ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களுடன் ஒரு சிறை அனுபவம்



"நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்கமாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத்திற்குரியது.".......

 

உடலைப் பலவீனப்படுத்தும் நோய்களையும் யூத வெஞ்சிறையில் கொடிய சித்திரவதைகளையும் பொருட்படுத்தாமல் பிறந்த மண்ணிற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் உயிர் நாடியாகத் திகழ்ந்த அஹ்மத் யாஸீன் அவர்களுடன் சிறையில் ஐந்து மாதங்கள் உடனிருந்து சேவை புரிந்த சிறைத்தோழர் முஹ்ஸின் அபூ அய்துவா அவர்கள் அந்த வீரத்தியாகி மரணமடைந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவருடனான சிறை அனுபவ நினைவலைகளை பத்திரிகை உல கோடு பகிர்ந்துகொள்கிறார்.

பதற்றப்படாத உள்ளமும் வார்த் தைகளால் விபரிக்க முடியாத துணிவும் கொண்ட ஒரு மாமனிதரின் முன்னால் நிற்கிறேன் என்ற எண்ணம் எனக்கு பல முறை ஏற்பட்டதுண்டு. உடல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தா லும் அவருடைய சிந்தனைகளுக்கோ அறிவுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்பட வில்லை. தெளிவான சிந்தனைகளும் சீரிய பார்வையும் அவரை பிற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இஸ்லரேலியக் கொடூரங்கள் அக்கிரமமான ஏகாதிபத்திய ஆசைகள் ஆகியவற்றின் அஸ்திவாரத்தை தகர்த் தெறிவதுதான் அவருடைய உறுதியான சிந்தனையாக இருந்தது. இதுதான் அவரை பிற தலைவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தியது.

இதுவரை கண்டிராத இடையாராத போராட்ட வீரியம் கொண்ட உருக்கு மனிதராக ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்கள் திகழ்ந்தாலும் ஒரு மலரின் தூய்மையைப் போன்றவர் அவர். அதிசயிக்கத்தக்க குணநலன்களைக் கொண்ட அந்த மனிதரையும் தங்களுக்கேற்பட்ட அவமதிப்பிற்கு (பலஸ்தீன் பூமியை இஸ்ரேல் அபகரித்தது) செங்குருதியால் பதிலளிக்கும் அவர்களு டைய தோழர்களையும் பற்றி வார்த்தைகளால் விபரிப்பது எங்களது மொழி யில் முடியாத ஒன்று. ஆனாலும் முன்னோர்களைப் பற்றிய நினைவலை களை அவர்களைப் பின்தொடர்வோர் தங்களது நாவின் மூலம் உயிர்ப்பிப்பது அவர்களுக்கு செய்யும் செஞ்சோற்றுக் கடனாகும்.

* தங்களுடைய கட்டுரைகளில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத துணிவு கொண்ட ஒரு மாமனிதர் என்று ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களை நீங் கள் குறிப்பிடுகிறீர்கள். உங்களது ஐந்து மாத சிறை வாழ்க்கையில் இத்தகைய உவமையைப் போன்று ஏதேனும் நிகழ்வுகளை அவரிடம் கண்டீர்களா?

இது சம்பந்தமாக நான் கூற விரும்புவது என்னவென்றால் ஷெய்க் அஹ் மத் யாஸீன் அவர்களைப் பற்றி அவர் களுடைய ஆதரவாளர்களும் நண்பர் களும் கூறுவதைவிட அவர்களின் எதிரிகள் கூட ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர் களின் நெஞ்சுறுதியையும் அவர்கள் தாம் கொண்ட இலட்சியத்தில்- வார்த்தை களால் விபரிக்க முடியாத உறுதியையும் அங்கீகரித்தார்கள். இது சம்பந்தமாக அவர்களுடனான இரண்டு அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கி றேன்.

நானும் ஷெய்க் அவர்களும் செய்த குற்றத்தின் விசாரணை நாடகத்திற்குப் பின் நாங்கள் இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்படவேண்டுமென்ற தீர்ப்பை நான் அறிந்தேன். ஷெய்க் அவர்களின் அருகாமை எனக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தியது. ஆனாலும் நோயா ளியான ஒரு மனிதருக்கு சிறைத் தண்டனை அளித்ததை அறிந்து நான் நிலைகுலைந்தேன், சிறைஅதிகாரி யோடு நான் வாதிட்டேன்.

"வயோதிபரான ஒரு நிரபராதியை சிறையில் அடைக்கும் அளவுக்கும் மனி தத் தன்மை இழந்தவரா நீங்கள்?" என்று நான் கேட்டபோது அந்த நபர் இவ் வாறு பதிலளித்தார். "உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நடக்கக் கூட இய லாத இந்த மனிதரை இனியும் சிறையில் அடைத்து எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் அவருடைய மூளையையும் கேடுகெட்ட அறிவையும் தான் சிறைவைக்கிறோம்".

ஷெய்க் அவர்களை உடல்ரீதியாக சித்திரவதை செய்வதைக் கண்டு பொருக்க இயலாத நான் அந்த சிறை அதிகாரியிடம் கேட்டேன், "எதற்காக அந்த நோயா ளியான மனிதரை துன் புறுத்துகிறீர்கள். ஒரு ஊனமுற்றவரை அடித்து துன்பு றுத்துவதன் மூலம் உங்கள் வீரத்தை வெளிப்படுத்துகின்றீர்களா?" என்று. அதற்கு அந்த சிறை அதிகாரி கூறினான், "யார் கூறினார் இவர் நோயாளி என்று. அவருடைய தலையும் மூளையும் ஆரோக்கியமாக வல்லவா இருக் கின்றது" என்று.

 சுருக்கமாகக் கூறினால் தான் கொண்ட இலட்சியத்திற்காக எந்த எல்லை வரை செல்லவும் எத்தகைய சித்திரவதைகளையும் தாங்கவும் உறுதிபடைத்த ஷெய்க் அவர்களின் தியாக மனநிலையை எதிரிகள்கூட அங்கீக ரித்தார்கள் என்பதுதான்.

* ஏதேனும் காரியங்களுக்காக ஷெய்க் அவர்களை எதிரிகள், பயமு றுத்தல், சித்திரவதை செய்தல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத் தியதை உங்களால் நினைவுகூற இயலுமா?

முடியும் என்பது மட்டுமல்ல. ஒன்றிற்கு மேற்பட்ட தடவை சிறை உயரதிகாரி களின் விலை குறைந்த மிரட்டல் தந்திரங்களையும் கேடு கெட்ட ஆசை வார்த்தைகளையும் ஷெய்க் அவர்கள் சந்தித்ததுண்டு. ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்ற ஈலாத் ஸெய்பூன் என்ற இஸ்ரேலிய இராணுவ வீரனைப் பற்றிய விபரமளிக்க வேண்டி சிறை அதிகாரிகள் ஷெய்க் அவர்களை நிர்ப்பந் தப்படுத்தினார்கள்.

ஷெய்க் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்துமா றும் அவ்வாறு செய்தால் உலகத்தில் அவர் விரும்பும் எந்தப் பகுதியிலும் சுகபோகமாக வாழ்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் காட்டினர். ஆனால், எவராலும் அழிக்க இயலாத மன உறுதியுடன் பளிச்சிடும் உறுதியான வார்த்தைகளால் ஷெய்க் அவர்கள் அளித்த பதில் ஒவ்வொரு பலஸ்தீன சகோதரனும் மன தில் பூட்டிப் பாது காக்க வேண்டியவை.

"நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்படவேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்க மாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத் திற் குரியது.

சிறைக்கு வெளியேயுள்ள ஓர் அனுபவத்தைக் கூறுகிறேன். சில அமெரிக்க அறபு தலைவர்கள் இஸ்ரேல் உலவுத் துறை வட்டாரங்களின் சதித்திட்டங் களைப் பற்றிய இரகசியத் தகவலை அளித்தார்கள். ஷெய்க் அவர்கள் அமெ ரிக்காவின் உதவிக்கு இவ்வாறு பதில ளித்தார்கள்: "எவரும் எனக்காக வருந்த வேண்டிய தேவையில்லை. தற்காப் புப் போரைப் பற்றிய பூரண அறி வோடுதான் நாங்கள் இந்தப் பணியை ஏற்று செயல்படுத்தத் துவங்கியிருக் கிறோம். நாங்கள் இப்பணியைத் துவக் கிவைத்தது சொந்த நாட்டிற்காக இரத்த சாட்சிகளாக மாறத்தான்".

தொடர்ந்து அவர் கூறிய வார்த்தைகள் யூத ஸியோனிஸ்டுகளின் காதுகளில் இடிமுழக்கமாக இறங்கக் கூடியவை. பலஸ்தீனிலுள்ள பிஞ்சுக் குழந்தைக ளின் குருதியா உங்கள் வயிற்றுக்கு விருப்பமானது? என்னை மட்டும் எதற் காக இந்தப் பூவுலகில் மீதம் வைத்துள்ளீர்கள்? பிறக்கும் பொழுதே கஷ்டங் களைத் தாங்குவதற்கு விதிக்கப்பட் அந்தக் குழந்தைகளின் ஆன்மா வைக் காட்டிலும் என்னுடைய ஆன்மாவிற்கு மதிப்பொன்றுமில்லை.

நீங்கள் என்னைத்தான் கொல்ல முயல்கின்றீர்கள் என்றால் அதற்காக நீங்கள் சிரமப்படத் தேவையில்லை. உங்கள் இலக்கு நானென்றால் அது ஒருபோதும் தவறாது. என்னுடைய ஒவ்வொரு நகர்வும் எல்லோரும் அறி யும் விதமாகப் பகிரங்கமானது. உங்களுடைய கரங்களால் கொல்லப்பட வேண்டும் என்பதே எனது இறுதி இலட்சியம்.

நாங்கள் நெஞ்சுறுதியின் உடன் பிறப்புக்கள். போராட்டத்தின் தீப் பிழம்புகள் சிதறும் தலைமுறையின் உற்ற நண்பர்கள். தன்மானத்தின் பாதுகாப்பிற்கா கத்தான் போர் செய்யும் உறுதி பூண்டிருக்கிறோம் என்று அமெ ரிக்க அறபு லகத்தோடு கூறுங்கள்.

* தன்னைப் பீடித்திருக்கும் நோய்களோடு ஷெய்க் அவர்கள் எவ்வாறு சிறைக் கொட்டகையில் மன ரீதியான, உடல் ரீதியான சித்திர வதைகளை எதிர் கொண்டார்கள்?

உண்மையில் என்னவென்றால் ஒருநாள் கூட ஷெய்க் அவர்கள் தனக்கு ஏற் படும் சிரமங்கள் குறித்து குறைபட்டுக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பின் தொடரும் நோய்களுடனேயே எப்பொழுதும் உதட்டில் புன்சிரிப் போடும் இருப்பார்கள். வெறுப்பு அல்லது பொறுக்க இயலாத தன்மையின் ஒரு அம்சம்கூட அவர்களின் ஜொலிக்கும் முகத்திலோ அல்லது அமைதியான வார்த்தைகளிலோ வெளிப்படாது.

