இஸ்லாமியப் பரம்பல் குறித்து Dr.Zakir Naik (01)

கேள்வி எண்: 4
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.
பதில்:
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.



1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்



இஸ்லாம் என்ற வார்த்தை "ஸலாம்" என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. "ஸலாம்" என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.



2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.



உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.



3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி ( De Lacy O'Lary) யின் கருத்து.



இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ'லியரி ( னுந டுயஉல ழு'டுநயசல) எழுதிய "இஸ்லாம் கடந்து வந்த பாதை" (ஐளடயஅ யுவ வுhந ஊசழளள சுழயன) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.



"இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது."



4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.



ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.



5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians)



கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (ஊழிவiஉ ஊhசளைவயைளெ). இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.



6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.



இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.



7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.



இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.



8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்



அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.



9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.



எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.



(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)



10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:



அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

"(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்."



11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.



கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான "அல்மனாக்" பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை "தி ப்ளெய்ன் டிரத்" என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.



12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:



இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.



13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்



"ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்." என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.


0 comments:

Post a Comment