இறை சிந்தனை + இஸ்லாமிய எழுச்சி = இஸ்லாமிய இயக்கங்கள் பாகம்


M. ஷாமில் முஹம்மட்

கணக்கு அறிவே  இல்லாத கற்காலத்திலும் 5 + 5 = 10 ஆகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை , கண்டுபிடிக்கவில்லை என்பதால் கற்காலத்தில் 5 + 5 = 12 என்றிருந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அது போல் இறைவனை காணமுடியவில்லை என்பதால் அல்லாஹ் இல்லை என்ற முடிவுக்கு மனிதனின் ஆறாவது அறிவால்
வரமுடியாது . எந்த ஒரு இயற்பியல் , வேதியல் விதியும் ஏற்படுத்தப்பட்டவை தான் . அதைப் பற்றி ஆராய்சி செய்யும் போதுதான் அதைப்பற்றி அறிந்து கொள்கிறோம். எனவே வேதியல் , இயற்பியல் வினைகள் இதற்கு முன்பு இவ்வாறு இல்லை என்று சொல்ல முடியாது, அறிந்தபிறகே இப்பொழுதுதான் கண்டுகொண்டோம் என்று சொல்லவதே சரி. அதே போன்றுதான் இறை இருப்பு சிந்தனை மனிதனின் ஆறாவது அறிவால் மறுக்கமுடியாத சிந்தனையாகிறது
ஆகவே இறைவனை ஏற்றல் இறைவனின் இருப்பை ஏற்றல் என்பது 21ஆம் நூற்றாண்டு விஞ்​ஞானமாகி விட்டது என்பதுடன் இன்றைய இஸ்லாமிய எழுச்சியின் பிரதான இயக்கியாகவும் மாறிவிட்டது
எனவேதான் மனிதனில் இறைவன் பற்றிய எழுச்சிக்கு மனித இயல்பூக்கம் , மனிதனின் பகுத்தறிவு ,என்பனவும் உலகில் இஸ்லாமிய எழுச்சிக்கு இவை இரண்டுடன் மனிதனின் உணர்வு போன்ற முன்றாவது இயற்கை காரணியும் நான்காவதாக இஸ்லாம் போதிக்கும் கோட்பாடுகளும் இன்றைய நவீன இஸ்லாமிய எழுச்சிக்கு அத்திவாரமாய் அமைந்து இருக்கிறது ஆக மனிதனின் இஸ்லாமிய எழுச்சிக்கு மனித இயல்பூக்கம் , மனிதனின் பகுத்தறிவு என்பன அத்திவாரமாக அமைய இஸ்லாமிய கோட்பாடுகள் , மனிதனின் அடக்கு முறைகளை எதிர்க்கும் உணர்வு என்பன இயக்கங்கள் நோக்கிய இஸ்லாமிய எழுச்சிக்கு வழிகாட்டுகின்றன
உலகில் மேலோங்கிவரும் நவீன இஸ்லாமிய எழுச்சியை விளங்கிகொள்ள இஸ்லாமிய இயக்கங்களை விளங்கிகொள்ள வேண்டும் . இஸ்லாமிய உலகில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் இருந்து தொடங்கிய இஸ்லாமிய எழுச்சியை வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது .
இங்கு நான் நவீன இஸ்லாமிய எழுச்சி என்று குறிபிடுவது இஸ்லாமிய அரசியல் எழுச்சியைதான் இந்த நவீன இஸ்லாமிய அரசியல் எழுச்சி 19 நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் தொடங்கிவிட்டதாக அறியலாம் . இவ்வகையில் 100 வருட கால வரலாற்றுப் பயணத்தில் கிலாபத் என்ற இலக்குடன் இத்தகைய இஸ்லாமிய இயக்கங்களை மூன்று பிரதான பிரிவுகளாக நோக்கலாம்
இதன் பொருள் 19 நூற்றாண்டிற்கு முற்பட்ட காலபகுதில் இஸ்லாமிய எழுச்சி காணப்படவில்லை என்ற பொருள் கொள்ள முடியாது 19 நூற்றாண்டிற்கு முற்பட்ட காலபகுதில் இஸ்லாமிய எழுச்சியின் அரசியல் பரிமாண முனைப்பு பெறாத  பல எழுச்சிகளை  காணமுடியும் 19 நூற்றாண்டிற்கு முற்பட காலபகுதில் இஸ்லாமிய அரசியல் எழுச்சி ஒன்றின் தேவை பெரிதாக உணர படவில்லை காரணம் 7நூற்றாண்டின் உலக இஸ்லாமிய எழுச்சியுடன் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கிலாபத் தொடர்ந்தும் 19இம் நூற்றாண்டின் -1924 ஆம் ஆண்டு வரையிலும் உலகில் பலத்துடனும் பலவீனதுடனும் தொடர்ந்தும் இருந்து வந்தது .
1924 ஆம் ஆண்டு துருகியில் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகியை பயன்படுத்தி ஐரோப்பியர் 13நூற்றாண்டுகளாக உலகில் நிலை பெற்ற இஸ்லாமிய கிலாபத்தை விழ்த்தினர் , அழித்தனர் பிரமாண்டமான சாம்ராஜ்யம் துண்டு துண்டாக உடைக்க பட்டு எல்லை இடபட்டது தேசிய வாதம் மிகவும் நுட்பமாக திட்டமிட்டு புகுத்தபட்டது தேசிய வாதத்தை பயன்படுத்தி மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மாஹ்வை பலவீன படுத்தியது , கிலாபத்தின் விழ்ச்சி உலகளாவிய உம்மாவின் பலவீனம் இஸ்லாமிய இயக்கங்கள் பற்றிய சிந்தனைக்கு வித்திட்டது மீண்டும் உலகில் கிலாபத்தை ஏற்படுத்த இஸ்லாமிய இயக்கங்களின் தேவை உலகளாவிய முஸ்லிம் உம்மாவாள் உணரபட்டது விளைவு முஸ்லிம் புத்திஜிவிகளினால் இஸ்லாமிய இயக்கங்கள் பல உருவாக்கபட்டன..
தொடரும்…

0 comments:

Post a Comment