அலை அடங்கிய கடல் போன்ற உள்ளமும், சாந்த கம்பீர முகமும்தான் அவர் களுடைய அடையாளம். உதடுகள் எப்பொழுதும் பிரார்த்தனையிலேயே இருக்கும். அல்குர்ஆன் தான் அவர்களுடைய மொழி. அதன் காரணமாகத் தானோ என்னவோ அவருடைய மார்க்க-அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு போதும் பிழைகள் நிகழாதது. அதேபோலவே அவர் சோதனைகளை உறுதி யோடு எதிர்கொண்டதும் என்று என்னால் கூற இயலும்.

ஜமாஅத்தாக தொழுவதற்குக் கூட இயலாத ஒரு குறுகிய இடத்தில்தான் நானும் ஷெய்க் அவர்களும் இன்னொரு சகோதரரும் அடைக்கப்பட்டிருந் தோம். வடக்கு பலஸ்தீனில் ஒரு மறைவான தரக்குறைவான சிறைக் கூட மாக இருந்தது அது. உடம்புகளிலுள்ள எழும்புகளைக்கூட துளைக்கும் கடும் குளிர் நிலவும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் போர்த்துவதற்கு ஒரு போர்வைகூட இல்லாமல் அந்த நோயாளியான வயோதிப மனிதர் கழித்தது, ஐந்து மாதங்கள். ஒலிவ் மரங்கள்கூட குளிர்ந்து விறைத்துப் போய் நிற்கும் அந்தத் துன்புறுத்தும் இரவுகளில் கதவுகள்கூட இல்லாத இரும்பு ஜன்னல் களைக் கொண்ட அந்தக் குறுகிய அறையில் தங்குவதற்கு நேர்ந்த பிறகும் ஷெய்க் அவர்கள் எந்தக் குறைகளையும் முறையிடத் தயாரானதில்லை.

அதுமட்டுமல்ல, அந்தச் சிறையில் எங்கள் மூன்றுபேரைத் தவிர மற்ற அனை வருக்கும் போர்வை வழங்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் யூதர்கள். இதுபற்றி நான் ஷெய்க் அவர்களிடம் "பிற சிறைக்கைதிகளுக்கு போர்வை வழங்கப்பட் டுள்ளது, நமக்கு வழங்கப்படவில்லை. இதனைக் கேட்பது நமது உரிமையல் லவா? என்று கேட்டேன். அதற்கு ஷெய்க் அவர்கள் அளித்த பதில், நாம் வசிப் பது சிறைக் கூடத்தில், நட்சத்திர ஹோட்டலிலல்ல.

இன்னொரு சூழலில் சிறைக் கைதிகளிடம் காட்டுமிராண்டித்தனமான முறை யில் நடந்துகொள்ளும் ஸியோனிஸ்டுகளின் மறுக்கும் நட வடிக்கைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு ஷெய்க் அவர்களிடம் ஒப்புதல் கேட்ட பொழுது ஷெய்க் அவர்கள் கூறினார்கள், "நாம் இருப்பது சிறைக்கூடத்தில். மனிதத் தன்மையை இழந்துவிட்ட எதிரிகளிடம் உரிமை யைக் கோருவது என்பது முட்டாள்த்தனம் என்பதைத் தவிர வேறு என்ன? நீங்கள் உண்ணாவிரதம் இருந்துகொள்ளுங்கள். அதில் நான் கலந்துகொள்ள மாட்டேன்" என்று.

* விசாரணைகளை ஷெய்க் அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?

விசாரணையின்போது ஷெய்க் அவர்களைப் பின்தொடர எங்களுக்கு அனுமதி யில்லாததால் விசாரணைக் கூண்டில் ஷெய்க் அவர்களின் பதில் எவ்வாறு இருந்தது என்பதை அறிய எங்களால் இயலாதுபோனது. ஆனாலும் விசார ணைக்கு முந்திய இரவில் ஷெய்க் அவர்கள் பூரணமாக விசாரணைக்குத் தயாராவார்கள். தன்மானம் ஜொலிக்கும் முகத்தைக் கொண்டவர்களாக ஷெய்க் அவர்கள் அவ்வேளை களில் திகழ்வார்கள்.

கடினமான மூலநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அதிகமான இரத்தம் வெளி யாகும். மேலும் பொறுக்க இயலாத வேதனையும் அவர்களுக்கு ஏற்படும். இதனால் அவர்கள் சில மாத்திரைகளை உட்கொண்ட பிறகே விசாரணையை சந்திக்கச் செல்வார்கள். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பிறரின் உதவி தேவைப்படும். ஷெய்க் அவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் எதிரிகளிடம் தனக்கு உதவி புரிய அனுமதித்ததே இல்லை.

விசாரணைகளுக்கு முந்திய நாளே பிறரின் உதவி இல்லாமல்தான் இந்த மாத்திரைகளை உட்கொள்வார்கள். அல்லாஹ்வின் எதிரிகளிடமிருந்து ஒரு மிடர் தண்ணீர்கூட வாங்கிக் குடிக்காமல் இருப்பதற்கு விசாரணை தினங்க ளில் நோன்பிருக்கும் ஷெய்க் அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

* ஐந்துமாத சிறையனுபவமானாலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாட்க ளில் மனதைப் பாதித்த ஏதேனும் நிகழ்வுகள் பற்றிக் கூற இயலுமா?

ஐந்து மாதம் ஷெய்க் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததை நான் மிக பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தக் காலக்கட்டத்தில் மறக்கவிய லாப் பல சம்பவங்களும் நடந்தது. ஒரு நாட்காலியில் அமர்ந்து கட்டி லில் சாய்ந்துகொண்டுதான் ஷெய்க் அவர்கள் குர்ஆனை ஓதவும், சிறையில் அபூர்வ மாகக் கிடைக்கும் நூல்களையும் படிப்பார்கள். நூல்களின் பக்கங்களைப் புரட்ட சைகை காண்பிக்கும்பொழுது நான் அதனைப் புரட்டிக் கொடுப்பேன்.

ஒருமுறை நான் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாலும் களைப்பா லும் தூங்கிப் போனேன். திடீரென நான் தூக்கத்திலிருந்து விழித்தபோது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. ஷெய்க் அவர்கள் நூலின் பக்கத்தைப் புரட்ட தலையை அசைத்தவாறு தலையையும் நெஞ்சையும் புத்தகத்தின் அருகில் கொண்டு வந்து நாக்கை வெளியில் நீட்டி அதனால் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்ட முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். இது ஒருபோதும் மறக்கவியலா நிகழ்ச்சியாக இருந்தது.

அக்காட்சியினால் துக்கமும் குற்ற உணர்வும் ஆச்சரியமும் உள்ளத்தில் தோன்றவே நான் ஷெய்க் அவர்களிடம் கேட்டேன், ஏன் உதவிக்கு என்னை எழுப்பவில்லை?

அதற்கு ஷெய்க் அவர்கள் கூறியபதில் அவர்மீது நான் கொண்டிருந்த மதிப்பை பன்மடங்காக்கியது. ஷெய்க் அவர்கள் கூறினார்கள், "எனக்கு சுய மாக செய்ய முடியும் காரியத்தை நான்தான் செய்ய வேண்டுமென்று உறுதி கொண்டுள்ளேன். உங்களுடைய உதவி மட்டும் இல்லாவிட்டாலும் தனியாக எழுந்துநிற்கவும் என்னால் இயலும்".

இதைகேட்ட எனக்கு சிரிப்பு தோன்றியது. பக்கவாத நோயால் பீடிக்கப்பட்ட, இருகால்களையும் பயன்படுத்த இயலாத அந்த முதியவர் கம்பை ஊன்றிய வாறு எழுந்து நடப்பதும், ஒரு அடியெடுத்து வைக்கும்போதே தரையில் வீழ்வதும் மீண்டும் அதிக ரித்த ஊக்கத்தோடு கம்பை ஊன்றிய வாறு எழுந்து நிற்பதையும் நான் காண்பதுண்டு.

சிறிது காலத்திற்குப் பின் அவருடைய இயக்கத் தோழர்கள் அவருக்கு சக்கர நாட்காலி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்கள். நோயினால் துன்புற்ற வேளையி லும் சிறையில் கொடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் அறி வைத் தேடுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை அந்த முதியவர் எங்களுக்குக் கற்பித்தார்.

நன்றி: www.meelparvai.net




What a home.......? (DNT MISS)


What a home is this? No TV, no internet, no A.C., no books, no family members, no friends ..... its seems like "home alone" .... get ready ... our future ... singular entry; individually ...

...

....

...

...

...

Scroll down….

 

 
 
cid:1.2877306707@web94304.mail.in2.yahoo.comcid:2.2877306707@web94304.mail.in2.yahoo.comcid:3.2877306707@web94304.mail.in2.yahoo.comcid:4.2877306707@web94304.mail.in2.yahoo.comcid:5.2877306707@web94304.mail.in2.yahoo.comcid:7.2877306707@web94304.mail.in2.yahoo.com

 







குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்


 From: http://wp.me/pzWg2-bd



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 

 குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்

 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

 

இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை  (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.

 

1)      கால்நடைகளின் வயிற்றுப்பகுதி

2)      வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்

3)      கலப்பற்ற பால்

4)      அருந்துபவர்களுக்கு இனிமை

5)      தாராளமாக புகட்டுகிறோம்

 

மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா? 

1.  கால்நடைகளின் வயிற்றுப்பகுதி

2.  வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்

 

பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும் இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.

பசுமாடும் அதன் வயிற்றுப் பகுதியும்

பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன அவைகளாவன

  1. RETICULUM (ரெடிகுழம்)
  2. RUMEN,   (ரூமென்)
  3. OMASUM,  (ஓமசம்)
  4. ABOMASUM (அபோமசம்)

இங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே!.

பசுமாடும் அதன் உணவு உட்கொள்ளும் முறையும்

பசுமாடு புல்வகைகளை உணவாக விழுங்குகிறது அந்த விழுங்கிய உணவு நேரடியாக ரூமென் மற்றும் ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது பிறகு பசுமாட்டிற்கு உண்ட கலைப்பு ஏற்பட்டு அமைதியாக அமர்ந்து விடுகிறது.

சேமிக்கப்பட்ட உணவை ரெடிகுழம் என்ற பகுதி அதன் மற்ற இரு பாகங்களான RUMEN, (ரூமென்) OMASUM,  (ஓமசம்) என்ற பகுதிகளுக்குள் தள்ளிவிடுகிறது.

 

அமைதியாக அமர்ந்திருக்கும் பசுமாட்டிற்கு மீண்டும் உணவுப் பசி எடுக்க ஆரம்பிக்கிறது உடனே புல்வெளியை நாடிச் செல்லாமல் தான் வயிற்றில் சேமித்து வைத்த உணவு மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து பசுமாடு அசை போட ஆரம்பிக்கிறது. இந்த இயக்கத்திற்கு ரெடிகுழம் பயன்படுகிறது இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் பசுமாட்டின் வாய் பகுதிக்கு செலுத்தப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அசை போட முடிகிறது.

 

பசுமாடு உட்கொண்ட உணவை சுத்திகரிக்கும் முறை

பசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றுப்பகுதியான ரூமென் என்ற அறைக்குள் தள்ளப்படுகிறது இங்கு பல மில்லியன் மைக்ரோப்ஸ்-கள் அடங்கியுள்ளன இந்த மைக்ரோப்ஸ்கள் அசைபோட்டு நான்றாக அரைத்த உணவில் செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதியை கூட மிக எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது.

