என் புகுந்த வீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும் அதுவே," என்று பெருமையாகக் கூறினான்.
 
நான் "மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "பேராசை, சந்தேகம், வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியான நம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது, நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்". ஆமாம், என்ன
 
நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்று வினவினான்.
"சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்?" என்று நான் வினவினேன். அதற்கு அவன் "அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம் மூலம் தான்" என்றான்.
"சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்?" என்று நான் வினவினேன்.அதற்கு அவன் "அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும், கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடி செய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன்" என்றான்.
 
"நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது?" எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன் "சபாஷ். நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்ன தெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள் அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது. ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது. ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச் செய்யலாம்.
1. தந்தை,
2. சகோதரன்,
3. கணவன்,
4. மகன்.
சுருங்கச் சொன்னால் ஒரு பெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம்" என உற்சாகம் கொப்பளிக்கக் கூறினான்.
 
நான் "இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "சினிமா, இசை, இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடை உடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும் ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான்" என்றான்.
நான் "சரி நவீன, புதிய கலாச்சாரம் (Modern Culture-Society) பற்றி கூறேன்" என்றேன்.
அதற்கு அவன் "என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும் பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே?" என்றான்.
 
நான் "மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அது தான் என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமே வௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள்" என்றான்.
 
நான் "ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய்" என்றேன்.
அதற்கு அவன் கோபமாக "அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என் பலத்தைக் குலைத்த சதிகாரர்கள். நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள்; திக்ர் செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறார்கள்" என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.
நான் "காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்?" என்று கேட்டேன்.
 
அதற்கு அவன் உற்சாகமாக, "நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின் இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாக என் வலையில் வீழ்ந்தான்" என்று கூறினேன்.
 
நான் "பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான்" என்று கேட்டேன்.
அதற்கு அவன், "நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னை எதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என் அடிமையானான்" என்று கூறினான்.
நான் "ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்?" என்று கேட்டேன்.
 
அதற்கு அவன் "அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்; அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்பு தேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன்" எனக் கூறினான்.
 
நான் "உன் துஆ எது?" என்றேன். அவன் "சினிமா பாடல்கள்" என்றான்.
 
நான் "உன் குறிக்கோள் என்ன?" என்றேன். அதற்கு அவன் "மக்களிடையே பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது" என்றான்.
நான் "சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப்", என்றான்.
நான் "கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன்.
 
அதற்கு அவன் "என் எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து, அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன்" என்று பெருமையோடு கூறினான்.
 
நான் "இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "நீ புறம் பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னை நோகடிக்காதே" என்றான்.
 
நான் "வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அதுவே என் புகுந்த வீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும் அதுவே," என்று பெருமையாகக் கூறினான்.
 
நான் "மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "பேராசை, சந்தேகம், வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியான நம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது, நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்". ஆமாம், என்ன
 
நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்று வினவினான்.
"சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்?" என்று நான் வினவினேன். அதற்கு அவன் "அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம் மூலம் தான்" என்றான்.
"சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்?" என்று நான் வினவினேன்.அதற்கு அவன் "அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும், கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடி செய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன்" என்றான்.
 
"நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது?" எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன் "சபாஷ். நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்ன தெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள் அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது. ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது. ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச் செய்யலாம்.
1. தந்தை,
2. சகோதரன்,
3. கணவன்,
4. மகன்.
சுருங்கச் சொன்னால் ஒரு பெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம்" என உற்சாகம் கொப்பளிக்கக் கூறினான்.
 
நான் "இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "சினிமா, இசை, இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடை உடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும் ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான்" என்றான்.
நான் "சரி நவீன, புதிய கலாச்சாரம் (Modern Culture-Society) பற்றி கூறேன்" என்றேன்.
அதற்கு அவன் "என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும் பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே?" என்றான்.
 
நான் "மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அது தான் என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமே வௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள்" என்றான்.
 
நான் "ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய்" என்றேன்.
அதற்கு அவன் கோபமாக "அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என் பலத்தைக் குலைத்த சதிகாரர்கள். நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள்; திக்ர் செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறார்கள்" என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.
நான் "காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்?" என்று கேட்டேன்.
 
அதற்கு அவன் உற்சாகமாக, "நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின் இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாக என் வலையில் வீழ்ந்தான்" என்று கூறினேன்.
 
நான் "பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான்" என்று கேட்டேன்.
அதற்கு அவன், "நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னை எதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என் அடிமையானான்" என்று கூறினான்.
நான் "ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்?" என்று கேட்டேன்.
 
அதற்கு அவன் "அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்; அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்பு தேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன்" எனக் கூறினான்.
 
நான் "உன் துஆ எது?" என்றேன். அவன் "சினிமா பாடல்கள்" என்றான்.
 
நான் "உன் குறிக்கோள் என்ன?" என்றேன். அதற்கு அவன் "மக்களிடையே பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது" என்றான்.