குர்ஆன் நிழலில்


முஸ்லிம்களாகிய நாம்,குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்பதை முழுமையாக நம்புகின்றோம்.ஆனால் அந்த அல்லாஹ்வுடைய வார்த்தையை நம்மில் பலர் தினந்தோறும் ஓதுவதில்லை.
நம்முடைய நாவு அல்லாஹ்வுடைய வார்த்தையை விரும்புவது உண்மையென்றால்???
அதை தினந்தோறும் கற்பதற்கும் ஓதுவதற்கும் தயாராவோம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:

1)இரண்டு விஷயங்களைத்தவிர வேறு எதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு பகல் நேரங்களில் ஓதி வழிபடுகிறார்.இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு பகல் நேரங்களிலும் தர்மம் செய்கிறார். 

2)மாட்சிமைமிக்க இரட்சகன் கூறுகிறான், என்னை நினைவு கூர்வதிலிருந்தும் என்னிடம் கேட்பதிலிருந்தும் குர்ஆன் எவரைத் தடுத்து விட்டதோ (அந்த அளவுக்கு முழு ஈடுபாட்டோடு குர்ஆனை ஓதினால்) அவருக்கு, என்னிட் பிரார்த்தனை செய்து கேட்பவர்களுக்குக் கொடுப்பதை விட மிகச் சிறந்தததைக் கொடுப்பேன். ஏனைய வார்த்தைகளை விட அல்லாஹ்வின் வார்த்தையின் மேன்யைமாகிறது ஏனைய படைப்பினங்களை விட அல்லாஹ் சிறப்புப் பெற்றிருப்பதைப் போன்றதாகும்

3)நபி (ஸல்) அவர்கள், தண்ணீர் பட்ட இரும்பு துருப்பிடிப்பது போல நிச்சயமாக இந்த இதயங்களும் துருப்பிடிக்கின்றன என்று கூறிய போது அல்லாஹ்வின் தூதரே! அதைத் துருவிலிருந்து தூய்மைப்படுத்துவது எவ்வாறு என வினவப்பட்டது. மரணத்தை அதிகமதிகம் நினைவு கூர்வதும், குர்ஆனை ஓதுவதும். (இதயம் தூய்மையடைவதற்கான வழிமுறையாகும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

0 comments:

Post a Comment