 

பிறகு செரிமானம் ஆன உணவு ஓமசம் என்ற அறைக்கு சென்றடைகிறது. இந்த ஓமசம் பகுதியைப் பற்றி அறிவியல் உலகம் முழுவதுமாக இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை எனினும் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் உட்கொண்ட உணவை சிறு சிறு துகள்களாக ஒரே சீராக மாற்ற இந்த பகுதி பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.

 

செரிக்கப்பட்ட உணவு இரத்தித்தில் எவ்வாறு கலக்கிறது!

 

பசுமாட்டின் வயிற்றிலுள்ள இறுதிப் பகுதியான அபோமசம் என்பது மற்ற பிராணிகளின் வயிறுகளை ஒத்து அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஹைட்ரோகுளோரிக் திரவம் ரூமென் பகுதில் செரிமானத்திற்கு பயன்படுகின்ற மைக்ரோப்ஸ்களை அபோமசம் அறைக்குள் நுழையாமல் தடுப்பதற்கும் அவ்வாறு நுழையும்பட்சத்தில் அவைகளை அழிக்கவும் பயன்படுகிறது.

 

மேலும் இந்த அபோமசம் பகுதியில் சேகரிக்கப்பட்ட அசைபோட்ட உணவுகள் சிறுகுடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள மைக்ரோபியல் எனப்படும் செல் கட்டமைப்புகளால் முழுவதுமாக ஜீரணமான செய்யப்படுகிறது. புரதச் சத்துக்களான அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் உருவாக இந்த பகுதியே பயன்படுகிறது. பிறகு முழுவதும் ஜீரணமான உணவு நேரடியாக இரத்தில் கலந்துவிடுகிறது!

 

இரத்தத்திலிருந்து எவ்வாறு பால் உற்பத்தியாகிறது?

பசுமாடுகளின் உடலில் உள்ள செல்கள் இரத்தத்திலிருந்து நீரையும் ஊட்டச் சத்துக்களையும் அகற்றி அகற்றப்பட்ட அந்த நீரையும் ஊட்டச்சத்தையும் பாலாக மாற்றுகிறது. இந்த பால் பசுமாடுகளின் மடிகளின் வாயிலாக வெளியேறுகிறது.  அதைத்தான் நாம் இனிமையாக பருகுகிறோம்.

 

மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் இறுதியான மூன்றை பகுதியை பார்ப்போமா?

 

3.    கலப்பற்ற பால்

4.   அருந்துபவர்களுக்கு இனிமை

5.    தாராளமாக புகட்டுகிறோம்

கலப்பற்ற பால்

  • ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

 

  • பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.

 

  • பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.

 

  • உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.

 

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வண்மையாக கண்டிக்கிறது!

பால் பற்றி கூறும்போது அல்லாஹ் அதை அருந்துபவருக்கு இனிமை என்று வர்ணிக்கிறான் மேற்படி ஆய்வுகளை பார்த்தால் பால் எவருக்குத்தான் கசக்கும்.

 

தாராளமாக புகட்டுகிறோம்

இங்கு அல்லாஹ் பால் பற்றி குறிப்பிடும் போது இறுதியாக தாராளமாக புகட்டுகிறோம் என்று கூறுகிறான் காரணம் அவன் படைத்த ரப்புல் ஆலமீன் அவன் கூறுவது எப்போதும் பொய் ஆகாது என்று இந்த கருத்தின் மூலம் நாம் அறிய வேண்டும். 

 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த பழமொழியின் அடிப்படையில் இந்த வார்த்தை உண்மை என்பதை நிருபிக்க இந்தியா நாட்டின் பால் உற்பத்தியை அளவுகோளாக பயன்படுத்தி பார்ப்போமா?

இந்தியாவின் பால் உற்பத்தி

ஆண்டு

பால் உற்பத்தி

மக்கள் தொகை

1968

21 மில்லியன் டன்கள்

குறைவு

2001

81 மில்லியன் டன்கள்

அதிகம்

 

மக்கள் தொகை பெருக பெருக பாலின் உற்பத்தியும் பெருகி வருகிறது மாறாக பாலின் உற்பத்தி குறைந்தபாடில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க நாடு ஆண்டுக்கு சராசரியாக 71 மில்லியன் டன்கள் பால் உற்பத்தியை மேற்கொள்கிறது.

 

பாலின் உற்பத்தியை 1998ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக நாடுகள் முழுவதையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக 557 மில்லியன் டன்கள் குறைவில்லாமல் பால் உற்பத்தியாகிறது.

சிந்தித்துப்பாருங்கள்

அல்லாஹ்வின் கருணையினால் பால் என்ற இனிமையான பானத்தை நாம் குடிக்கிறோம் ஆனால் இந்த பாலை குடித்துவிட்டு கருணையாளன் அல்லாஹ்வை இணைவைத்து ஒரு சாராரும், அல்லாஹ்வைத் தவிர்த்து பிற வஸ்துக்களை ஒரு சாராரும் வணங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் கோபப்பட்டு பசுமாடுகள் உட்பட பால் கொடுக்கும் கால்நடைகளின் வயிறுகளில் பால் சுரக்காமல் இருக்க கட்டளையிட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஒருகனம் சிந்தித்தப்பாருங்கள்! ஆனால் ரஹ்மத்துல் ஆலமீன் மக்கள் மீது கருணையுள்ளம் கொண்டவனாக இருக்கிறான் அதனால்தான் மனிதனை விட்டுப்பிடிக்கிறான். அவன் பிடியிலிருந்து தப்பிக்க எவருக்கேனும் வலிமை உள்ளதா?

 

சிந்திப்பீர்! செல்படுவீர்!

 மறுமை வெற்றிக்காக இணைவைப்பை தவிர்த்திடுங்கள்

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக இறைவிசுவாசிகளாக மாறிவிடுங்கள்!

 


ஆர்வப்படு; ஆதங்கப்படாதே!


ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சுறுசுறுப்பானவனாக இருக்க வேண்டும். முழுப் பிரபஞ்சத்தின் முக்கியமான அங்கமாகிய முஸ்லிம், பிரபஞ்சப் பொருட்களிடம் காணப்படுகின்ற சுறுசுறுப்பான இயக்கத்தைத் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவனிடம் இயலாமையும் சோம்பலும் இருக்கக் கூடது. உத்வேகமான செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி ஒரு மனிதனை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு சென்று விடக் கூடிய கொடிய விஷமே இயலாமையும் சோம்பலுமாகும். இவ்விரண்டும் கண்டிக்கத்தக்க பண்புகள் ஆகும். இவ்விரு குண இயல்புகளிலிருந்தும் தன்னைப் பாதுகாக்குமாறு அண்ணலார் (ஸல்) இறைவனிடம் பாதுகாவல் தேடியுள்ளார்கள்.

"யா அல்லாஹ்! இயலாமை, சோம்பல் முதலானவற்றிலிருந்தும்; உலோபித்தனம், கோழைத்தனம், தள்ளாமை போன்றவற்றிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், நஸாயி).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயலாமையைக் களைந்தெறிந்து விட்டு பயன் தரும் விவகாரங்களில் பேரார்வத்துடன் செயற்படுமாறு பணிக்கிறார்கள். இங்கு நபியவர்கள் பொதுவாக பயன் தரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கூறுகிறார்கள். அதாவது, பயன் தரும் விவகாரங்களை அவர்கள் கூறுபோடவில்லை. நேரடியாக மார்க்கத்துடன் தொடர்புறுகின்ற விடயங்களாக இருந்தாலும் சரி, உலக விவகாரங்களாக இருந்தாலும் சரி, அவற்றில் நலன் தரும் நன்மைகளும் பயன்களும் இருந்தால் அவற்றைப் பேரார்வத்துடன் எடுத்து நடந்திட வேண்டும்.

"அக்கால அப்பாஸிய அரண்மனைகளில் அரச கருமங்களில் ஈடுபட்ட அமைச்சர்கள் தமது அரச கருமங்களிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும் கூட, தங்களது சட்டைப் பைக்குள் இருக்கின்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தவறுவதில்லை.
குறிப்பாக, ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் இளைஞர்களும் மாணவர்களும் இவ்விடயத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பெறுமதியான மணித்துளிகளை அவர்கள் நாசப்படுத்திடக் கூடாது. கல்வித் தேடல் என்பது (பர்ழான) கடமையாகும். இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிப்புப் பழக்கம் இல்லாத சமூகம் வெற்றியின் ஏணிப்படிகளை எட்டிப் பிடித்திட முடியாது.

இன்று வாசிப்புப் பழக்கம் மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருகிறது. எல்லாவற்றையும் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்கின்ற நிலையும் அவற்றோடு தங்களது தேடலை மட்டிட்டுக் கொள்ளும் போக்கும் தொடருகின்றது. சுயமான தேடல் என்பது பயனுள்ள விடயமாகும். அதனைக் கைவிட்டு பொன்னை விடப் பெறுமதியான நேரத்தை நாசமாக்குகின்ற ஒரு பரம்பரையை நாம் சந்திக்கிறோம்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் அநேகர் பரீட்சையில் சித்திபெறுவதற்காக வாசிக்கிறார்கள், மனனமிடுகிறார்கள். பரீட்சை முடிவுற்றதும் வாசிப்புக்கு விடைகொடுத்து அனுப்பி விடுகிறார்கள். எழுத்துக்கும் எழுத்துச் சாதனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த குர்ஆனைச் சுமந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்ற நிலை மட்டும் ஆரோக்கியமாக உள்ளது.

இன்று அரபு உலகைச் சேர்ந்த ஒரு மனிதன் ஒரு வருடத்திற்கு 1/4 பக்கம் வாசிக்கிறான். அதாவது 1/2 மணித்தியாலம் வாசிக்கிறான். ஆனால் ஒரு அமெரிக்கப் பிரஜை ஒரு வருடத்திற்கு 7 நூற்களை வாசித்து முடித்து விடுகின்றான். 1960 ம் ஆண்டுகளில் வாசிக்கத் தெரியாத சமூகம் என்று கேலி செய்யப்பட்டவர்களே அரபுகள். இன்று 1/4 பக்கம் வாசிப்பதானது வரவேற்கத்தக்க விடயமே.

1967 ம் ஆண்டு அன்றைய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான் ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு யுத்த தந்திரோபாயங்களையும் வியூகங்களையும் விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவ்வாறு தெளிவுபடுத்தியது குறித்து அவர் விமர்சிக்கப்பட்டார். அப்பொது அவர் கீழ்வருமாறு கூறினார்:

"நான் யுத்த தந்திரோபாயங்களை ஏன் வெளியிட்டேன் என்றால், எனக்குத் தெரியும்; நிச்சயமாக அவற்றை அரபிகள் வாசிக்க மாட்டார்கள். அப்படி வாசித்தாலும் அவற்றை விளங்கி உள்வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு உள்வாங்கினாலும் அவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்த மாட்டார்கள்."

