ஷைத்தான். அவனைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவன் ஒவ்வொரு நிமிடமும் நம்மை அழிவின் பக்கம் அழைத்துச் செல்வதில் குறியாகவே இருந்து கொண்டிருக்கின்றான். நிச்சயமாக, நாம் அவனுடன் போர் செய்த வண்ணமே இருந்து கொண்டிருக்கின்றோம்.
நீங்கள் காலையில் கண் விழித்துப் பார்க்கும் பொழுது, உங்களது குடும்பமே அழிவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கின்றது. உங்களைச் சுற்றிலும் எதிரிகள் தாக்குவதற்குச் சமயம் பார்த்து நின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் கடுமையான, கொடூரமாக ஆயுதங்களும் இருக்கின்றன. முற்றுகையிட்ட வண்ணம் உங்களைத் தாக்கும் நிமிடத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களது துப்பாக்கிகளும், டாங்குகளும் உங்களது வீட்டுக் கதவை நோக்கி திருப்பப்படுகின்றன. துப்பாக்கிகளின் விசையின் மீது விரல்கள், கட்டளைக்காகக் காத்திருக்கின்றன. அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? யாரை உதவிக்கு அழைப்பீர்கள்?
நிச்சயமாக, முஸ்லிம்களாகிய நம்மைக் குறிபார்த்தபடி எதிரிகளின் தோட்டாக்கள் 24 மணி நேரம் இருக்கின்றன, வாரம் முழுவதும், மாதம் முழுவதும் ஏன் நம் வாழ் நாள் முழுவதும், அந்த எதிரியின் கணைகள் நம்மைத் தொடர்ந்த வண்ணம் தானே இருக்கின்றது.