இஸ்லாத்தின் எதிரிகள் நமது பலவீனத்தை நன்குணர்ந்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நமது அறிவியல் பாரம்பரிய வரலாற்றை எடுத்து ஆராய்ந்தால் சுயமான தேடலுக்கான முன்மாதிரிகளைக் கண்டுகொள்ளலாம். இமாம் இப்னு ருஷ்த் அவர்கள் இரு சந்தர்ப்பங்களில் மாத்திரமே வாசிக்காது இருந்துள்ளார்கள். முதலாவது சந்தர்ப்பம் அவரது தாய் மறைந்த நாள். இரண்டாவது, அவர் திருமணம் செய்து மனைவியோடு இருந்த முதல் இரவு.

அக்கால அப்பாஸிய அரண்மனைகளில் அரச கருமங்களில் ஈடுபட்ட அமைச்சர்கள் தமது அரச கருமங்களிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும்கூட, தங்களது சட்டைப் பைக்குள் இருக்கின்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தவறுவதில்லை.

ஓர் அறிஞரை நோக்கி ஒருவர், "வாருங்கள்! சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்போம்" என்று கூறினார். அதற்கு அவ்வறிஞர், "சூரியனை நிறுத்தி விட்டு வாருங்கள். பேசிக் கொண்டிருக்கலாம்" என்று கூறினார்.

பயனுள்ள விவகாரம் என்பது நாவல்களையும் சிற்றின்ப வேட்கைக்குத் தீனி போடும் புத்தகங்களையும் வாசிப்பது என்று பொருளாகாது. மாறாக, சிந்தனைக்கு விருந்தாக அமையக்கூடிய, உள்ளத்தைப் பண்படுத்தக்கூடிய, நடத்தைகளை நெறிப்படுத்தக்கூடிய நல்ல நூல்களை வாசிப்பதே பயன் தரும் செயலாகும். வேலைப்பளுவால் நேரத்தை நிரப்புவதும் பயன் தரும் விடயமல்ல. ஓய்வும் மனிதனுக்கு இன்றியமையாத, பயன் தரும் அம்சமே. உடல் ஆரோக்கியம் பேண வியர்க்க வியர்க்க விளையாடுவதும் பயன் தருவதே. மணித்துளிகளை வீண் விளையாட்டுக்களாலும் கேளிக்கைகளாலும் பாவங்களாலும் தீமைகளாலும் நிரப்புவது பயன் தரும் விடயமாகாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உனக்குப் பயன் தரும் விடயங்களில் பேரார்வம் கொள். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள். எதையும் செய்ய இயலாது என்று இருந்து விடாதே. உனக்கு துன்ப துயரம் ஒன்று ஏற்பட்டால் "நான் இவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமே" என்று கூறாதே! மாறாக, " அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்தது நடந்திருக்கிறது" என்று கூறு. ஏனெனில், இவ்வாறு செய்திருந்தால், அவ்வாறு செய்திருந்தால் என்ற வார்த்தை ஷைத்தானினது செயற்பாட்டுக்குரிய வாயிலைத் திறந்து விடும்." (ஸஹீஹ் முஸ்லிம்) 


நாம் பயன்படுத்துகின்ற கருவிகள்கூட நமக்குப் பயன் தரவேண்டும். அக்கருவிகள் வாழ்க்கை வசதியை இலகுபடுத்தி செக்கன் கருவூலங்களைச் சேமிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை. அவ்விலக்கை நாம் அடையாவிட்டால், நாம் பயனற்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளோம் என்பதே அர்த்தமாகும். அது நபி வழியுமல்ல. உதாரணமாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசியை எடுத்துக் கொள்வோம். அதன் மூலம் இன்றைய இளைய தலைமுறை பயன்பெறுகிறதா? இதன் மூலம் நலனைவிட தீமையையே அது அதிகம் சம்பாதிக்கிறது.

நமது அன்றாட முக்கிய கடமைகள் முடிவடைந்து மணித்துளிகளைச் சேகரம் செய்து வைத்துள்ளோம் என்றால், அவற்றை எமது வாழ்விடத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைப்பதற்குப் பயன்படுத்தலாம். இது எமது எமது பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கு வழிகோலலாம்.

நாம் ஒரு பிரசார சமூகம் என்ற வகையில் மார்க்கத்தைக் கற்றல், அதனை எத்தி வைத்தல் என்பது நமக்கு ஈருலகப் பயன்களைப் பெற்றுத்தர வல்லது. இதுவே உச்ச பயனுள்ள செயலாகும்.

விரிந்த சிந்தனையோடு செயற்படுகின்றவர் எப்போதும் பயனுள்ள செயற்பாட்டுக்கான ஊட்டத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், எமது வாழ்வை வரைந்தவன் அல்லாஹ். அவன் சகலவற்றையும் நன்கறிந்தவன். (மனிதனுக்குப்) பயனுள்ளவை; பயனற்றவை முதலானவற்றை வேறு பிரித்து அறியும் ஆற்றல் அவனுக்கே உள்ளது. நாம் பயனுள்ளவை எனக் கருதுகின்றவை சிலபோது பயனற்றவையாக மாறிவிடுகின்றன. பயனற்றவை என்று தூர விலக்கி வைப்பவை சிலபோது உச்ச பயனைத் தந்து விடுகின்றன. ஆகவே, இவ்விவகாரத்தில் அல்லாஹ்வைச் சார்ந்திருப்பதே சாணக்கியமானதாகும். அவனில் முழு நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றபோது அவன் சிந்தனைத் தெளிவை எமக்குத் தருவதன் மூலம் துணைநிற்கிறான். செயற்படுத்துவதற்கான தேகாரோக்கியத்தைத் தருபவனும் அவனே!

பயன் தரும் செயற்பாடுகளைச் செய்ய முடியும் என்ற திடஉறுதி ஒருவருக்கு முதலில் தேவை. முடியாது, இயலாது, சிரம சாத்தியமானது முதலாம் பதப் பிரயோகங்கள் எமது வாழ்வைத் துவம்சம் செய்துவிடக் கூடாது. நமது ஆற்றலை, ஆளுமையை முழுமையாக வெளிக்கொணர்ந்து செயற்களத்தில் குதித்திடல் வேண்டும். தனது சக்திக்கு மீறிய ஒன்றைத் தனித்து நின்று செய்ய முடியாதென்றால் அதுவே இயலாமை. செய்ய முடியுமான ஒன்றைச் செய்யாமல் இருப்பது சோம்பல்தனம். பிறரின் உதவியோடு தனது உச்ச ஆற்றலைப் பயன்படுத்தி இயலாமையை இல்லாமலாக்கி முன்னேற வேண்டும். சோம்பல் நம்மிடம் அறவே இருக்கக் கூடாது. இவ்விரு இழி குணங்களும் நமது அன்றாட வாழ்வில் தேக்க நிலையைக் கொண்டு வந்து விடும். எனவேதான், அன்றாடம் தொழுகைக்குப் பின்னர் இவ்விரு பண்புகளிலிருந்தும் நபியவர்கள் பாதுகாவல் தேடச் சொன்னார்கள்.

நாம் நமது வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்கள், தோல்விகளினால் மனம் உடைந்து போய்விடக் குடாது. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் எழுத்தை, அவனது தீர்மானத்தை ஆழமாக நம்பி வாழ்பவன். அவனது திட்டத்தை நூறு வீதம் நம்புகின்றவன். அது வெற்றி காணாதபோது துவண்டு விடக்கூடாது. அது தொடர்பாக அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது. தனது செயற்பாட்டை விரக்தியின் விளிம்புக்கு நகர்த்தி விடக் கூடாது. தனது திட்டத்தைவிடப் பன்மடங்கு பெரியதொரு திட்டம் இருக்கிறது என்பதை நம்பாதவன் அல்லது அதில் பலவீனமானவனே வெறும் கற்பனையில் சஞ்சரிப்பான், ஆதங்கப்படுவான், பிரலாபிப்பான். இறுதியில் ஷைத்தானுக்குக் களம் அமைத்துக் கொடுப்பான்.

அல்லாஹ்வின் திட்டத்தையும் தீர்மானத்தையும் முழுமையாக ஏற்று அங்கீகரித்து அதனையே முழுமையாக விசுவாசித்து வாழுபவன், தனது வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்களும் கஷ்ட நஷ்டங்களும் தோல்விகளும் வெற்றிக்கான ஏணிப்படிகள் என்று நினைக்கிறான். சோதனைகள் அவனைப் பொருத்தமட்டில், தான் நடந்து வந்த பாதையில் அறியாமையால், தான் செய்த தவறுகளையும் சறுக்கிய இடங்களையும் சுட்டுகின்ற மைல்கற்கள் என்று கருதுகின்றான். அந்தப் பாதையில் இனி வரப்போகும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் என்று புரிந்து கொள்கிறான். தொடர்ந்தும் விவேகத்துடனும் விழிப்புணர்வுடனும் பயணிப்பதற்கான அபாய அறிவிப்புகள் என்று அவன் விளங்கிக் கொள்கிறான். இந்த நம்பிக்கையை அவன் தனது நாவினால் மொழிகின்றபோது அந்த நம்பிக்கை வலுப்பெறுகிறது. قدّرَ اللَّهُ مَا شاَءَ فعَلَ - (அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்ததே நிகழ்ந்தது).

பயனுள்ள விவகாரங்களில் ஈடுபடுகின்றவர்கள் முழு உற்சாகத்துடன், இடையிடையே நின்றுவிடாது பயணிக்க இறைத்தூதர் அருளிய கத்ர் பற்றிய ஆழமான நம்பிக்கை அவசியம். இந்த நம்பிக்கையில் பலவீனமடைந்தவர்கள் மார்க்கப் பணிகளிலிருந்தும் விடுபட்டு காணாமல் போய் விடுகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் தங்களுக்கென சிலக் கோடுகளைக் கிழித்துக் கொண்டு கற்பனை வானில் தனியாக சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்!.

நன்றி: - அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ்(இஸ்லாஹி)


 

 

மனிதனின் கண்கள்!!





'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக்கொள்கிறானா?
'ஏராளமான பொருளை நான் அழித்தேன்' என்று அவன் கூறுகிறான்.
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:6to9)


என்று மனிதர்களுக்கு இறைவன் செய்த அருட்கொடைகளை சுட்டிக்காண்பித்து மனிதர்கள் ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்க வேன்டும் என்பதர்க்காக உதாரனங்களை குறிப்பிடுகின்றான்.
இப்போது கண்களைப் பற்றி சில தகவல்களை அறிந்துகொள்வோம்.

இந்த உலகத்தைக் கண்டு ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு - கண். இது எவ்வாறு இயங்குகிறது?

நமது கண் ஒரு கேமிராவைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு கேமிரா பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி(டெவலப்) செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது.
இதில் ஃபிலிம் போன்றுள்ள 'கார்னியா'(விழிப்படலம்) என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான 'கண் மணி'க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, 'கார்னியா' திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் 'கண்மணி'க்குப் பின்னால் உள்ள 'லென்ஸ்'-ஐச் சென்றடைகிறது. இந்த 'லென்ஸ்' தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் 'அக்காமடேஷன்' எனப்படுகிறது.



கேமிரா-வில் உள்ள ஃபிலிமைப் போன்று இயங்கும் 'ரெடினா'-வில், 'லென்ஸ்' ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்தி(டெவலப்) செய்யப்படுகின்றன

இந்த சின்னஞ்சிறு கண்களிளே இத்தனை வேளைகளை வைத்திருக்கும் படைப்பாளனான அந்த ஓர்இறைவன் அல்லாஹ்வை மறந்து, இறைவன் படைத்தவற்றை மனிதர்கள் வணங்குவது மாபெரும் பாவமும், இறைவனுக்கு செய்கின்ற துரோகமுமாகும்.


நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்(இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள் (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?(திருக்குர்ஆன்10:3)

(அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (திருக்குர்ஆன்16:17 )






இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

அழியாத அற்புதம்:

கடந்த தொடரில் கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என்ற அறிவியல் ஆய்வின் முடிவினை தெரிந்து கொண்டோம். இந்தச் செய்தியினை அறிவியல் வாடை கூட இல்லாத அறியாமைக் காலம் என வர்ணிக்கப்பட்ட 1430 ஆண்டுகளுக்கு முந்திய காலத்திலேயே எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மது (ஸல்) அவர்களின் மூலம் சொல்லப்பட்டு விட்டது. இந்தச் செய்தியினை எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, அவ்வாறு சொல்லப்பட்டிருப்பது உண்மைதானா? என்பதை இந்தத் தொடரில் ஆதாரத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்று, ஏக இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதை ஏற்க மறுத்துக் கொண்டிருந்த அறியாமை காலத்து மக்களிடம், அவர் ஒரு இறைத்தூதர்தான் என நிரூபனம் செய்தவற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பல அற்புதங்களை அல்லாஹ் வழங்கி இருந்தான். அவ்வாறு அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களிலேயே மிகச்சிறந்த பேரற்புதமாக விளங்குவது அருள் மறை குர்ஆனாகும். இதனை ஒரு அரபுக் கவிஞர் எல்லா அற்புதங்களையும் மிகைத்து, நம்மோடு காலமெல்லாம் நிலைத்து நிற்கும் பேரற்புதம் அருள் மறைக் குர்ஆன் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

இலக்கணமும், இலக்கியமும் செரிந்த கருத்தாழமிக்க அதன் வசன நடை கண்டு அன்றைய பிறவிக் கவிஞர்களும் அதிசயித்துப் போனார்கள். உம்மி நபியினால் சொல்லப்பட்டது போல் நாமும் ஏன் எழுத முடியாது? என்று போட்டிக்கு நின்றவர்கள் கூட அதன் சொற்பிரயோகத்தில் சொக்கிப் போனார்கள். குர்ஆனின் ஒரேயொரு வசனத்தைப் போன்ற மாற்று வசனம் ஒன்றை உருவாக்கிட நீங்கள், விரும்புவோரையெல்லாம் கூட்டுக்கு அழைத்துக் கொண்டு முயன்றுபாருங்கள் என 1430 ஆண்டுகளுக்கு முன்னால் உம்மி நபியின் மூலம் இந்த உலகிற்கு எடுத்து வைக்கப்பட்ட அந்த சவால் இது வரைக்கும் யாராலும் எதிர் கொள்ள முடியாத சவாலாகவே இருந்து கொண்டிருப்பது அந்த குர்ஆன் இறைவேதம் என்பதற்கான அழியாத அடையாளமாகும். உலக அழிவு வரை அந்த சவாலை யாரும் எதிர்க் கொள்ள முடியாது என்பது வேறு விஷயம்.

ஏகத்துவப் பிரச்சாரம் ஏற்புடையதல்ல என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசித் திரிந்த, அடங்காத அட்டூழியங்களை அப்பாவி முஸ்லிம்களின் மீது தகாத முறையில் ஏவி விட்டு, அதனால் அவர்கள் படும் அவஸ்தையை கண்டு அளவிலா ஆனந்தம் அடைந்து வந்த, அறியாமையின் பிறப்பிடம் எனும் அடை மொழிக்கு சொந்தக்காரன் அபுஜஹில் கூட இருள் சூழ்ந்த இரவு நேரங்களில் இருளடைந்த கனத்த இதயத்துடன் இறைவேதம் ஓதப்படும் ஓசை வரும் திசை நோக்கி மெல்ல சென்று யாரும் அறியாத வண்ணம் ஒட்டுக் கேட்கத் தூண்டியதே! அது எது? குர்ஆன் வசனங்கள், மனித படைப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் வெளிப்பாடு என்பதை அவன் உணர்ந்து கொண்டதல்லவா?

மாற்றுக் கருத்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களின் மனதில் உள்ள விடயங்களை மாற்றிய வசனம்தான் மறக்க முடிகிறதா? கேட்கக்கூடாதென காதில் பஞ்சடைத்து கால் கடுக்க மக்கா வீதியிலேயே நடந்து திரிந்த துஃபைல்(ரலி) அவர்களை துக்கம் துறந்திட துள்ளிக் குதித்து தூய நபியின் பக்கம் செல்ல வைத்த சிறப்பினை இன்றைக்கும் படித்துப் பார்க்கிறோம். துஃபைல்(ரலி) அவர்களின் காதுப் பஞ்சு பறந்தது, அவரது செவிப்பறையில் அல்லாஹ் அருள் வசனம் புகுந்தது. அதனால் அவரது உள்ளமோ ஆனந்த ஆகாயத்தில் சிறகடித்துப் பறந்தது. இந்த நிகழ்வுகளெல்லாம் குர்ஆன் இருளடைந்த மனித மனங்களில் ஏற்படுத்திய பேரொளிப் புரட்சிகளின் வெளிப்பாடுகளில் சிலவைகள்தான். இன்னும் இது போல, அல்லது இதை விட வியத்தகு ஆச்சரியங்கள் நிறைந்த வரலாறுகள் ஏராளம் உண்டு.

உதாரணத்திற்குச் சொல்லப்பட்ட இவர்களை குர்ஆன் இறைமறைதான் என ஏற்க வைத்ததுதான் எது? அந்தக் காலத்தில் அறிவியல் உண்மைகள் உணரப்பட்டிருந்தனவா? இல்லை அறவே இல்லை. ஏன்? அதன் வாடையைக் கூட அவர்கள் நுகரவில்லை என்பது உலகமறிந்த உண்மை. எனவே, குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் அறிவியல் கருத்தால் அவர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்று சொல்லமுடியாது. என்றாலும் இலக்கணமும், இலக்கியமும் அரபிகளின் உள்ளங்களை ஆட்சி செய்து கொண்டிருந்தது என்று சொல்வதை விட ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது என்றால் அது மிகப் பொருத்தமாக இருக்கும். அதனால் இலக்கிய சுவையும், கருத்துக் கோர்வையும் உள்ள கவிதைகள் அவர்களின் உயிரினும் மேலாக மதித்து வந்த கஃபாவின் சுவர்களில் தங்களுக்கும் ஓர் இடம் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில்தான் அனைத்து இலக்கிய காவியங்களையும் மிகைத்து நிற்கும், அனைத்து அரபிக் கவிஞர்களுக்கும் சவாலாக விளங்கும் குர்ஆன் ஒரு உம்மியின் மீது இறக்கியருளப்பட்டது. அதனை இல்லாமல் ஆக்க எதிரிகள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். இறுதியில் தோற்றுப்போய், அதன் இலக்கியத்திற்கு முன் சரணடைந்து இஸ்லாத்தில் தஞ்சம் புகுந்து விட்டார்கள். அதனால் அழிவும், முடிவும் இல்லாத எல்லையில்லா ஆனந்தம் கரைபுரண்டோடும் சுவர்க்கத்தின் சுகத்தில் தஞ்சமானார்கள். அது அன்றைய சரித்திரம்.

அறிவியல் பார்வை:

இன்றோ இலக்கண-இலக்கிய உணர்வுகள் உறைந்து போய், அறிவியல் முதிர்ச்சியில் அலை மோதிக் கொண்டிருக்கும் மனித மனங்களை, குர்ஆன் தனது தீர்க்கமான அறிவியல் உண்மையால் வெற்றி கொண்டுள்ளது என்பதே சரியான உண்மையாகும். அதனால் குர்ஆனின் இலக்கியம் முக்கியத்துவம் இழந்து விட்டது என்று பொருளல்ல. மாறாக மக்களின் மனநிலை இலக்கியத்தில் திளைத்திருந்த காலம் மாறி, அறிவியல் பக்கம் பார்வை செலுத்தி அதற்கு அதி முக்கியத்துவம் வழங்கும் காலம் பிறந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் குர்ஆன் கூறும் பல அறிவியல் உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டு, பல விஞ்ஞானிகளும், அறிவியல் வல்லுனர்களும் குர்ஆன் ஒர் இறைவேதம்தான் என்று உறுதியாக சான்று பகர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கான எடுத்துக் காட்டுகள் சமீபத்திய வரலாறுகளில் ஏராளம்! ஏராளம்! எனினும் அவர்களின் வரலாறு கூற இது பொருத்தமான இடமில்லை என்பதால் தவிர்த்துக் கொண்டேன்.

இன்றைய அறிவியல் உண்மைகள் குர்ஆனில் ஏராளமாக இடம் பெற்றுள்ளது என்பதை விளக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளோம். அந்த வகையில், கருவில் உருவாகும் சிசு ஆணாக, பெண்ணாக பிறப்பதற்கு ஆணின் விந்தணுதான் காரணம் என்பது குர்ஆனில் பல வசனங்களில் மறைமுகமாகவும், தெளிவாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனை பல முறை நாம் படித்துள்ளோம், படித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால், ஆய்வுக் கண்ணோட்டத்தில் அந்த வசனங்களை படித்துப் பார்க்க வில்லை. எனவே, அந்த உண்மைகள் பலரின் கவனத்திற்கு வராமல் போய்விட்டது.

அவர்கள் குர்ஆனை ஆராய்ந்து படிக்க வேண்டாமா? அல்லது அவர்களது இதயங்களில் அதற்குரிய பூட்டுகள் போடப்பட்டுள்ளனவா? என்றும், இந்த குர்ஆனை சிந்தித்துப் படிப்போருக்கு அதில் பல அத்தாட்சிகள் உண்டு என்றும் குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டிருந்தும் இன்று முஸ்லிம்களான நாம் சிந்தித்துப் படிப்பதே இல்லை. அதிலும் வேதனை என்னவென்றால், குர்ஆனின் அரபி எழுத்துக்களையே வாசிக்கத் தெரியாதவர்கள்தான் நம்மில் ஏராளம், ஏராளம். அவர்களால் அதன் பொருளைத்தான் புரிந்து கொள்ள முடியுமா? குர்ஆனை வாசிப்பதற்கே தெரியாத இவர்களால் அதனின் பொருளை அறிந்து, எப்படி ஆய்வுகள் செய்து அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ள முடியும்?.

இன்று மாற்று மதச் சகோதரர்கள் குர்ஆனைப் படித்து, அதில் கூறப்படும் விவரங்களை புரிந்து ஆய்வுகள் நடத்துகிறார்கள். ஆனால் நமது நிலைபாடு என்ன? ஒருவர் வீட்டில் மரணம் விழுந்தால் மட்டுமே பலர் கூடி குர்ஆன் ஓதும் சம்பிரதாயம் நமது சமூகத்தில் வேரூன்றி நிற்கிறது. மற்ற காலங்களில் பட்டுத் துணியில், அல்லது வெல்வெட்டுத் துணியில் துயில் கொள்ளச் செய்து, தூக்கி ஓரம் கட்டி விடுகிறார்கள் நம்மில் பலர். இளவு வீடுகளில் உச்சரிக்கப்படும் மந்திரமாகவே நாம் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். குர்ஆன் உயிருள்ளவர்களை எச்சரிப்பதற்காக அருளப்பட்டது என்ற உண்மையை மறந்து, இந்த இறைமறையையே மரணிக்கச்செய்யும் அவலம் நமது சமூக அமைப்பில் உள்ள வரை உயிரோட்டம் உள்ள சமுதாயமாக நாம் ஒரு போதும் திகழ முடியாது என்பது நிச்சயம். மேலும் வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய் தேடி அலைந்த கதையைப் போல, அறிவியல் கருவூலத்தை கையில் வைத்துக் கொண்டு, அறிவியல் உண்மைகளை வேறெடங்களில் நாம் தேடி அலைவது வேடிக்கையானதும் வேதனை தரக் கூடியதுமாகும். அறிவியல் உலகில் கண்டுபிடிப்புகள் வெளிப்படும் போதெல்லாம் வாய்பிளந்து நிற்கிறோம். ஆனால் அந்த அறிவியல் உண்மை 1430 ஆண்டுகளுக்கு முன்பே நமது இறைவேதம் குர்ஆனில் சொல்லப்பட்டு விட்டது என்பதை மறந்து விடுகிறோம்.

எனவே, குர்ஆனை ஆய்வு செய்து படியுங்கள். அதில் படிப்பினைகள் பல உண்டு. அறிவியல் உண்மையோ அள்ள அள்ள குறையாமல் நிறைந்து கிடக்கிறது. குர்ஆன் ஒரு முடிவுறா அறிவியல் சுரங்கம். தோண்டத் தோண்ட புதிய புதிய கருத்துகள் புலப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே, அன்பு வாசகர்களே! குர்ஆனை படிப்பதற்கென நமது நேரங்களில் கணிசமான அளவு அதற்காக செலவிட வேண்டும். அதில் ஆய்வுகள் பல நடத்த வேண்டும். ஆயுட்காலம் முழுவதும் அல்லாஹ்வின் அருளுக்கு அருகதையானவர்களாக நம்மை நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

கர்பத்தில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற உண்மையை குர்ஆனின் வசனங்களை படித்துப் பார்க்கும் யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவ்வளவு எளிமையாக சொல்லப்பட்டிருப்பது குர்ஆனின் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும். இந்த அறிவியல் உண்மையை 1430 ஆண்டுகளுக்கு முன்னால் ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவியல் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தார்களா? என்று வரலாற்றை படித்துப் பார்க்கும் போது, வேறொரு பெரிய வாழ்வியல் உண்மை அந்த வசனங்களின் மூலம் உணர்த்தப்படுவது தெரியவரும். அறிவியல் வாடை கூட இல்லாத அம்மக்கள், இந்த உண்மையை புரிந்து கொள்வதற்காக மிக எளிமையாக ஆக்கப்பட்டுள்ள இந்த வசனங்கள், மனிதாபிமானமற்ற கொடுமையான பெண் சிசு வதைகளுக்கு முற்று புள்ளி வைப்பதற்காகத்தான் இந்த உண்மையை அப்போது சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆம்! பெண் குழந்தை பெற்றுத் தந்த தனது மனைவியினை அவள்தான் அதற்கு காரணம் என்று கருதி பல சித்திரவதைகள் செய்து, அவள் பெற்ற குழந்தையை புதை குழியில் புதைத்து வந்த அவர்களுக்கு, குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்கு ஆண்மகனான நானேதான் காரணம், தன்னிலிருந்து வெளிப்பட்ட விந்தணுவின் மூலம்தான் பெண் குழந்தை படைக்கப்பட்டது என்பதை உணர்த்தும் போது, அந்த குற்ற உணர்வு தன் பக்கம் திரும்பி இது போன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்க முடியும். அதனைத் தான் இந்த வசனங்கள் சாதித்தன. வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் இது பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்சான் என்றால் என்ன?

பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்று கூறும் வசனங்களில் சிலவற்றை எடுத்துக் கூறி, அதில் அந்தக் கருத்து எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களது சிந்தனைக்கு முன் வைக்கிறேன்.

خَلَقَ الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ

விந்தணுவிலிருந்து மனிதனை (அல்லாஹ்) படைத்தான். அல் குர்ஆன்: 16:4

فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ . خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ

ஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கவும். குதித்து வெளியாகும் நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அல் குர்ஆன்: 86:5-6.

முதல் வசனத்தில் நுத்ஃபாவிலிருந்து இன்சான் படைக்கப்பட்டதாகவும், இரண்டாவது வசனத்தில் குதித்து வெளியாகும் நீரிலிருந்து இன்சான் படைக்கப்பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது. நுத்ஃபா என்பதும், குதித்தும் வெளியாகும் நீர் என்பதும் முறையே ஆணின் விந்தணு, மற்றும் இந்திரியத்தைத்தான் குறிக்கிறது என்பதை முந்திய தொடர்களில் வலுவான ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளேன். விந்தணுவிலிருந்துதான் இன்சான் படைக்கப்பட்டான் என்ற உண்மை இந்த இரு வசனத்தின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இங்கு இன்சான் என்ற அரபிச் சொல் எந்த பொருளில் பயன் படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு குர்ஆனின் பிரயோகமே நமக்கு பதிலாக அமைகிறது. தமிழில் மனிதன் என்ற வார்த்தையை ஆண், பெண் ஆகிய இரு பாலாரையும் குறிப்பதற்கு நாம் பயன்படுத்துவது போல அரபி மொழியில் இன்சான் என்று வார்த்தை குறிப்பிடப்படும். குர்ஆனில் சுமார் 59 முறை இன்சான் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு, அதன் தொடரில் இன்சான் செய்ய வேண்டிய சில கடமைகளும், வேறு சில செய்தித் துளிகளும் சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கடமைகள் ஆண்கள் மீது மட்டுமல்ல, மாறாக பெண்கள் மீதும் விதியாக்கப்பட்டதாகும். மேலும் அந்த இன்சான் குறித்து சொல்லப்பட்ட செய்திகள் ஆண்கள் விஷயத்தில் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறதோ, அதே போல பெண்களுக்கும் பொருந்தி வரும் செய்திகளாகவே உள்ளன என்பதற்கு பின் வரும் வசனம் சான்றாக இருப்பதைக் கவனியுங்கள்:

وَوَصَّيْنَا الْأِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَاناً حَمَلَتْهُ أُمُّهُ كُرْهاً وَوَضَعَتْهُ كُرْهاًوَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلاثُونَ شَهْراً

மேலும், தனது பெற்றோர்க்கு நன்மை செய்யுமாறு மனித(இன்சா)னுக்கு நாம் உபதேசம் செய்தோம், அவனுடைய தாய், சிரமத்துடன் அவ(இன்சா)னைச் சுமந்திருந்து, சிரமத்துடன் அவ(இன்சா)னைப் பிரசவிக்கின்றாள், (அவள்) கர்பத்தில் அவ(இன்சா)னைச் சுமப்பதும், அவ(இன்சா)னுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும்.
அல் குர்ஆன்: 46:15.

பெற்றோருக்கு நன்மை செய்யும் படி மனித(இன்சா)னுக்கு உபதேசம் செய்ததாக இறைவன் கூறுகிறான். இது ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல, பெண்களும் தங்களது பெற்றோருக்கு நன்மைகள் செய்ய வேண்டும். அது போல் ஒரு தாய் குழந்தையை கர்பத்தில் சுமந்திருப்பதும், அதற்கு பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும் என இந்த தொடரில் சொல்லப்பட்ட செய்தித் துளி ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. பெண் குழந்தைக்கும் அதே கால அளவுதான். எனவே, இன்சான் என்ற வார்த்தை ஆண், பெண் ஆகிய இரு பாலாரையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும் என்பது இந்த வசனத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

இந்த உண்மையை தெரிந்து கொண்டதற்குப் பிறகு மேலே கூறப்பட்ட இறைவசனத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். ஆண், பெண் என படைக்கப்படுவதற்கு ஆணின் விந்தணுதான் காரணம் என்ற உண்மை மிக எளிதாக புரியவரும்.

وَاللَّهُ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجاً وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ

மேலும், அல்லாஹ் உங்களை (துவக்கத்தில்) மண்ணிலிருந்து படைத்தான், பின்னர் விந்தணுவிலிருந்து – (ஆண்-பெண் கொண்ட) ஜோடிகளாக ஆக்கினான். எந்தப் பெண்ணும் கர்பமடைவதும், பிரசவிப்பதும் அல்லாஹ் அறியாமல் நடைபெறுவதில்லை. அல் குர்ஆன்: 35:11.

இந்த வசனத்தில் இன்னும் சற்று தெளிவாகவே இந்த உண்மை விவரிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அதாவது உங்களை விந்தணுவிலிருந்துதான் படைத்தான், அந்த விந்தணுவின் மூலம்தான் ஆண், பெண் கொண்ட ஜோடிகளையும் உருவாக்கினான். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள உங்களை என்ற அர்த்தத்திற்கு பயன் படுத்தப் பட்டுள்ள அரபி வார்த்தை ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் குறிக்கும் வார்த்தையாகும்.

இந்த வசனத்தின் தொடரில் பெண்கள் கர்ப்பம் அடைவது பற்றிய செய்தியை குறிப்பதற்கு சுமத்தல் எனும் பொருளுடைய தஹ்மிலு என்ற வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. அதாவது பெண் என்பவள் ஆணிடமிருந்து உற்பத்தியாகி வரும் சிசு, அது எதுவாக இருந்தாலும் அதை சுமப்பவள்தான். அவள் குழந்தையை உற்பத்தி செய்பவள் அல்ல என்ற உண்மையும் மறைந்திருக்கிறது.

وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى

அல்லாஹ்தான் (கர்பறையில்) செலுத்தப்படும் விந்தணுவிலிருந்து (உங்களை) ஆண் பெண் ஜோடிகளாகப் படைத்தான். அல் குர்ஆன்: 53:45,46.

أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى . ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى . فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى

(கர்பத்தில்) செலுத்தப்படும் இந்திரியத்தில் உள்ள ஒரு விந்தணுவாக அவன் இருக்கவில்லையா?

பின்னர் அவன் அலகத்தாக (இது குறித்து பின்னர் விவரிக்கப்படும்) இருந்தான். பின்னர் அவனைப் படைத்து செம்மையாக்கினான்.

பின்னர் இந்திரியத்திலிருந்து ஆண், பெண் என்ற ஜோடிகளைப் படைத்தான். அல் குர்ஆன்: 75:37,38,39.

இந்த இரு வசனமும் ஐயத்திற்கு இடமின்றி, ஆண், பெண் என்பது ஆணின் விந்தணுவிலிருந்துதான் படைக்கப்படுகிறது என்ற உண்மையை 1430 ஆண்டுகளாக இந்த உலகிற்கு மிகத் தெளிவாகவே அதே நேரத்தில் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறன்றன. இந்த உண்மையை அறிவியல் உலகம் மிகத்தாமதமாக தற்போதுதான் கண்டுபிடித்திருக்கிறது. குர்ஆன் விஞ்ஞானத்தையும் போதிக்கும் அற்புத வேதம் என்பதை இனிமேலாவது இந்த உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆவல்.

நபி மொழியில் முரண்பாடா?

பாலைத் தீர்மானிப்பது விந்தணுதான் என்பதை திருமறையில் இடம் பெற்ற பல வசனங்களின் மூலம் அறிந்து கொண்ட நாம், இது குறித்து வந்திருக்கும் ஒரு நபி மொழியினை படித்துப் பார்க்கும் சந்தர்பம் ஏற்படலாம். அப்போது அந்த நபி மொழி குர்ஆனுக்கு எதிரான மாற்று கருத்தினை வலியுறுத்துவது போன்று தோன்றலாம். எனவே, அந்த நபி மொழியையும், அதற்கு சரியான விளக்கம் என்ன என்பதையும் அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.



குழந்தைகளும் கணனியும்





இது கணனி, இணைய யுகம். கல்வி, பொருளாதாரம், அரசியல் அனைத்துத் துறைகளையும் அது தன்வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்றைய உலகில் கணனி தொழில்நுட்பமானது அனைத்துத் துறைகளையும் பாரிய வளர்ச்சிக்கும் இட்டுச்சென்றுள்ளது. ஒரு காலத்தில் மாணவர்களின் மேற்படிப்புக்காகவே கம்யூட்டர் கல்வி பயன்பட்டது. ஆனால் கையடக்கத் தொலைபேசி, வானொலி, இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்திலிருந்தே கணனிக் கல்வி அவசியமாகப் படுகின்றது. இனியும் நாம் இதிலிருந்து ஒதுங்கியிருப்பதானது நம்மை உலக அரங்கிலிருந்து காட்டுவாசிகள் நிலைக்குத் தள்ளிவிடும்.
இதனால் சிறுவயதில் கணனியைப் பாவிப்பதற்கு குழந்தைக்குப் பெற்றோர் உதவி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. எந்தெந்த வயதுகளில் எவ்வகையான பாவனை முறைகளை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்? அவை எவ்வகையான நன்மைகளை தங்கள் குழந்தைக்கு பெற்றுத்தரும் என்பன போன்ற விபரங்களை பெற்றோர் அறிந்திருந்பதும் அவசியமாகும்.
தங்களுக்கு தேவையான தகவல்களைச் சேகரித்தல், அவற்றை ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ளுதல், பாட, உப பாடவிதானத்திற்கான விடயங்களைப் பெறுதல், எதிர்கால வேலைவாய்ப்புக்கான கணனி தகைமைகளை பெறுவதற்கான சரியான அடித்தளத்தை இடுதல் போன்ற பல நன்மைகளை கணனி தொழில்நுட்பம் குழந்தைக்கு வழங்குகின்றது. கற்றலில் உதவி செய்கின்ற ஒரு ஊடகமாகவும் இது விளங்குகின்றது.
இந்த இடத்தில் பெற்றோராகிய நாம் ஒன்றை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். கணனி தொழில்நுட்பமானது கல்விக்கு, பூகோலமய வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையுமே தவிர ஒரு சிறந்த மாணவனை, மாணவியை உருவாக்குவதற்கு இதுமட்டும் போதாது. வெளியுக செயற்பாடுகள், நல்ல நண்பர்கள், சிறந்த குடும்பம், முறையான கல்வி போன்ற பல காரணங்கள் ஒரு குழந்தையுடைய ஆரோக்கியமான உளவளர்ச்சியினை தீர்மானிக்கின்றன. சமூகத்தொடர்பற்ற கம்பியூட்டர் பூச்சியாக மாற்றாமல் அளவோடு அதனை பாவிப்பதுடன் சமூகத் தொடர்பாடல்களில் ஈடுபடுவதும் முக்கியமாகும்.
குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் முழுக்குடும்ப அங்கத்தவர்களுக்கும் பொறுப்பு இருப்பதை மறுக்க இயலாது. குழந்தைகளின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டு சரியான முறையில் வழிநடாத்தி அவர்களை உற்சாகமூட்டும் போது தான் அவர்கள் தமது அறிவை விரைவாகவும் நல்லமுறையிலும் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு குழந்தையினுடைய கல்விச் செயற்பாடுகளில் பங்குகொள்வதற்கு கணனித் தொழில்நுட்பம் வழிவகுக்கின்றது. அவர்கள் கணனிச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது பெரியவர்களும் பங்கு கொள்வது சுவாரசியமானதாகும்.
குழந்தைக்கு எந்த வயதில் கம்பியூட்டர் பாவனை முறையை அறிமுகப்படுத்துவது? எவ்வாறான கம்பியூட்டர் செயற்பாடுகள் சிறந்தவை? இணையத்தளத்தை ஆரோக்கியமாக கையாள்வது எப்படி? போன்ற பல கேள்விகள் பெற்றோர் மனங்களில் எழுவது இயல்பானது. இது தொடர்பான முறையான ஆய்வுகள் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லையாயினும் இத்துறையில் நிபுனத்துவம் பெற்றவர்கள் நல்ல ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் சிபாரிசு செய்கின்றனர். ஆனால் இவ்வாலோசனைகளை நடைமுறைப்படுத்த முன்னால் சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும்.
  1. ஒவ்வொரு குழந்தையும் அடுத்த குழந்தையிலிருந்து (வளர்ச்சியிலும் முதிர்ச்சியிலும்) வித்தியாசப்படுகின்றது. எனவே பெற்றோர் தமது குழந்தையின் உணர்வையும் ஆற்றலையும் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கணனித் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவசியமாகும்.
  2. குழந்தை கணனி கற்பது ஏனைய இலக்குகளைவிட மிக உன்னதமான இலக்காகக் கருதக்கூடாது. உதாரணமாக ஒரு குழந்தை 15 மாதத்தில் நடக்க ஆரம்பி்க்க வேண்டும். இதைப் போல கணனியும் கற்பதையும் நோக்கக் கூடாது.
  3. கணனி உபயோகிப்பது சமூகங்களிலிருந்து அந்நியமாதல் ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. மனித உறவு, சமூகத்தொடர்பாடல் என்பதைத் துண்டித்த ஒன்றாக கணனிக் கல்வியை குழந்தைகளுக்கு ஊட்டக்கூடாது. அதாவது முழுநேரமும் குழந்தையை கணனியில் மூழ்கவிடக் கூடாது.
  4. இரண்டு வயதுக்குற்பட்ட குழந்தைகளுக்கு அருகில் ரேடியேசன் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என மருத்துவர்கள் கூறுவதை கவனத்தில் எடுக்க வேண்டும்.
இப்போது எந்த வயதில் எந்த வகையான கணனிப் பாவனை முறைகளை அறிமுகப்படுத்தலாம் என்பதை நோக்குவோம்.
2 வயது தொடக்கம் 3 வயது வரை
இவ்வயதுகளில் கணனி பாவனை முறையை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை ஆனால் பெற்றோரும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் கணனியை உபயோகிக்கும் போது அதனை அவதானிப்பது குழந்தைக்கு போதுமானதாகும்.
பெற்றோர் செய்யக்கூடியவை :
  • நீங்கள் கணனியைப் பாவிக்கும் போது உங்கள் குழந்தையை மடியில் வைத்திருக்கலாம்.
  • குழந்தையின் கையின் மீது உங்கள் கையை வைத்து Mouse ஐ இயக்குவதன் மூலம் அது எவ்வாறு தொழிற்படுகின்றது எனக் காட்டலாம்.
  • குழந்தைகள் பொருட்களுடன் விளையாடுவதற்கு விருப்பமுடையவர்கள். எனவே Keyboard இல் எவ்வாறு எழுத்துகளை, கட்டளைகளை அழுத்துவது எனச் சொல்லிக்கொடுக்கலாம்.
  • குழந்தைகள் கணனியைப் பாவிப்பது போன்ற காட்சிகள் உள்ள புத்தகங்கள், வீடியோ காட்சிகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இது அவர்களுக்கு கணனி பாவனையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன் உற்சாகத்தையும் அளிக்கும்.
4வயது தொடக்கம் 7வயதுவரை
இவ்வயதுகளில் கணனி பாவனையானது தீவிர முக்கியத்துவம் உடையதல்ல. எனினும் கல்வி சம்பந்தப்பட்ட மென்பெருட்கள் மற்றும் கணனி விளையாட்டுக்களை பாவிக்கக் கற்றுக் கொடுக்கலாம். 6 அல்லது 7 வயதுடையவர்கள் இணையத்தை பெற்றோர்களின் உதவியுடன் உபயோகிக்கத் தொடங்கலாம். இவர்கள் குழந்தைகளுக்கான Web பக்கங்களை பயன்படுத்தலாம். இவ்வாறான பாவிப்புக்களின் போது பெற்றோர் இணையத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் கற்றுக் கொடுக்கலாம்.
பெற்றோர் செய்யக் கூடியவை :
  • உங்களுக்கு இயலுமானவரை குழந்தைகளின் கணனிப் பாவனை நேரங்களில் உடனிருங்கள்.
  • உங்கள் அனுபவங்கள் வாயிலாக நல்ல பழக்கவழக்கங்களையும் ஒழுங்கு முறைகளையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
  • குழந்தைகளுடைய சின்னச் சின்ன ஆர்வங்களை தட்டிக் கொடுங்கள். உதாரணமாக அவர்கள் கணனியில் வரைந்த படமொன்றை பிரதி எடுத்து அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்களை மகிழ்வியுங்கள்.
  • குழந்தைகள் ஈமெயில் பாவிப்பார்களாயின் அந்த ஈமெயிலை நீங்களும் பாவிப்பதன் மூலம் எவ்வாறு ஈமெயில் எழுதுவது, எவ்வாறு பதிலனுப்புவது போன்ற விடயங்களைச் சொல்லிக் கொடுங்கள்.
  • பொரும்பாலான பாடசாலைகள் தங்களுக்கான வெப் பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களுடன் ஈமெயில் மூலமாகத் தொடர்பு கொள்ளக்கூடிய சாத்தியங்களும் உண்டு. இவ்வாறான வசதிகளைக் கண்டறிவதன் மூலம் குழந்தையின் பாடசாலைச் செயற்பாட்டில் கூடுதலாகப் பங்கு கொள்ளலாம்.
  • நூலகர்கள், ஆசிரியர்கள் போன்றோருடன் கலந்துரையாடுவதன் மூலம் பெற்றோர் தொடர்பான சஞ்சிகளைகளை வாசிப்பதன் மூலமும் எவ்வாறு கணனியை குழந்தைகளின் தேவைகளுக்காக ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம் எனக் கலந்துரையாடுங்கள்.
8 வயது தொடக்கம் 11 வயது வரை
இந்த வயதினர் கணனியையும் இணையத்தையும் அதிக அளவில் உபயோகிக்க அனுமதிக்கலாம். இணையத்தை பாடசாலைத் தேவைகளுக்காக உபயோகிக்கலாம். உதாரணமாக படங்களைப் பெறுவதற்கும் கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் ஈமெயில் தொடர்புகளையும் ஏற்படுத்த ஆரம்பிக்கலாம்.
இந்த வயதுக் குழந்தைகள் சுதந்திரமாக சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பிக்கிறார்கள். ஆகவே அவர்களை உன்னிப்பாக அவதானிப்பதுடன் சரியான ஒழுங்கு முறைகளையும் நடத்தைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
பெற்றோர் செய்யக்கூடியவை :
  • இணைய, கணனிப் பாவனை பற்றிய சரியான விதிமுறைகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றை மீறினால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
  • பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கணனி விளையாட்டு மென்பொருள் உற்பத்தியாளர்கள் இவ்வயது குழந்தைகளையே தமது நுகர்வோராகக் கொண்டுள்ளனர். எனவே எக்கச்சக்கமான கவர்ச்சியான விளம்பரங்களால் குழந்தைகள் ஈர்க்கப்படலாம். இணையம் மூலமாக இவ்வகையான பொருட்களையும் வாங்கவும் வசதிகள் உள்ளன. உங்கள் அனுமதியின்றி இணையம் ஊடாக பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டாம். அத்துடன் உங்களது தொலைபேசி பில்லையும் கிரடிற்காட் பில்லையும் கவனமாக சரிபாருங்கள்.
  • கணனி பாவைனை நேரம் அதிகரித்தால் குழந்தையின் வெளியுலக / சமூக செயற்பாடுகளைக் குறைக்கும். ஆகவே கணனி பாவிப்பதற்குரிய நேரத்தை வரையறை செய்யுங்கள்.
12 வயது தொடக்கம் 14 வயதுவரை
இந்த வயதுக் குழந்தைகள் இணையத்தின் முழுமையான பயனையும் பெறத்தொடங்களாம். பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகள், கட்டுரைகள் என்பற்றை வாசிக்கலாம். இவ்வயது குழந்தைகளில் பெரும்பாலானோர் இன்டநெற் Chat எனப்படுகின்ற மற்றவர்களுடன் உரையாடிக் கொள்ளும் முறையை பாவிக்கின்றனர். இவர்களுக்குரிய நல்ல Chat சோவைகளை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. இதன் மூலமாக தங்களுக்கு ஒத்த விருப்பு வெறுப்புக்களைக் கொண்ட பலருடன் அவர்கள் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
பெற்றோர்கள் செய்யக்கூடியவை
  • இந்த வயதுப்பிள்ளைகள் தாமாகவே விடயங்களை அறியமுற்படுவர். நல்ல ஆலோசனைகளையும் வரையறைகளையும் அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும்.
  • அவர்களுடைய இணைய பாவனையின் போது அருகில் இருக்க முயற்சி செய்யுங்கள். இது மிகவும் கடினமான காரியம் எனினும் மிகவும் அவசியமானது. அருகில் இருக்க முடியாவிட்டால் நீங்கள் அடிக்கடி நடக்கக்கூடிய பொதுஅறையில் கணனியை வைக்க வேண்டும்.
  • இணைய உலகில் பல சட்டதிட்டங்கள் உள்ளன. அவ்வாறான சட்டதிட்டங்களையும் அவற்றை மீறினால் வரும் விளைவுகளையும் அவர்களுக்குக் கூறுங்கள்.
  • எந்தெந்த Chat கள் பிள்ளைகளுக்கு பொருத்தமானவை எனக்கண்டிறிந்து அவர்களுக்குத் தெரிவியுங்கள். அத்துடன் அதில் எவ்வளவு நேரத்தை செலவளிக்கலாம் என்பதையும் வரையறை செய்யுங்கள்.
  • கணனியின் இயக்கத்தை சீர்குலைக்கும் வைரஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்குங்கள். வீட்டில் எல்லோரும் உபயோகிக்கும் பொதுவான கணனியாயின் இதனை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது. இணையத்தளங்கள், Flash Drive போன்றவற்றின் மூலம் பரவும் வைரஸ்களின் தீங்கை எழுத்துக்கூறி அவற்றை பாதுகாப்பாக கையாளும் நடைமுறையையும் காண்பிக்க வேண்டும்
  • இணையத்திலிருந்து நல்ல கணனி விளையாட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அநேகமானவை குழந்தைகளுக்குப் பொருத்தமானவையாக இருந்தாலும் சில அளவுக்கு மீறிய வன்முறைத்தன்மை கொணடவை. இது தொடர்பாக குழந்தைகளுக்கு தெளிவாக விளக்குவதுடன் அவர்கள் விளையாடுவதை நீங்களும் பார்க்க வேண்டும்.
15 வயது தொடக்கம் 18 வயது வரை
இந்த வயதுப்பிள்ளைகளுக்கு இணையம் ஒரு ஆசிரியரைப் போன்றதாகும். கல்வி சம்பந்தப்பட்ட தேடல்கள், பொதுஅறிவு மற்றும் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்கும் அராய்வதற்கும் இணையம் இவர்களுக்குப் பெரும் துணை புரிகின்றது. தங்களுடைய மேற்படிப்பைத் தொடர்வதற்கு எவ்வகையான துறையை தேர்ந்தெடுப்பது, எந்தப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் சிறந்தவை போன்ற சிக்கலான விடயங்களைத் தீர்ப்பதற்கு இணையத்தின் துணை தேவைப்படுகின்றது. இவ்வயதினர் அதிகநேரத்தை இணையத்தில் செலவளிக்க வேண்டியிருக்கும்.
பெற்றோர் செய்யக்கூடியவை
  • உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் குடும்பத்தினருக்குத் தேவையான சிலவிடயங்களைக் கொடுத்து அவை பற்றி இணையத்தில் ஆராய்ந்து சொல்லுங்கள். உதாரணமாக விடுமுறைச் சுற்றுலா ஒன்றுக்குச் செல்வதற்கு முன் இடத்தைத் தேர்ந்தெடுத்தல். ஒரு பொருளை வாங்க முதல் அதுபற்றிய ஆய்வுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பின்னர் அவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றி ஒன்றாக அமர்ந்து விவாதியுங்கள். இவ்வாறு குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றாக அமர்ந்து விவாதிப்பது அவர்களது ஆய்வை மேம்படுத்த உதவும்.
  • உங்கள் பிள்ளைகள் கணனிப்பாவனையுடன் வெளியுலகச் செயற்பாடுகளையும் சரியான விகிதத்தில் மேற்கொள்கிறார்களாக என அவதானியுங்கள். இவற்றோடு அதான், கிராஅத் போன்றவற்றிற்கு கணனியைப் பயன்படுத்தவைக்கலாம்.
  • உங்கள் பிள்ளைகள் கணனியை கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்களை ஊக்குவிப்பதுடன் சரியான திசையில் அவர்களை வழிநடாத்துங்கள்.
  • உங்கள் பிள்ளை கவிதை, கதை, கட்டுரை, ஓவியம் வரையக்கூடிய திறன் இருந்தால் அவற்றை வளர்ப்பதற்கும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துவதற்குமான ஒரு இணையத்தளத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டுங்கள்.
ஆரம்பப் பாடசாலைகளில் ஆண், பெண் குழந்தைகளின் கணனிப்பாவனை அதிக வேறுபாடு இல்லை. ஆனால் வயது ஏற ஏற கணனி உலகமானது பெரும்பாலும் ஆண்பிள்ளைகளைச் சார்ந்தே இயங்குகின்றது. உதாரணமாக கணனி விளையாட்டினைக் குறிப்பிடலாம். இதன் காரணமாக பெண் குழந்தைகளின் கணனி ஆர்வம் மெதுமெதுவாகக் குறைகின்றது. பாடசாலைத் தேவைகளுக்கு ஆண்பிள்ளைகளை விட பெண்பிள்ளைகள் அதிகமாக கணனி பாவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய உலகின் வேலைவாய்ப்பானது பெரும்பாலும் கணனியைச் சார்ந்தே நிர்ணயிக்கப்படுகின்றன. சர்வதேச மொழிகளில் ஏதாவது ஒன்று குழந்தைக்குத் தெரியுமாக இருந்தால் ஈகொமர்ஸ் என்ற துறையிலிருந்தே உங்கள் குழந்தை வேலைவாய்ப்பைப் பெறமுடியும். கணனித் தொழில்நுட்பத்தில் ஆண் பெண் வேறுபாடின்றி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகின்றது. எனவே பெற்றோர் ஆண் பெண் பாகுபாடு காட்டாது கணனிக் கல்வி வழங்குவது அவசியமாகும்.

முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!


எழுதியவர்/பதிந்தவர்/உரை பிற ஆசிரியர்கள்

by Dr. Paul Craig Roberts
கட்டுரையாளர், டாக்டர் பவுல் கிரேக் ராபட்ஸ் அவர்கள், அமெரிக்க கருவூலத்தின் (Treasury) முன்னாள் பிரதிச் செயலர், 'வால்ஸ்ட்ரீட்' பத்திரிகையின் கூட்டு ஆசிரியர், ஹூவர் கலாசாலையிலே ஒரு ஆராய்ச்சியாளர், அரசியற் பொருளாதார விரிவுரையாளர்.
முஸ்லிம்களோ சனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் ஸியா, சுன்னாப் பிளவுகள் இதற்கோர் நல்ல உதாரணம். இவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைப் பட்டுக்கிடப்பதற்குக் காரணமும் இந்தப்பிரிவினைதான். ஏப்ரலில் நடக்கவிருந்து, நிறுத்தப்பட்டுப்போன 'இஸ்லாமிய ஒருமைப்பாட்டு (ஒலிம்பிக் போன்ற) விளையாட்டுகள்' மற்றுமொரு உதாரணமாகும். இங்கு காணப்படும் குடாக்கடலுக்கு எந்தப்பெயரை நிரந்தரமாக்குவது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஈரானியர் 'பாரசீக வளைகுடா' என்கிறார்கள், அரேபியர் 'அராபிய வளைகுடா' என்கிறார்கள்.

ஏப்ரல் ஃபூல் முஸ்லிம்களின் தினம் அல்ல



ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிலர் சிலரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர்.
April Fool's Day அல்லது All Fool's Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது
முஸ்லிம்களில் சிலரும் இதை செய்து வருகின்றனர்.

ஹதீஸ் நூற்களின் வகைகள்

ஹதீஸ் நூற்கள் பல வகைகளாக திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைளான  தொகுப்புகளுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன.



ஸ{னன் தொழுகை, நோன்பு போன்ற பாடத் தலைப்புகளின் கீழ் பலரும் அறிவிக்கும் ஹதீஸ்களை சில நல்லறிஞர்கள் திரட்டியுள்ளனர். இவ்வாறு அமைந்த நூற்கள் ஸ{னன் எனப்படும்.
புகாரி, முஸ்லிம், அபூதாவூத். திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, தாரமீ, அல்முன்தகா, இப்னு  குஸைமா, இப்னுஹிப்பான், ஸ{னன் ஸயீத் பின் மன்சூர், பைஹகீ போன்ற தொகுப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஸஹிஹ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் ஆதாரப்பூர்வமானவை மட்டுமே தொகுக்கப்படுவதை  தொகுத்தவர்கள் கொள்கையாகக் கொண்டிருந்ததால் அதை ஸ{னன் என்று குறிப்பிடும் வழக்கம் இல்லை. ஸஹீஹ் என்றே குறிப்பிடுகின்றனர். இது போல் இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களும் இவ்வாறே ஸஹீஹ் என்று குறிப்பிடப்படுகின்றன.